Home » Archives by category » சினிமா (Page 85)

கஸ்டடி படத்தின் டிரெயிலர்!

Comments Off on கஸ்டடி படத்தின் டிரெயிலர்!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகசைதன்யா “கஸ்டடி” திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தில் நாயகியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் வில்லனாக அரவிந்த்சாமி நடித்திருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ள இப்படத்தின் […]

Continue reading …

சூப்பர்ஸ்டார் திரைப்பட அப்டேட்!

Comments Off on சூப்பர்ஸ்டார் திரைப்பட அப்டேட்!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் முக்கிய அப்டேட் குறித்து இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. கடந்த சில மாதங்களாக திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. படம் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று மாலை 6 […]

Continue reading …

’தி கேரளா ஸ்டோரி’ தடையில்லை!

Comments Off on ’தி கேரளா ஸ்டோரி’ தடையில்லை!

நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்பட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என உளவுத்துறை எச்சரித்து இருந்தது. இதையடுத்து தமிழகத்தில் இத்திரைப்படம் திரையிடப்படுமா என்ற கேள்வி எழுந்தது. “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் தியேட்டர்களுக்கு போலீசார் தீவிர பாதுகாப்பு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திரைப்படம் திரையிடப்பட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்குமே என உளவுத்துறை எச்சரித்த நிலையில் போலீசார் தியேட்டர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க […]

Continue reading …

மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்த விஜய்!

Comments Off on மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்த விஜய்!

இன்று மாலை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் நடிகர் விஜய் சந்தித்த வீடியோ வெளியாகும் என்று புஷ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் “வாரிசு” திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், “லியோ” படத்தில் நடித்து வருகிறார். விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் விலையில்லா விருந்தகத்தைச் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் விலையில்லா விருந்தகத்தை சிறப்பாகச் செயல்படுத்தி வரும் மக்கள் இயக்க நிர்வாகிகள விஜய் சந்தித்தார். இந்த வீடியோ எப்போது வெளியாகும் என்று விஜய் […]

Continue reading …

100 ஆண்டுகள் பழைய ரயில் நிலையத்தில் ஷூட்டிங்!

Comments Off on 100 ஆண்டுகள் பழைய ரயில் நிலையத்தில் ஷூட்டிங்!

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் “இந்தியன் 2” திரைப்படம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீசாகவில்லை. படப்பிடிப்புத்தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக 3 பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது இந்த படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். சமீபத்தில், இந்த படத்தின் ஷூட்டிங் தென் ஆப்பிரிக்கா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் நடந்தது. தென் ஆப்பிரிக்காவில் 100 ஆண்டுகால பழமையான ரயில் நிலையம் ஒன்றில் முக்கியமானக் […]

Continue reading …

சூர்யா படத்தின் ஓடிடி கைமாறுகிறதா?

Comments Off on சூர்யா படத்தின் ஓடிடி கைமாறுகிறதா?

நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில், தாணு தயாரிப்பில் “வாடிவாசல்” திரைப்படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் படத்துக்கான பணிகள் இப்போது தாமதமாகி வருகின்றன. அதனால் சூர்யா தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். படத்தில் சூர்யாவுக்கு நிகரான ஒரு கதாபாத்திரத்தில் இயக்குனர் அமீரை நடிக்கவைக்க வெற்றிமாறன் ஒப்பந்தம் செய்திருந்தார். படம் இப்போதைக்கு தொடங்காது, கைவிடப்பட்டு விட்டது என பல வதந்திகள் பரவிய நிலையில் “விடுதலை” படம் இந்த ஆண்டு மத்தியில் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என்று […]

Continue reading …

சிவகார்த்திகேயன் படம் பற்றி கமல்ஹாசன் அறிவிப்பு!

Comments Off on சிவகார்த்திகேயன் படம் பற்றி கமல்ஹாசன் அறிவிப்பு!

கமலஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் இசையமைப்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாகவுள்ளது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் அறிவிப்பு வெளியானது. படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் இந்த […]

Continue reading …

நடிகர் விக்ரமுக்கு எலும்பு முறிவு!

Comments Off on நடிகர் விக்ரமுக்கு எலும்பு முறிவு!

திடீரென நடிகர் விக்ரமுக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்னும் சில நாட்களுக்கு அவர் ‘தங்கலான்’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு செல்ல மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விக்ரம் “பொன்னியின் செல்வன் 2” படத்தின் புரோமோசனை முடித்துவிட்ட நேற்று முதல் ‘தங்கலான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக இருந்தது. நேற்றைய படப்பிடிப்புக்கு முன்னர் அவர் ரிகர்சல் செய்து கொண்டிருக்கும்போது திடீரென தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாகவும் இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. எனவே […]

Continue reading …

‘தி கேரளா ஸ்டோரி’ தமிழ்நாட்டில் வெளியிடதடையா?

Comments Off on ‘தி கேரளா ஸ்டோரி’ தமிழ்நாட்டில் வெளியிடதடையா?

மே 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம். இந்த படத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. சமீபத்தில் இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியானது. கேரளாவிலுள்ள அப்பாவி பெண்களை முஸ்லிமாக மாற்றி ஆப்கானிஸ்தான் அழைத்துச் சென்று ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் வலுக்கட்டாயமாக சேர்ப்பதாக படத்தின் கதை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கேரளாவை அடுத்து தமிழகத்திலும் படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது என தமிழக அரசுக்கு உளவுத்துறை […]

Continue reading …

மனோபாலா காலமானார்!

Comments Off on மனோபாலா காலமானார்!

இயக்குனரும், பிரபல நகைச்சுவை நடிகருமான மனோபாலா இன்று திடீரென காலமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமாகி கடந்த 1980களில் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் மனோபாலா. ரஜினிகாந்த் நடித்த “ஊர்க்காவலன்” உள்ளிட்ட பல திரைப்படங்களை இவர் இயக்கி உள்ளார். அதேபோல் சுமார் 1000 திரைப்படங்களில் நடித்துள்ளார். “குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்குபெற்றார். கடந்த சில நாட்களாக உடல் […]

Continue reading …