Home » Archives by category » தமிழகம் (Page 133)

8 மாவட்டங்களுக்கு கனமழை: வானிலை எச்சரிக்கை!

Comments Off on 8 மாவட்டங்களுக்கு கனமழை: வானிலை எச்சரிக்கை!

வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. சற்றுமுன் ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அப்பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிகையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதேபோல் செங்கல்பட்டு, […]

Continue reading …

துபாயில் தீபாவளி கொண்டாடிய கார்த்தி!

Comments Off on துபாயில் தீபாவளி கொண்டாடிய கார்த்தி!

‘ஜப்பான்’ திரைப்படம் கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இத்திரைப்படத்திற்காக சென்னை, கொச்சி, மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் மிக தீவிரமாக விளம்பர நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் அடுத்தகட்டமாக துபாய்க்கு வருகை தந்த கார்த்தி, தனது 25வது படத்தை சிலிகான் ஓயாசிஸ் மாலில் புரமோட் செய்தார். இந்நிகழ்ச்சியில் கார்த்தி “ஜப்பான்” திரைப்படத்தில் நகைச்சுவை கலந்த எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். மிகவும் சவால் நிறைந்ததாக இருந்தது, ரோலக்ஸ் மற்றும் ராக்கெட் ராஜா இருவரின் கலவையாக எனது கதாபாத்திரம் […]

Continue reading …

பட்டாசு வெடித்தபோது மாணவனுக்கு நேர்ந்த சோகம்!

Comments Off on பட்டாசு வெடித்தபோது மாணவனுக்கு நேர்ந்த சோகம்!

மாணவர் ஒருவர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் கை விரல்கள் துண்டானது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 8வது வார்டு பகுதியைச் சேர்ந்த ஜெயபிரபு – நதியா தம்பதி 15 வயது மகன் உசிலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதின் ஆர்வம் குழந்தைகளிடம் அதிகமாகவேதான் இருக்கும். அவ்வகையில் ஜெயபிரபுவின் மகனும் அவரிடம் பணம் வாங்கி பட்டாசு வாங்கி அது வெடிக்கிறதா என சோதனை செய்வதற்காக […]

Continue reading …

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை!

Comments Off on தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை!

திடீரென தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்னை புறநகர் பகுதிகளில் 3 இடங்களில் சோதனை செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இன்று அதிகாலை திடீரென சென்னையை அடுத்த பள்ளிக்கரணை, படப்பை, பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் […]

Continue reading …

அமைச்சர் எ.வ.வேலுவின் பேச்சு!

Comments Off on அமைச்சர் எ.வ.வேலுவின் பேச்சு!

கடந்த ஐந்து நாட்களாக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அது மட்டுமின்றி தமிழகத்திலுள்ள முன்னணி கட்டுமான நிறுவனங்களான காசா கிராண்ட் மற்றும் அப்பாசாமி நிறுவனங்களின் அலுவலகங்களில் சோதனை நடந்து வருகிறது. ஒரு பக்கம் சோதனை நடந்து கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம், “இந்த சோதனைகளுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். நாடாளுமன்ற தேர்தல் அச்சம் காரணமாக வருமான வரி சோதனை மூலம் எங்களுக்கு அச்சுறுத்தல் தரப்படுகிறது. காசா […]

Continue reading …

தென்னக ரயில்வேயின் அறிவிப்பு!

Comments Off on தென்னக ரயில்வேயின் அறிவிப்பு!

கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து தீபாவளியை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. சிறப்பு ரயில்களின் விவரங்கள் பின்வருமாறு, நவம்பர் 9ம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில், நவம்பர் 10, 17, 24 ஆகிய மூன்று நாட்கள் தாம்பரத்தில் இருந்து மங்களூருக்கு சிறப்பு ரயில், நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு 7, 14, 21 ஆகிய மூன்று நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. […]

Continue reading …

அறநிலையத்துறையை கலைக்க முடியுமா? செல்லூர் ராஜு கேள்வி?

Comments Off on அறநிலையத்துறையை கலைக்க முடியுமா? செல்லூர் ராஜு கேள்வி?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் இந்து கோயில்களுக்கு முன் உள்ள பெரியார் சிலை அனைத்தும் அகற்றப்படும். இந்து அறநிலையத்துறை கலைக்கப்படும்” என்று கூறியதற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார். இதுகுறித்து செல்லூர் ராஜூ, “அண்ணாமலை சொன்னதற்காக அறநிலைத்துறை கலைக்க முடியாது, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார். அறநிலைத்துறை தொடர்ந்து செயல்பட வேண்டும், பெரிய கோயில்களின் வருவாயில் தான் சிறிய கோயில்கள் இயங்கி வருகிறது” என்று கூறினார். அதேபோல் […]

Continue reading …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு!

Comments Off on முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் ஓய்வெடுக்க மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். நேற்று முதல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறி தென்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதும் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சில நாட்கள் அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுக்க வாய்ப்பிருப்பதாகவும் அவருடைய முதலமைச்சர் பதவியை உதயநிதி அல்லது வேறு ஒருவருக்கு மாற்ற வாய்ப்பிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. […]

Continue reading …

மின்கசிவால் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய மாணவிகள்!

Comments Off on மின்கசிவால் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய மாணவிகள்!

மாணவிகள் விடுதியில் மின் கம்பத்தில் பற்றிய தீவிபத்தால் 4 மாணவிகள் மயக்கமடைந்தனர். இதனால் நள்ளிரவில் மாணவிகள் விடுதியை விட்டு வெளியேறினர். வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்தது. மதுரை மாவட்டம் முழுதும் கனமழை பெய்து வந்தது. மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் இயங்கி வரும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் பெய்த மழையின் போது பல்கலைக்கழக பெண்கள் விடுதி அருகே இருந்த மின் மாற்றியில் ஏற்பட்ட திடீர் தீ […]

Continue reading …

கால்வாயில் 8 மாத பெண் சிசு சடலம்!

Comments Off on கால்வாயில் 8 மாத பெண் சிசு சடலம்!

நாள்தோறும் ஏராளமான கர்ப்பிணி தாய்மார்கள் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை தாய் சேய் மகப்பேறு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மகப்பேறு நடைபெறுகிறது. இங்கு குழந்தைகளுடன் வரும் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நுழைவு வாயில் முன்பாக இருந்து சாலையோர கால்வாயில் இன்று காலை பெண் குழந்தை துணியில் சுற்றிய நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அரசு மருத்துவமனை காவல்நிலைய காவல்துறையினர் நேரில்வந்து கால்வாயில் கிடந்த பெண் […]

Continue reading …