Home » Archives by category » தமிழகம்

கனமழை பெய்தாலும் எதிர்கொள்ளத் தயார் – துணை முதல்வர் உதயநிதி !

சென்னை, சேப்பாக்கத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார். சென்னையில் கனமழை பெய்தது, அமைச்சர்கள் துவங்கி, எம்.எல்.ஏ.,க்கள் கவுன்சிலர்கள் வரை களத்தில் இறங்கி, அனைத்து விதமான பாதுகாப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். இப்போது மழை லேசாகத்தான் பெய்துள்ளது. கனமழை பெய்தாலும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி. கனமழையில் கூட சென்னையில் எங்கும் தண்ணீர் […]

பொங்கல் பண்டிகை -இலவச வேட்டி, சேலைக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு!

Comments Off on பொங்கல் பண்டிகை -இலவச வேட்டி, சேலைக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு!

தமிழ்நாடு அரசு வரும் 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விலையில்லா வேட்டி, சேலை திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டுள்ளது. அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 1,77,64,476 சேலைகளும், 1,77,22,995 வேட்டிகளையும் உற்பத்தி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை 2025 பொங்கல் பண்டிகைக்கு தொடர்ந்து செயல்படுத்திடவும், குறிப்பிட்ட கால கெடுவிற்குள் உற்பத்தி செய்து வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு 2024 பொங்கல் பண்டிகைக்காக பயனாளிகளுக்கு விநியோகம் […]

Continue reading …

10, 11 மற்றும் 12 துணைத் தேர்வு மறுகூட்டல் தேதி அறிவிப்பு!

Comments Off on 10, 11 மற்றும் 12 துணைத் தேர்வு மறுகூட்டல் தேதி அறிவிப்பு!

நாளை 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான துணைத்தேர்வுகள் எழுதிய மாணவர்கள் மற்றும் மறுகூட்டல், மறுமதிப்பீடு ஆகியவற்றுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், மதிப்பெண் மாற்றம் உள்ள தனித்தேர்வர்கள் ஆகியோர்களின் மறுமதிப்பீட்டு பட்டியல் வெளியாக உள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மேற்கண்ட விவரங்களை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம், “நடைபெற்று முடிந்த ஜூன் / ஜூலை 2024, மேல்நிலை இரண்டாம் ஆண்டு (12) / மேல்நிலை முதலாம் ஆண்டு (11) / 10ம் வகுப்பு […]

Continue reading …

ஆகஸ்ட் 31 ரேஷன் கடைகள் இயங்கும்!

Comments Off on ஆகஸ்ட் 31 ரேஷன் கடைகள் இயங்கும்!

ரேஷன் கடைகளில் மாதத்தின் கடைசி நாளில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில்லை. உணவு வழங்கல் துறை ஆகஸ்ட் 31ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள் இயங்கும் என்றும் அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் ரேஷன் கடைகளில் அன்றைய தினம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளில் மாதத்தின் கடைசி பணி நாளில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்க […]

Continue reading …

வானிலை மையம் எச்சரிக்கை!

Comments Off on வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுதும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் இதுகுறித்து “இன்று முதல் 30ம் தேதி மிதமான மழை முதல் கனமழை வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். தமிழகம் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் 30ம் தேதி வரை […]

Continue reading …

முருகன் மாநாடு குறித்து வானதி சீனிவாசன் விமர்சனம்!

Comments Off on முருகன் மாநாடு குறித்து வானதி சீனிவாசன் விமர்சனம்!

