
வாரத்தில் 5 நாட்கள் சேலம் வழியாக, கொச்சி மற்றும் பெங்களூருவுக்கு விமானங்கள் இயக்கப்படும் என்ற அறிவிப்பு சேலம் பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம்- மற்றும் சென்னை இடையே விமானம் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக, கடந்த 2021-ம் ஆண்டு விமான சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக, சேலத்தில் விமான சேவை நடைபெறவில்லை. மீண்டும் சேலத்திலிருந்து விமானம் இயக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.அலையன்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பெங்களூரு மற்றும் சேலம் கொச்சி வழித்தடத்தில் விமானம் […]
Continue reading …
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் “போட்டியில் ஜெயிப்பதற்காக மைதானத்தில் இறைவனை வேண்டுவது தப்பில்லை என்றால் ஜெய்ஸ்ரீராம் முழக்கம் எழுப்புவதும் தப்பில்லை” என தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியில் ஜெய் ஸ்ரீ ராம் என சில ரசிகர்கள் கோஷமிட்டது பெரும் சர்ச்சையானது. ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்திற்கு அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் “போட்டியில் ஜெயிக்க இறைவனை […]
Continue reading …
தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வருகிறார் என தகவல் வெளியாகிறது. கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றார். சென்னையை அடுத்த உத்தண்டியில் உள்ள கடல்சார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தமிழ்நாடு வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
Continue reading …
காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்தியா என்ற பெயரில் அடுத்தாண்டு நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டுள்ளன. பாஜக தலைமையில் சில கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளன. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இக்கூட்டணியிலிருந்து கருத்துவேறுபாடுகள் காரணமாக விலகியது. சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எழுதிய கடிதத்தில், ‘பாஜகவுக்கு நன்றி மீண்டும் வரவேண்டாம்’ என்று குறிப்பிட்டிருந்தார். இது சமூகவலைதளங்களில் ஹேஸ்டேக்காக வைரலானது. தேர்தலுக்கு தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அதிமுக தலைமை […]
Continue reading …
இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்ற ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக இன்று கரூர் திண்டுக்கல் உள்பட ஒரு சில மாவட்டங்களில் கன மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. […]
Continue reading …
உடல் நலக்குறைவால் அண்ணாமலையின் பாதயாத்திரை ஒத்திவைக்கப்பட்டது. இன்று மீண்டும் தொடங்குவதாகவும், அண்ணாமலையின் 3-ம் கட்ட யாத்திரையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்’’ பாதயாத்திரை கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரத்தில் தொடங்கி வைத்த இந்த பாதயாத்திரை வெற்றிகரமாக 2 கட்டம் முடிவடைந்தது. ராமேஸ்வரம் முதல் சென்னை வரை நடைபெறும் இந்த பாதயாத்திரை பாஜகவிற்கு பெரும் […]
Continue reading …
இஸ்ரோ தலைவர் சோம்நாத் தமிழகத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் விரைவில் ஏவுதளம் அமைக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் கூறினார். தமிழ்நாடு வந்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் 2 நாள் பயணமாக வந்துள்ளார். ராமேஸ்வரத்தில் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 92-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நேற்று கலந்து கொண்டார். இதையடுத்து அவர் இன்று செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் வீட்டிற்கு சென்று அவருக்கு நேரில் பாராட்டு தெரிவித்தார். தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய சோம்நாத், பின் செய்தியாளர்கள் சந்திப்பில், “முதலமைச்சரை […]
Continue reading …
மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருச்செங்கோட்டில் குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் அரசு மருத்துவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து மா.சுப்பிரமணியன் பேட்டியில், “குழந்தை விற்பனையில் அரசு மருத்துவர் அனுராதா உடந்தையாக இருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுநீரக விற்பனையிலும் ஈடுபட்டது குறித்து தெரியவந்துள்ளதால் அது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. குற்றம் உறுதி செய்யப்பட்டால் மருத்துவர் அனுராதா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு என்ற பகுதியில் விசைத்தறி தொழிலாளி தம்பதிக்கு கடந்த […]
Continue reading …
காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்தியா என்ற பெயரில் அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி கொண்டுள்ளது. பாஜக தலைமையில் சில கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளன. இக்கூட்டணியில் இருந்து கருத்துவேறுபாடுகள் காரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக விலகியது. தேர்தலின் போதோ, தேர்தலுக்குப் பின்னரோ அவர் பாஜகவை எதிர்த்து நிற்பார் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஏற்படவில்லை என்று அதிமுக முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் “பாஜக […]
Continue reading …
வகுப்பறையில் மழை நீர் ஒழுகுவதை அடுத்து மாணவர்கள் குடை பிடித்து கொண்டே வகுப்பறையில் அமர்ந்திருந்த காட்சியின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம் பெரும்பாலை தொடக்கப்பள்ளியில் உள்ள வகுப்பறை ஒன்றில் மழை நீர் ஒழுகியது. இதனை அடுத்து சாப்பிடும் தட்டு, குடை ஆகியவற்றை பிடித்தபடியே வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்துள்ளனர். மேலும் இந்த பள்ளியின் மற்ற வகுப்பறைகளும் மிகவும் மோசமாக உள்ளதாகவும் பலமுறை முறையிட்டும் மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்த பள்ளியில் படிக்கும் […]
Continue reading …