
இன்று பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். அதில் பல்வேறு வரி சலுகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பே செல்போன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சில பொருள்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. செல்போன் தயார்பில் பயன்படுத்தப்படும் பேட்டரி கவர், முன்பக்க, நடுப்பக்க, பின்பக்க கவர், லென்ஸ், ஸ்குரு, சிம் சாக்கெட் உள்ளிட்ட சில பொருள்களுக்கு 15 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில் […]
Continue reading …
இன்று முதல் தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது வகைகளின் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகள் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் அரசுக்கு சொந்தமான இயங்கி வருகின்றன. இதில் பல்வேறு வகையான மதுபானங்கள் விற்கப்பட்டு வருகிறது. மதுப்பிரியர்களின் விருப்ப பானமான பிராந்தி குவார்ட்டர் ஒன்று ப்ராண்டை பொறுத்து குறைந்தது ரூ.180ல் இருந்து விற்பனையாகி வருகிறது. முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலை வைத்து டாஸ்மாக் ஊழியர்கள் விற்பனை செய்வதாக எழுந்த புகாரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சமீப […]
Continue reading …
பூண்டு வரத்து குறைந்துள்ளதால் பூண்டின் விலை உயர்ந்துள்ளது. பூண்டின் பயன்பாடு மக்களிடையே அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நாளுக்கு நாள் பூண்டின் விலை அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ பூண்டு ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனையாகி வந்தது. தற்போது அதிரடியாக விலை வேகமாக உயர்ந்து கிலோ ரூ.400 வரை உச்சம் தொட்டுள்ளது. சென்னை மார்க்கெட்டிற்கு அதிக அளவிலான பூண்டு கொள்முதல் உத்தரபிரதேசத்தில் இருந்தே நடக்கிறது. […]
Continue reading …
மர்ம நபர்கள் கத்தி முனையில் வாலிபர் ஒருவரை கடத்தி சென்ற சம்பவம் திருத்தணி அருகே உள்ள மக்களிடம் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுக்கா நத்தம் கிராமத்தில் முதுநிலை பட்டதாரி வாலிபர் வெங்கட முணி என்பவர் விவசாய வேலை செய்து வந்துள்ளார். திடீரென்று அந்த கிராமத்திற்கு சொகுசு காரில் பட்டாக்கத்திகளுடன் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், வெங்கட முனியை கத்தி முனையில் கடத்தி சென்றனர். தடுக்கச் சென்ற அவரது உறவினர்கள், நண்பர்களை […]
Continue reading …
ஈரான் நாட்டை சேர்ந்தவர் வெளிநாட்டு கரன்சிகளை மாற்றுவதாக கூறி வெளிநாட்டு பணத்தை திருடியதாக தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 26ம் தேதி மதுரை மாநகர் நேதாஜிரோடு பகுதியில் உள்ள SRS Forex என்ற நிறுவனத்தில் வெளிநாட்டு கரன்சி மாற்றுவது போல் நடித்து அங்கிருந்து வெளிநாட்டு பணம் திருடி சென்றதாக மதுரை திடீர்நகர் காவல் நிலையத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சியின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். குற்றவாளியை தேடி […]
Continue reading …
தனது அடையாள அட்டையை காணவில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கோட்டை போலீசாரிடம் புகாரளித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில், தேர்தல் அதிகாரிகள் தமிழகத்தில் மேற்கொண்டு வருகின்றனர். தன்னுடைய அடையாள அட்டையை காணவில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு என போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகார் மனுவில், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை புதுப்பிக்கத் […]
Continue reading …
ராம்சார் சர்வதேச அங்கீகாரம் அரியலூர் மாவட்டத்திலுள்ள கரைவேட்டி பறவைகள் சரணாலயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ராம்சார் அங்கீகாரம் தமிழ்நாட்டில் மேலும் 2 சதுப்பு நிலங்களுக்கு கிடைத்துள்ளது. அதன்படி, நீலகிரியிலுள்ள லாங்வுட் சோலை மற்றும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்திற்கு ராம்சார் சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ராம்சார் உடன்படிக்கையின் கீழ் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களின் பட்டியலில் கரைவெட்டி சரணாலயம் உட்பட மேலும் 5 இந்திய இடங்களும் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் மட்டும் ராம்சார் அங்கீகாரம் பெற்ற […]
Continue reading …
சமீபத்தில், பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் ஒருவர் “மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சிகிகி நடைமுறைப்படுத்தப்படும்” என்று கூறியிருந்தார். இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் சிஏஏ கால்வைக்க விடமாட்டோம்!’’ என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சிஏஏ நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒன்றிய இணையமைச்சர் ஒருவர். இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரான சிஏஏ சட்டம் ஆனதற்கு முழுமுதற்காரணமே நாடாளுமன்றத்தில் […]
Continue reading …
பாமக மற்றும் தேமுதிகவிடம் மக்களவை தேர்தலையொட்டி அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவினர் கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளனர். வருகிற ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான தேதி பிப்ரவரி கடைசி வாரம் அல்லது மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சியுடன் திமுக ஏற்கனவே பேச்சுவார்த்தையை […]
Continue reading …
வாட்ஸப் செயலி மூலம் மைவி3 ஆட்ஸ் என்ற தனியார் நிறுவனம் உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக ஒன்று சேர்த்து நேற்று கூட்டம் கூட்டினர். இதுதொடர்பாக 5 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. யூடியூபில் விளம்பரம் பார்த்தால் அதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும் நிறைய சம்பாதிக்கலாம் மைவி3 ஆட்ஸ் என்ற தனியார் நிறுவனம் கூறி பல்லாயிரக்கணகான மக்களை இதில் இணைந்து, பணமோசடி செய்ததாக கடந்த 19ம் தேதி இந்த நிறுவனம் மீது வழக்குப் பதிவு […]
Continue reading …