
ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் செயல்பட்டு வருகிறது. இக்கடையில் தினமும் ஏராளமானோர் வந்து நகைகளை வாங்கி சென்று வருகின்றனர். நேற்று வழக்கம் போல் கடையை மூடி சென்று இன்று காலை கடையை திறந்த போது நகைக்கடையில் இருந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதைக்கண்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து […]
Continue reading …
தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பின் சார்பில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் மாநாடு நடைபெறுகிறது. இதில் அதிமுகவின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து சிறப்பு அழைப்பாளராக கொள்கிறார். கிருத்துவ கூட்டமைப்பு மற்றும் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று அவிநாசி சாலையில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பதாகைகளை போலீசார் அகற்றுவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிமுக தொண்டர்கள் மற்றும் மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்த கிறிஸ்தவர்கள் கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் திரண்டு, பேனர்களை […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமைச்சர் மனோ தங்கராஜ் 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கெடு விதித்திருந்தார். அதற்கு “மன்னிப்பு கேட்க நாங்கள் சாவர்க்கார் பரம்பரை அல்ல! பெரியாரின் பேரன்கள்” என அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில், “ரபேல் வாட்சு கட்டி ஆடுமேய்ப்பவரின் கதையை தான் கூறினேன். தம்பி அண்ணாமலை அவசரப்பட்டு முன்வந்து, நான் தான் அந்த #வடநாட்டுகைக்கூலி_அண்ணாமலை என்று கூறுவது ஏனோ? குற்றமுள்ள நெஞ்சம் […]
Continue reading …
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.நடராஜ் ஐ.பி.எஸ். (ஓய்வு) மீது, முதலமைச்சர் உத்தரவுப்படி பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பது, இந்த விடியா திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கையும், சகிப்புத்தன்மையற்ற மனநிலையையுமே எடுத்துக்காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாக போலி செய்தியை வாட்ஸ் ஆப் குழுக்களில் பரப்பிய முன்னாள் டிஜிபியும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவுமான நட்ராஜ் மீது 7 பிரிவுகளின் கீழ் […]
Continue reading …
எக்ஸ் பக்கத்தில் பிரபல நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்புவுக்கு இணையவாசி ஒருவர் அவரிடம் கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த குஷ்பு “திமுக இப்படித்தான் தவறான மொழியைப் பயன்படுத்துகிறது. இதுதான் அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. ஒரு பெண்ணை அவமதிக்கவும், மன்னிக்கவும் உங்களது சேரி மொழியில் பேச முடியாது. சேரி என்ற வார்த்தைக்கு பிரெஞ்சில் அன்பு என்ற பொருள். அன்பு என்ற அர்த்தத்தில் தான் பேசினேன்” என்று விளக்கமளித்தார். இன்று சென்னை விமான நிலையம் வந்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் […]
Continue reading …
தமிழக கவர்னர் ரவி இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஒரு ஆவணம், இது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இன்று ஆளுநர் ரவி சென்னை தரமணியில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர், “இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது. மிகுந்த அழுத்தங்களுக்கு இடையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது நோக்கம் நிறைவேற உள்ளதா? என்பது […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு ஆவின் பால் பாக்கெட்டுக்கு 12 ரூபாய் கொள்ளை அடிக்கிறார்கள் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பால்வளத்துறை இன்று முதல் 4.5% உள்ள கொழுப்பு சத்துள்ள பச்சை நிற பால் விநியோகம் செய்யப்படாது என அறிவித்துள்ளது. இது குறித்து அண்ணாமலை, “ஒவ்வொரு ஆவின் பால் பாக்கெட்டுக்கும் 10 முதல் 12 ரூபாய் கொள்ளை அடிக்கின்றனர். தனியார் பால் கம்பெனிகளுக்கும் ஆவினுக்கும் மறைமுக தொடர்பு உள்ளது. தமிழ்நாடு அரசியலில் […]
Continue reading …
எலான் மஸ்க் எக்ஸ் தளத்தின் விளம்பர வருவாயை காசா மற்றும் இஸ்ரேல் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே இஸ்ரேல் மற்றும் காசாவில் போர் நடந்து வருகிறது. இப்போரால் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளனர். மருத்துவ வசதி கூட கிடைக்காமல் திண்டாடி வரும் நிலையில் எக்ஸ் தளத்தின் விளம்பர வருவாய் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேல், காசா மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்படும் என எலான் […]
Continue reading …
கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய பழங்குடியினர் இளைஞர் விழாவில் கலந்து கொண்டபோது தமிழ்நாட்டின் பெருமை குறித்து பிற மாநில பழங்குடி மக்களிடையே பேசியுள்ளார். சென்னையில் அடையாரில் உள்ள இளையோர் விடுதியில் நேரு யுவகேந்திராவின் 15வது தேசிய பழங்குடியினர் இளைஞர் விழா தொடங்கி நடந்து வருகிறது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக ஜார்கண்ட், ஒடிசா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா என பல மாநிலங்களை சேர்ந்த பழங்குடி மக்கள் வருகை புரிந்துள்ளனர். விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். அப்போது […]
Continue reading …
வானிலை ஆய்வு மையம் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றின் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுதும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஏற்கனவே ஒரு சில மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழை […]
Continue reading …