
முத்தையன் திருச்சி மாவட்டம் தொட்டியம் காவல் நிலைய காவல் நிலைய ஆய்வாளராக உள்ளார். அவருக்கு தொட்டியமருகே உள்ள செவந்திபட்டியிலிருந்து நீலியாம்பட்டி செல்லும் வழியிலுள்ள சாலப்பட்டி மலையடிவாரத்தில் துப்பாக்கியுடன் ஒரு நபர் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. முத்தையன் தலைமையில் காவலர்கள் அப்பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு மரங்களுக்கு இடையே ஒருவர் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருப்பதை கண்டறிந்து அவரிடம் காவலர்கள் நெருங்கி சென்ற போது அந்த நபர், யாரும் கிட்டே வராதீர்கள், வந்தால் சுட்டு விடுவேன் அல்லது பாம் […]
Continue reading …
கர்நாடக அரசுக்கு தமிழ்நாட்டிற்கு 2600 கன அடி நீரை உடனடியாக திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று டில்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் முடிவில் தமிழகத்திற்கு உடனடியாக 2600 கன அடி நீரை நவம்பர் 23ம் தேதி வரை திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக […]
Continue reading …
வருமானவரித்துறையினர் இன்று அதிகாலை முதல் அமைச்சர் ஏ.வ.வேலு வீடு மற்றும் அலுவலகம் ஆகியவற்றில் சோதனை செய்து வருகின்றனர். அமைச்சரின் வீடு மட்டுமின்றி இன்னும் ஒரு சில இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை ராமநாதபுரம் பார்சன் குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும், அமைச்சர் எ.வ. வேலுவின் உறவினர் மீனா ஜெயக்குமார் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும், மீனா ஜெயக்குமாரின் மகன் ஸ்ரீராம் இல்லத்திலும் சோதனை […]
Continue reading …
பாஜக தலைவர் அண்ணாமலை “தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி நடக்கிறதா அல்லது சமூக விரோதிகளுக்கான ஆட்சி நடக்கிறதா என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்” என கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை சமூவலைதளத்தில், “சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில், மணல் கொள்ளையைத் தடுக்கச் சென்ற கிராம நிர்வாக அலுவலர் மீது, மணல் கொள்ளையர்கள் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர். அதே போல, வேலூர், பொன்னையாற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை வீடியோ எடுத்த, முன்னாள் ராணுவ வீரர் உமாபதியை, சமூக விரோதிகள் […]
Continue reading …
நெல்லைக்கு தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயில் விடப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து நெல்லைக்கிடையே நவம்பர் 8, நவம்பர் 15 மற்றும் நவம்பர் 22 ஆகிய மூன்று நாட்களில் சென்னை சென்ட்ரலிலிருந்து இரவு 11:15 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும் என்றும் இந்த ரயில் மறுநாள் காலை 11.45க்கு நெல்லை சென்றடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மறுமுனையில் நெல்லையிலிருந்து சென்னை சென்ட்ரல் இடையே வரை நவம்பர் 9, […]
Continue reading …
யூனிஃபார் நிறுவனத்தின் சிஇஓ உமேஷ் இந்தியாவின் ஏஐ மையமாக விரைவில் சென்னை உருவாகும் என்று கூறியுள்ளார். இன்று ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி பூங்காவில் புத்தாக்க மையத்தை உமேஷ் திறந்து வைத்து அவர் பேசிய போது, “மென்பொருள் தயாரிப்பில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதை போலவே விரைவில் ஏஐ என்ற செயற்கை நுண்ணறிவிலும் இந்தியாவின் மையமாக சென்னை உருவெடுக்கும் என்று தெரிவித்தார். ஏஐ என்ற செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி உலகம் முழுதும் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. […]
Continue reading …
செங்கல்பட்டு நீதிமன்றம் அமர்பிரசாத் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. அமர்பிரசாத் ரெட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடு அருகே கொடி வைக்க முயற்சித்தபோது ஏற்பட்ட பிரச்சனையில் கைது செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி தமிழகத்தில் செஸ் போட்டி நடந்த போது போஸ்டரில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஒட்டியது குறித்து வழக்கிலும், தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அண்ணாமலை நடைப்பயணத்தின்போது, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. […]
Continue reading …
இன்று தூத்துக்குடியில் வெட்டிக் கொல்லப்பட்ட காதல் தம்பதியின் உடல்கள் தகனம் செய்யப்பட்டது கடந்த 3 நாட்களுக்கு முன் தூத்துக்குடி மாவட்டத்தில் முருகேசன் நகரில் காதல் திருமணம் செய்த மாரிச் செல்வம் (24), கார்த்திகா (20) ஆகிய இருவரும் நேற்று வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். காதல் திருமணம் செய்துகொண்ட இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், மாரிச் செல்வம் பொருளாதாரத்தில் பின்தங்கியவர் என்பதால், கார்த்திகாவின் தந்தை உள்ளிட்ட 6 பேர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி […]
Continue reading …
ஆவின் நிர்வாகம் 3 பால் வகைகளை சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. ஆவின் நிறுவனம் டிலைட், சமன்படுத்தப்பட்ட மற்றும் நிறை கொழுப்பு பால் வகைகள் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 3.5% கொழுப்பும், 8.5% இதர சத்துக்களும் கொண்ட ஊதா நிற பாக்கெட்டுகள், 3% கொழுப்பும், 8.5% இதர சத்துக்களும் கொண்ட இளஞ்சிவப்பு நிற பால் பாக்கெட்டுகள் மற்றும் 6% கொழுப்பும், 9% இதர சத்துக்களும் கொண்டிருக்கும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுக்கள் என 3 வகை பால் […]
Continue reading …
கடந்த செப்டம்பர் மாதம் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இம்மாதம் 12ம் தேதி தீபாவளி பண்டிகை வரவிருப்பதை அடுத்து முன்கூட்டியே பயனாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரவு வைக்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாகவும் இதுகுறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தீபாவளி தினமான 12ம் தேதிக்கு முன்பே பயனாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரவு […]
Continue reading …