
தோனி என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தல தோனி தொடங்கினார். இந்நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் முதல் படம் ‘எல்ஜிஎம்’ தமிழ் படம். சமீபத்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இசை வெளியீட்டு விழா நடந்த போது தோனி மற்றும் அவரது மனைவி சாக்சி சென்னைக்கு வருகை தந்திருந்தனர். ‘எல்ஜிஎம்’ திரைப்படம் வரும் ஜூலை 28ம் தேதி வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் செய்தியுடன் கூடிய போஸ்டர் வெளியாகி உள்ளது. படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா ஆகியோர் நாயகன் […]
Continue reading …
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் எந்தக் கட்சி பெரிதாக பாதிப்படையும் என்பது குறித்து கருத்துக் கணிப்பு தகவல் வெளியாகி உள்ளது. விஜய் தற்போது லியோ படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாகவுள்ளது. கடந்த ஜூன் 17ம் தேதி சென்னையில் மாணவ, மாணவிகளுக்கு கல்விவிழாவை மக்கள் இயக்கம் மூலம் நடத்தினார். இதற்கு சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினர். இது விஜய்யின் அரசியல் வருகையின் தொடக்கம் என்று கூறப்பட்டது. சமீபத்தில் காமராஜர் பிறந்த நாளில் தமிழகத்தில் […]
Continue reading …
ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கும் “ஜவான்” திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இத்திரைப்படத்தில் தமிழ் நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். அனிருத் இசையமைக்கும் முதல் பாலிவுட் படம். இந்த படத்துக்காக அனிருத் சுமார் 10 கோடி ரூபாய் அளவுக்கு சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது இந்தியளவில் ஒரு இசையமைப்பாளர் வாங்கும் அதிகபட்ச சம்பளமாகும். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியளவில் இதுவரை […]
Continue reading …
அதிவேகமாக மோட்டார் பைக் ஓட்டி அதை வீடியோவாக எடுத்து போட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் யூடியூபர் டிடிஎஃப் வாசன். அவர் வீடியோக்களில் வேகமாக பைக் ஓட்டுவது, கையைவிட்டு, ஓட்டுவது, விபத்து ஏற்படும்படி வாகனங்களை இயக்குவதாக சமீபத்தில் இவர் மீது புகார் எழுந்தது. வாசன் ஹீரோவாக அறிமுகமாகப் போகும் “மஞ்சள் வீரன்” திரைப்படத்தின் முதல் லுக் போஸ்டர் சில வாரங்களுக்கு முன் வெளியானது. படத்தை செல்வம் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பிரபல யுடியூபரான அமலா […]
Continue reading …
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபாஸின் ரசிகர்கள் “புராஜக்ட் கே” திரைப்படத்திற்காக வித்தியாசமான முயற்சி மேற்கொண்டனர். பான் இந்திய ஸ்டாராக அறியப்படும் தெலுங்கு நடிகர் பிரபாஸின் அடுத்த படம் “புராஜக்ட் கே.” மகா நடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கி வரும் “புராஜெக்ட் கே” திரைப்படத்தின் ஹீரோவாக பிரபாஸும் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனும் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் இணைந்து கமல்ஹாசன், அமிதாப் பச்சன், திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மெகா பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்த படத்தின் […]
Continue reading …
ஜேம்ஸ் காமரூன் டைட்டானிக் படத்தை இயக்கியவர். இவர் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்தையும் திரைப்படமாக எடுக்கப் போவதாக தகவல் பரவியுள்ளது. ஆனால், இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். 110 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய பிரம்மாண்ட கப்பலான டைட்டானிக் கடலுக்குள் மூழ்கியது. இக்கப்பல் மூழ்கிய ஆழ்கடலுக்குள் சென்று இதன் பாகங்களைக் காண்பது பலருக்கு திரிலிங்கான பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வந்தது. இதற்காக சமீபத்தில் ளிநீமீணீஸீநிணீtமீ என்ற நிறுவனத்தின் நீர்மூழ்கி கப்பலில் பிரிட்டனை சேர்ந்த பணக்காரர், பாகிஸ்தானை சேர்ந்த செல்வந்தர் […]
Continue reading …
கடந்த 2016ம் ஆண்டு அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான “தெறி” திரைப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விஜய் வேடத்தில் வருண் தவான் நடிக்கிறார். இத்திரைப்படத்தை அட்லியின் இணை இயக்குனர்களில் ஒருவர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் அட்லி இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக இருப்பதாகவும் கூறப்பட்டது. படத்தில் சமந்தா நடித்த கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இருப்பினும் […]
Continue reading …
“மாவீரன்” திரைப்படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ளது. ரிலீசான இத்திரைப்படம் ரிலீசாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. ஆனாலும் வசூலில் இத்திரைப்படம் சோடை போகவில்லை என தெரிகிறது. முதல்நாளில் தமிழகத்தில் மட்டும் 6.5 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ரிலீசாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் சமீபத்தைய படமான “பிரின்ஸ்” திரைப்படம் எதிர்பார்ப்போடு தெலுங்கில் ரிலீசாகி தோல்வி அடைந்தது. இப்போது “மாவீர்டு” திரைப்படம் தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ் தெலுங்கை அடுத்து சிவகார்த்திகேயன் அடுத்து […]
Continue reading …
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் மணிரத்னம் இயக்கத்தில் வெளியானதில் முதல் பாகம் அளவுக்கு இரண்டாம் பாகம் பெரிதாக வசூல் செய்யவில்லை. கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளார். “நாயகன்” திரைப்படத்துக்குப் பிறகு 35 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுகிறார்கள். படத்தில் நடிகர் சிம்பு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் கதாநாயகியாக நடிக்க திரிஷா ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் திரிஷா நடித்து […]
Continue reading …
சமீபத்தில் விஷால் நடிக்கவிருக்கும் 34வது திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது. விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்பட்டது. தற்போது இத்திரைப்படத்தின் நாயகி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியானது. இதையடுத்து இந்த படத்தின் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னாள் இந்த படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் என்று அறிவிக்கப்பட்டது. அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அதற்கு முன் இந்த […]
Continue reading …