முருகன் மாநாடு தமிழக அரசின் சார்பில் சமீபத்தில் நடத்தியது. இதுகுறித்து வானதி சீனிவாசன் தேர்தல் நெருங்கி வருவதால் மக்களை ஏமாற்றவே முருகன் மாநாடு நடத்தப்பட்டதாக கூறியியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சமீபத்தில் பழனியில் முருகன் மாநாடு தமிழக அரசு நடத்தியது. இம்மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. குறிப்பாக திமுகவின் கூட்டணி கட்சிகள் கூட சனாதன ஒழிப்பு கொள்கையை கைவிட்டு ஆன்மீக பாதையில் திமுக செல்வதாக விமர்சனம் செய்யப்பட்டது. வானதி சீனிவாசன் இது […]

Continue reading …

தமிழகத்தில் 2 வந்தே பாரத் ரயில்கள் துவங்கி வைக்கும் பிரதமர்!

Comments Off on தமிழகத்தில் 2 வந்தே பாரத் ரயில்கள் துவங்கி வைக்கும் பிரதமர்!

ஏற்கனவே தமிழகத்தில் வந்தே பாரத் ரயில்கள் சில இயங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட இருப்பதாகவும் இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே தமிழகத்தில் சென்னையிலிருந்து மைசூருக்கு வந்தே பாரத் ரயில், சென்னையிலிருந்து கோவைக்கு வந்தே பாரத் ரயில், சென்னையிலிருந்து விஜயவாடாவுக்கு வந்தே பாரத் ரயில், சென்னையிலிருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரயில் ஆகியவை இயங்கி வருகிறது. தற்போது மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளன. […]

Continue reading …

அதிமுகவை அழிக்க அண்ணாமலையால் முடியாது; ஜெயக்குமார்!

Comments Off on அதிமுகவை அழிக்க அண்ணாமலையால் முடியாது; ஜெயக்குமார்!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலை ஏழு ஜென்மம் எடுத்து வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என பேசியுள்ளார். பாஜக பிரபலங்கள் மற்றும் அதிமுகவுக்கும் இடையே சமீபகாலமாக வாய் சண்டை தீவிரமடைந்துள்ளது. சமீபத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசியிருந்தார். இந்த விமர்சனம் அதிமுகவினர் இடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்களிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “அதிமுக மாபெரும் இயக்கமாகும். அதை அழிக்க யாராலும் முடியாது. கருணாநிதியாலேயே […]

Continue reading …

விஜய் கட்சியை மறைமுகமாக தாக்கினரா ஆர்.எஸ்.பாரதி?

Comments Off on விஜய் கட்சியை மறைமுகமாக தாக்கினரா ஆர்.எஸ்.பாரதி?

திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி “இனிமேல் யார் கட்சி ஆரம்பித்தாலும் இரண்டு அமாவாசைக்கு மட்டுமே தாங்கும். அதற்கு மேல் தாங்காது, கட்சி ஆரம்பிப்பவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது” என்று தெரிவித்துள்ளார். ஆர்எஸ் பாரதி, “புலியை பார்த்து பூனை சூடு போட்டதை போல கட்சி ஆரம்பிப்பவர்கள் நாளைக்கே கோட்டைக்கு வந்து விடலாம் என்று நினைக்கிறார்கள், அது நடக்காது. யார் இனிமேல் புதிதாக கட்சி ஆரம்பித்தாலும் இரண்டு அமாவாசைகளுக்கு மட்டுமே தாங்கும்” என்று பேட்டியளித்துள்ளார். கடந்த […]

Continue reading …

அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமியின் குற்றச்சாட்டு!

Comments Off on அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமியின் குற்றச்சாட்டு!

அதிமுக துணை பொது செயலாளர் கே பி முனுசாமி செய்தியாளர்களை சந்தித்த போது, “தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் விலைவாசி உயர்வு, மின்கட்டணம் உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கபட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற பாலியல் சம்பவத்திற்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும். பள்ளியில் இது போன்ற சம்பவங்கள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். அதிகாரிகள் தனியார் பள்ளிகளை முறையாக ஆய்வு மேற்கொள்வதே இல்லை. கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியமே இது போன்ற சம்பவங்களுக்கு […]

Continue reading …
Page 1 of 358123Next ›Last »