Home » Archives by category » சினிமா (Page 55)

“இந்தியன் 2” படத்தில் எஸ்.ஜே.சூர்யா!

Comments Off on “இந்தியன் 2” படத்தில் எஸ்.ஜே.சூர்யா!

’இந்தியன் 2’ கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீசாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இறுதிகட்ட ஷூட்டிங் இப்போது நடந்துவரும் நிலையில் இதுவரை படத்தின் வில்லன் யார் என்பதை அறிவிக்கவில்லை. ஆனால் எஸ்.ஜே.சூர்யாதான் வில்லனாக நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வந்தன. இப்போது […]

Continue reading …

“ரத்தம்“ படத்தின் அப்டேட்!

Comments Off on “ரத்தம்“ படத்தின் அப்டேட்!

இயக்குனர் சி எஸ் அமுதன் “தமிழ்படம் 1” மற்றும் 2 படங்களை இயக்கி தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர். அவர் தன்னுடைய ரூட்டை மாற்றி “ரத்தம்“ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் ஆண்டனி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். முந்தைய படங்களைப் போலில்லாமல், சீரியஸான ஒரு பிரச்சனையை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியுள்ளார் சி. எஸ் அமுதன். இந்த படம் செப்டம்பர் 28ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]

Continue reading …

முரளிதரனின் ‘800’ பட டிரெயிலர்!

Comments Off on முரளிதரனின் ‘800’ பட டிரெயிலர்!

‘800’ என்ற திரைப்படம் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் வீரரான முத்தையா முரளிதரனின் பயோபிக் படமாக உருவாகி வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி முதலில் இத்திரைப்படத்தில் முரளிதரனாக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என தமிழ் அமைப்புகள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதையடுத்து விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகினார். அதையடுத்து தற்போது “ஸ்லம்டாக் மில்லியனர்” படத்தில் வில்லனாக நடித்த மதுர் மிட்டல் முரளிதரன் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் […]

Continue reading …

பிரபாஸின் “சலார்” பிஸ்னஸில் சுணக்கம்!

Comments Off on பிரபாஸின் “சலார்” பிஸ்னஸில் சுணக்கம்!

நடிகர் பிபாஸ் “பாகுபலி” திரைப்படத்திற்கு பிறகு ஹிட் கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் ரிலீசான அவரின் “ஆதிபுருஷ்” திரைப்படம் மோசமான விமர்சனங்களையும் கேலிகளையும் சந்தித்தது. ஆனால் அடுத்து பிரபாஸ் நடிக்கும் “சலார்” திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது “கே.ஜி.எப்” இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான். இந்த படத்தை “கே.ஜி.எப்” தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார். படம் செப்டம்பர் 28ம் தேதி ரிலீஸ் ஆகப் போவதாக அறிவித்திருந்த […]

Continue reading …

இளையராஜா – பாரதிராஜா மார்கழி திங்கள் அப்டேட்!

Comments Off on இளையராஜா – பாரதிராஜா மார்கழி திங்கள் அப்டேட்!

மனோஜ் பாரதிராஜா “தாஜ்மஹால்” திரைப்படத்தின் மூலம் 1999ம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமானார். பின் பல திரைப்படங்களில் நடித்தாலும் அவரால் பெரியளவில் திரையுலகில் வலம் வர முடியவில்லை. இதனால் அவர் தந்தையைப் போல இயக்குனராகும் முயற்சியில் ஈடுபட்டார். “சிவப்பு ரோஜாக்கள்” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இயக்குனராகும் கனவோடு இருந்த தன்னை தனது தந்தைதான் நடிகராக்கிவிட்டார் எனக் கூறியிருந்தார். தற்போது மனோஜ், “மார்கழி திங்கள்” திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தில் பாரதிராஜா, வினோத் கிஷன் உள்ளிட்டவர்கள் […]

Continue reading …

அமேசான் ஓடிடி தளத்தில் ‘ஜெயிலர்’!

Comments Off on அமேசான் ஓடிடி தளத்தில் ‘ஜெயிலர்’!

ஆகஸ்ட் 10ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இத்திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்தது. திரைப்படம் வரலாறு காணாத வசூலை பெற்றதையடுத்து ரஜினிகாந்த், நெல்சன் ஆகிய இருவருக்கும் சொகுசு காரை கலாநிதி மாறன் பரிசாக கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி ரஜினிகாந்த்துக்கு லாபத்தில் கிடைத்த பங்கையும் பகிர்ந்து கொண்டார் என்றும் செய்திகள் வெளியாகின. திரையரங்குகளில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘ஜெயிலர்’ திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி அமேசான் […]

Continue reading …

காமெடி நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்!

Comments Off on காமெடி நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்!

“கோலமாவு கோகிலா” திரைப்படம் நெல்சன் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம். இத்திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் ஜாக்குலின் தந்தையாக நடித்த குணச்சித்திர மற்றும் காமெடி நடிகர் ஆர்எஸ் சிவாஜி இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரபல தயாரிப்பாளர் எம்ஆர் சந்தானம் மகனும் பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் சந்தான பாரதியின் சகோதரருமான ஆர்எஸ் பாரதி காலமானார். இதையடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்த அவரது வளசரவாக்கம் வீட்டிற்கு திரையுலகினர் விரைந்து வருகின்றனர். கமலஹாசனின் பல […]

Continue reading …

நடிகை தமன்னா திருமணத்தை பற்றி ஓபன் டாக்!

Comments Off on நடிகை தமன்னா திருமணத்தை பற்றி ஓபன் டாக்!

“கேடி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தமன்னா. ஆனால் அவருக்கான கவனிப்பு என்பது “கல்லூரி” மற்றும் “அயன்” ஆகிய திரைப்படங்களின் மூலம்தான் கிடைத்தது. அதையடுத்து வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். ஆனால் ஒரு கட்டத்தில் புது நாயகிகளின் வரவுக்கு பிறகு தமன்னாவின் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. அதனால் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். சமீபத்தில் “ஜெயிலர்” திரைப்படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார். அவர் படத்தில் நடனமாடிய “காவாலா” பாடல் […]

Continue reading …

பாடலாசிரியரான பிரபல நடிகை

Comments Off on பாடலாசிரியரான பிரபல நடிகை

90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் சுகன்யா. இவர் “புது நெல்லு புது நாத்து” திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின் “சின்ன கவுண்டர்,” “இந்தியன்,” “வால்டர் வெற்றிவேல்,” “மகாநதி” உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2002ம் ஆண்டு ஸ்ரீதரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக கணவரை விவாகரத்து செய்தார். கடந்த 2019ம் ஆண்டு முதல் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இவர் சினிமாவில் அறிமுகமாகி 30 […]

Continue reading …

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் ரஜினிகாந்த்வுடன் சந்திப்பு

Comments Off on முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் ரஜினிகாந்த்வுடன் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் இன்று அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் நேரில் சந்தித்துள்ளார். அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டு, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை அதிமுகவில் இருந்து நீக்கிய சிறப்பு தீர்மானத்திற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. ஏற்கனவே அமமுக பொதுச்செயலாளர் தினகரனுடன் இணைந்து அரசியலில் பயணிக்கப் போவதாக ஓபிஎஸ் அறிவித்தார். நீதிமன்றத் தீர்ப்பினால், அவர் தினகரன் மற்றும் சசிகலாவுடன் இணைந்து அரசியலில் இணைந்து பணியாற்றுவாரா? அல்லது தினகரனைப் போல் தனிக்கட்சி […]

Continue reading …