
தமிழ்நாடு அரசிடம் சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி கோரி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மனு கொடுத்துள்ளது. வாரந்தோறும் தமிழகத்தில் பல திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளார்கள் சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி கோரி தமிழக அரசிடம் மனு அளித்துள்ளனர். அதில், தமிழ் நாட்டில் உள்ளள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு ரூ.250 ஆகவும், ஏசி திரையரங்குகளுக்கு ரூ.200 ஆகவும், Non- AC திரையரங்குகளுக்கு ரூ.120 ஆகவும் உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்க […]
Continue reading …
விஷாலின் நடிப்பில், “மார்க் ஆண்டனி” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “மார்க் ஆண்டனி”. இத்திரைப்படத்தை மினி ஸ்டூடியோஸ் சார்பாக வினோத் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தில் நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் பெரும் வரவேற்பை பெற்றது. படம் ஏற்கனவே ஜூலை 28ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. செப்டமபர் 15ம் தேதி […]
Continue reading …
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில், வெளியான படம் “விக்ரம்.” இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூலையும் குவித்தது. கமலின் சினிமா கேரியலில் முக்கியப்படமாக அமைந்தது. ஷங்கர் இயக்கத்தில், “இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தையடுத்து, அமிதாப், பிரபாஸ், தீபிகா படுகோன் நடிப்பில் “பிராஜக்ட் கே” திரைப்படத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளார். இப்படத்திற்குப் பின், கமல்ஹாசன் அடுத்து வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். படத்தை அவரின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. ஏற்கனவே வினோத் இயக்கிய […]
Continue reading …
“லஸ்ட் ஸ்டோரீஸ்” வெப் தொடர் பாலிவுட்டில் மிகவும் பிரசித்திபெற்றது. இத்தொடரில் பாலியல் உறவு குறித்த இந்திய பெண்களின் புரிதலை 4 கோணங்களில் இருந்து சொல்லும் வகையில் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. இதன் முதல் பாடம் “லஸ்ட் ஸ்டோரீஸ்” தொடரில் கியரா அத்வானி, விக்கி கௌஷல் இணைந்து நடித்திருந்தனர். தற்போது இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இத்தொடர் நாளை நெட்பிலிக்சில் வெளியாகிறது. இத்திரைப்படத்தில், மிருணாள் தாகூர், கஜோல், தமன்னா, விஜய் வர்மா ஆகியோர் நடித்துள்ளனர். அண்மையில் வெளியான இத்தொடர் நெட்பிளிக்ட்ஸில் […]
Continue reading …
நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளின் செயல்பாடு குறித்து மகிழ்ச்சி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.] தமிழகத்தில் நடிகர் விஜய்யின் அரசியல் எண்ட்ரி குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அதற்கேற்றார்போல மெல்ல மெல்ல அரசியல் நோக்கிய தனது நகர்வுகளை விஜய் எடுத்து வைக்க தொடங்கியுள்ளார். அதன் முன்னோட்டமாகதான் தொகுதி வாரியாக நல்ல மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியரை அழைத்து பரிசளிப்பு விழா நடத்தப்பட்டது. இதுதவிர விஜய்யின் பிறந்தநாள் அன்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அன்னதானம், […]
Continue reading …
அட்லி இயக்கத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் “ஜவான்” திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. படத்தில் தமிழ் நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். அவர் பாலிவுட்டில் அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும். இப்போது இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் உரிமையை டி சீரிஸ் நிறுவனம் 35 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை […]
Continue reading …
நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் “ஜெயிலர்” படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் எனும் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, சுனில், ஜாக்கி ஷ்ராஃப் என பல முக்கிய நடிகர்கள் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீசாகவுள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. “ஜெயிலர்” திரைப்படத்தில் ஓவர்சீஸ் வெளியீட்டு உரிமையை ஐங்கரன் இண்டர் நேசனல் நிறுவனம் கைப்பற்றியது. […]
Continue reading …
அஜீத்தின் ஆஸ்தான இயக்குனரானார் ஹெச் வினோத். இவர் “சதுரங்க வேட்டை” மற்றும் “தீரன்” ஆகிய படங்களை இயக்கியவர். அஜீத்தை வைத்து “நேர்கொண்ட பார்வை,” “வலிமை” மற்றும் “துணிவு” என மூன்று படங்களை இயக்கினார். இப்போது வினோத், கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் புதிய படத்துக்கான திரைக்கதை வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். படத்தின் ஷூட்டிங் குறைந்த நாட்களில் முடிய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்துக்காக கமல்ஹாசன் 45 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் விஜய் சேதுபதி முக்கிய […]
Continue reading …
யோகி பாபு, ஹன்சிகா, “மிருகம்“ ஆதி ஆகியோர் நடிப்பில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் “பாட்னர்.” படத்தை இயக்குனர் மனோஜ் தாமோதரன் இயக்குகிறார். ராயல் பார்ட்சுனா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் முக்கிய வேடங்களில் பாண்டியராஜன், ரோபோ சங்கர், விடிவி கணேஷ், ஜான் விஜய், ரவிமரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். இந்த படத்தை காமெடி கலந்த அறிவியல் புனைவு படமாக படக்குழுவினர் உருவாக்கியுள்ளனர். இந்த படத்தின் முக்கிய அறிவிப்பை இன்று மாலை 5 […]
Continue reading …
உலகளவில் பிரபல இயக்குனரான எஸ்.எஸ்.ராஜமௌலி தெலுங்கு சினிமாவில் “மகதீரா,” “நான் ஈ,” “பாகுபலி” மற்றும் “ஆர்.ஆர்.ஆர்.” என அடுத்தடுத்து சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். கடைசியாக அவர் இயக்கிய “ஆர்.ஆர்.ஆர்.” திரைப்படம் 1200 கோடி ரூபாய் வசூலித்தது. “ஆர்.ஆர்.ஆர்.” திரைப்படத்துக்கு பிறகு ராஜமௌலி இயக்கும் படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு நடிக்கவுள்ளார். இந்த படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமையும் என சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ […]
Continue reading …