
சில ஆண்டுகளுக்கு முன் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் “அறம்.” இப்படத்தை இயக்குனர் கோபி நயினார் இயக்கினார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இயக்குனர் கோபி நயினார் மீது இலங்கை சேர்ந்த பெண் தொழிலதிபர் சியாமளா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மோசடி புகார் கொடுத்துள்ளார். அப்புகாரில், “அறம்“ படத்தை இயக்கிய கோபி நயனார், புதிதாக ஜெய் நடிப்பில் “கருப்பர் நகரம்“ படத்தை இயக்கவுள்ளதாக என்னிடம் கூறினார். இதை ஒரு தயாரிப்பாளரும் உறுதிப்படுத்தினார். எனவே, […]
Continue reading …
நடிகர் விஜய் பிறந்த நாளில் 2 திரைப்படங்களின் அப்டேட்களை வெளியிடப்படப் போவதாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் “லியோ.” இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரைப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகிறது. ஜூன் 22ம் தேதி விஜய்யின் 49வது பிறந்த நாள் என்பதால் ‘லியோ’ பட […]
Continue reading …
ஆரூத்ரா கோல்டு நிறுவனம் ஏராளமான மக்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிறுவனத்தின் மீது ஏராளமான புகார்கள் வந்த நிலையில் பொருளாதார சிறப்பு பிரிவு போலீசார் ஆருத்ரா நிறுவனத்திற்கு தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடத்தியதுடன், மோசடியில் தொடர்புடைய ஹரிஷ், மைக்கெல் ராஜ் உள்ளிட்ட 13 பேரை கைது செய்ததுடன், 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய நடிகர் ஆர்.கே.சுரேஷ் துபாய்க்குத் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. […]
Continue reading …
“கஸ்டடி” திரைப்படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் உருவானது. இத்திரைப்படம் கடந்த மே 12ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்த படம் வசூல் அளவில் தோல்வி படம் என்றே கூறப்பட்டது. ‘கஸ்டடி’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ஜூன் 9ம் தேதி அதாவது வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் அமேசான் […]
Continue reading …
திருப்பதி கோவிலில் இன்று தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பிரபாஸ் தரிசனம் செய்தார். நடிகர் பிரபாஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவான “பாகுபலி 1” மற்றும் “பாகுபலி 2” ஆகிய திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார். “பாகுபலி” திரைப்படத்திற்குப் பின் அவர் நடிப்பில் உருவாகும் அனைத்து படங்களும் பான் இந்தியா படங்களாக உருவாகி வருகின்றன. அவரது சம்பளமும் அதிகரித்துள்ளது. ஆனால், “பாகுபலி” படத்திற்குப் பின் வெளியான “சாஹோ,” “ராதே ஷியாம்“ ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது “ஆதிபுரூஸ்” […]
Continue reading …
“நிஷாந்த்,” “பூமிகா,” “ஜூனுன்,” “ஸ்பர்ஷ்,” “பவானி பவை,” “ஓம்காரா,” “மஹாரதி,” “இஷ்கியா” உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நசருதீன் ஷா. விருதுகளை பற்றி பாலிவுட் சினிமாவின் மூத்த நடிகரான நசுருதீன் ஷா அவமதித்துக் கருத்து கூறியதாக ஒரு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமீபத்தில் அவர், “சினிமாவில் கதாப்பாத்திரத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் உழைப்பவர்தான் சிறந்த நடிகர், தற்போது திரைத்துறையில் இருக்கும் நடிகர்களில் ஒருவரை தேர்வு செய்து அவரை இந்த ஆண்டிற்கான சிறந்த நடிகர் என்று யாரோ ஒருவர் அறிவிப்பது எந்த […]
Continue reading …
பெரிய நடிகர்களை வைத்து படத்தை தயாரிப்பதில் லைகா நிறுவனம் தனி இடத்தை பிடித்துள்ளது. இப்போது அஜீத்தின் “விடாமுயற்சி” மற்றும் ரஜினி மற்றும் ஞானவேல் இணையும் என இரண்டு படங்கள் உள்ளன. இதில் ஞானவேல் இயக்கும் படத்துக்கான அறிவிப்பு எப்போதோ வெளியானாலும், இன்னும் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. இந்த படத்தின் கதைக்களம் பற்றி சமூகவலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதன்படி இந்த படத்தில் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக நடிப்பதாகவும், அவர் சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் […]
Continue reading …
“ஜெயிலர்” திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடித்து வருகிறார். படத்தில் அவர்தான் வில்லன் என்று கூறப்படுகிறது. இத்திரைப்படம் மட்டுமில்லாமல் தனுஷின் “கேப்டன் மில்லர்” படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான ராஜ்குமாரின் மூத்த மகனான சிவராஜ், கடந்த 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் கன்னடம் தாண்டி வெளிமொழி படங்களில் அவர் நடித்ததில்லை. இப்போது தமிழில் அவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்துள்ள நிலையில் […]
Continue reading …
காஷ்மீரில் 60 நாட்களுக்கும் மேல் “லியோ” திரைப்படத்தின் முக்கியக் காட்சிகளைக் படமாக்கினார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். சென்னையில் அடுத்த கட்ட ஷுட்டிங் தொடங்கி நடந்து வருகிறது. ஜூன் மாத இறுதியில் மொத்த ஷூட்டிங்கும் முடியும் என தெரிகிறது. அக்டோபர் 19ம் தேதி படம் ரிலீசாகிறது. “லியோ” திரைப்படத்தின் ஷூட்டிங்கே இன்னும் முடியாத நிலையில் படத்தின் வியாபாரம் ஜரூராக நடந்து வருகிறது. ரிலீஸுக்கு முன்பே இந்த படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது […]
Continue reading …
திரையரங்கிற்கு மக்கள் வருவது கடந்த வாரம் குறைந்துள்ளது. கடந்த வாரம் தமிழ் சினிமாவில் நான்கு படங்கள் ரிலீசாகின. ஆனால் எந்த படமும் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. அதில் மாஸ் ஹீரோ, மாஸ் இயக்குனர் என பெரிய பட்ஜெட்டில் ரிலீசான படம்தான் “காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்.” “விருமன்” வெற்றிக்குப் பின் இயக்குனர் முத்தையா ஆர்யாவை கதாநாயகனாக்கி இந்த படத்தை இயக்க, ஜி ஸ்டுடியோஸ் பைனான்ஸில் ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த படம் கடந்த வாரம் ரிலீசானது. மிகப்பெரிய […]
Continue reading …