
விழுப்புரம் நீதிமன்றம் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வரும் 29ம் தேதி கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கடந்த 2023 ஜூன் மாதம் 16ம் தேதி தீர்ப்பளித்தது. இதனிடையே விழுப்புரம் முதன்மை அமர்வு […]
Continue reading …
பெண் ஒருவர் புதுச்சேரியிலிருந்து காரில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை கடத்திய போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்ட கலால் துறை போலீசார் அண்ணா பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது காரில் சந்தேகத்திற்கு இடமாக வந்த பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 12 பெட்டிகளில் மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட தியாகதுருகம் பகுதியை சார்ந்த விஜயா என்பவரை கலால் துறை போலீசார் காவல் […]
Continue reading …
நாளை திமுக இளைஞரணி மாநாடு-ன் 2-வது மாநில மாநாடு சேலத்தில் நடைபெறவுள்ளது. INDIA-வின் வெற்றியின் மூலம் பாசிசத்தை வீழ்த்தி பன்முகத்தன்மை காத்திட சேலத்தில் கூடிடுவோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள பெத்த நாயக்கன் பாளையத்தில் நாளை திமுக இளைஞரணி 2 வது மாநில மாநாடு நாளை பிரமாண்டமாக நடக்கிறது. இதில், பங்கேற்பதற்காக இன்று மாலை விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் ஆகியோர் சேலம் செல்கின்றனர். […]
Continue reading …
கனிமொழி எம்பி தனது சமூக வலைத்தளத்தில் அண்ணாமலை ஒரு மாநிலத்தின் அமைச்சர் குறித்தும், மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் குறித்தும் தரம் தாழ்ந்த வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தொடர்ந்து இவ்வாறு ஒருவர் பேசிவருவது அரசியலின் தரத்தையே தாழ்த்துகிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என அண்ணாமலையின் பத்திரிகையாளர் சந்திப்பு குறித்து கண்டனம் தெரிவித்திருந்தார். கனிமொழியின் கண்டன பதிவுக்கு அண்ணாமலை, “ஆண்டாண்டு காலமாக, தரம் தாழ்ந்த மொழியில் மட்டுமே பேசிப் பழகிய திமுகவினருக்கு, எங்கள் பகுதியின் வழக்கு மொழி தவறாகத் […]
Continue reading …
சமீபத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை “நியூஸ் 18 தமிழ்நாடு” தொலைக்காட்சியில் நெறியாளர் கார்த்திகை செல்வன் நேர்காணல் நடத்தினார். பாஜக தலைவர் அண்ணாமலை இந்நிகழ்ச்சி தொடர்பாக நெறியாளர் கார்த்திகை செல்வனை பற்றியும் அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் பற்றியும் கடுமையாக விமர்சித்தார். இதற்கு ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். செய்தியாளரின் கேள்விகளை கொச்சைப்படுத்தியதாக அண்ணாமலைக்கு நேற்று WJUT கடும் கண்டனம் தெரிவித்தது. இது குறித்து திமுக எம்பி கனிமொழி “அண்மையில் பாஜக தலைவர் அண்ணாமலை […]
Continue reading …
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடக்க விழாவில் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகள், கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ளார் பிரதமர் மோடி. விழாவின் தொடக்கத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை […]
Continue reading …
திமுக தலைமைக் கழகம் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி திமுக சார்பில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் அறிக்கையை தயாரிக்க குழு, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை அமைக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக பாஜக இடையே பிளவு ஏற்பட்டுள்ளதால், வருகின்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில் ஒரு புதிய கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]
Continue reading …
முன்னணி பத்திரிகை ஒன்றுக்கு சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் பேட்டியளித்தார். இந்த பேட்டி குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர் சந்திப்பு என்றால் என்ன என்பதை பாஜகவினரை பார்த்து உதயநிதி தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், “அந்த பத்திரிகையாளர் சந்திப்பு 40 நிமிடம் நடந்ததாகவும் அதில் 38 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் அனைத்து கேள்விகளும் நட்பு முறையில் கேட்கப்பட்ட கேள்வி. ஒரு கேள்வி கூட தமிழகத்தின் […]
Continue reading …
வெளிமாநில மது பாட்டில்களை சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின் பேரில், சீர்காழி மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் செல்வி, தலைமையில் தனிப்படை உதவி காவல் ஆய்வாளர் மணிகண்டகணேஷ், ராஜேந்திரன் மற்றும் போலீசார் திருமுல்லைவாசல் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை நடைபெற்று வருவதாக வந்த புகாரின் பேரில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது திருமுல்லைவாசல் அம்பேத்கர் நகர் […]
Continue reading …
சட்டப்பேரவை கூட்டம் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. ஜனவரி 23ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இக்கூட்டத்திற்கு தலைமை வகிப்பார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 23ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பிப்ரவரி மாதம் சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் அது குறித்து ஆலோசனை செய்யவும் சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரை சமூகமாக நடத்தவும் […]
Continue reading …