Home » Archives by category » தமிழகம் (Page 144)

இ-சேவை மையங்களிலும் பணம் எடுக்கலாம்!

Comments Off on இ-சேவை மையங்களிலும் பணம் எடுக்கலாம்!

இனி அரசு பொது இ-சேவை மையங்களிலும் ஏடிஎம் மையங்களில் பணம் பெறுவது போல பணம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு பொது இ-சேவை மையம் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களில் அரசு அலுவலக பகுதிகளிலும் செயல்பட்டு வருகிறது. இந்த இ-சேவை மையங்கள் மூலமாக அரசு சார்ந்த பல சான்றிதழ்கள், சரிபார்ப்புகளை மக்கள் மேற்கொள்கின்றனர். ஒரு விவீஸீவீ பிuதீ ஆக செயல்படும் இந்த இ-சேவை மையங்களில் பணம் எடுக்கும் வசதியையும் அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வங்கி […]

Continue reading …

பேருந்தை தள்ள மாணவிகளை பயன்படுத்திய ஓட்டுநர், நடத்துனர் சஸ்பெண்ட்!

Comments Off on பேருந்தை தள்ள மாணவிகளை பயன்படுத்திய ஓட்டுநர், நடத்துனர் சஸ்பெண்ட்!

கல்லூரி மாணவிகளை பயன்படுத்தி பழுதாகி நின்ற பேருந்தை தள்ளிய வீடியோ இணையதளத்தில் வைரலானது. அப்பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உள்பட நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. நாகர்கோவிலில் அரசு பேருந்தில் ஏராளமான கல்லூரி மாணவிகளும் பயணம் செய்தனர். திடீரென அந்த பேருந்து பழுதாகி நின்று விட்டது. இதனை அடுத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கல்லூரி மாணவிகளை இறங்கி தள்ள பயன்படுத்தியதாக தெரிகிறது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து போக்குவரத்து துறையின் […]

Continue reading …

காரைக்குடியில் உணவகம் மூடல்

Comments Off on காரைக்குடியில் உணவகம் மூடல்

  உணவகத்தில் பிரிட்ஜில், பழைய நண்டு கிரேவி, மட்டன் கிரேவிகள் இருந்த நிலையில், அவற்றை அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர். உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி ஓட்டல்களில் சிலவற்றில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிப்பதை பற்றி நேரடியாக ஆய்வில் ஈடுபட்டு, இதுபற்றி தகவல் வெளியிட்டு வருகிறார்கள். சமீபத்தில் பிரபல ஓட்டலில் சாம்பாரில் பேப்பர் இருந்தது பற்றிய புகைப்படம் வைரலானது. காரைக்குடியில் பழைய உணவுப் பொருட்களை பிரிட்ஜில் வைத்து விற்பனை செய்த உணவகம் மூடப்பட்டுள்ளது. காரைக்குடியில், திறந்தவெளி சாக்கடை அருகே […]

Continue reading …

மயிலாடுதுறை சேலம் ரயில் சேவை தொடக்கம்!

Comments Off on மயிலாடுதுறை சேலம் ரயில் சேவை தொடக்கம்!

புதிதாக மயிலாடுதுறையிலிருந்து சேலம் இடையே ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வை பயணிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினார். மயிலாடுதுறையிலிருந்து சேலம் இடையே ரயில் போக்குவரத்து அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது இந்த புதிய நேரடி ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறையிலிருந்து திருச்சி, திருச்சியிலிருந்து கரூர், கரூரிலிருந்து -சேலம் ஆகிய மூன்று ரயில்களை ஒன்றிணைத்து தற்போது மயிலாடுதுறையிலிருந்து சேலம் ரயிலாக இயக்க ரயில்வே வாரியம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ரயில் தினசரி இயக்கப்படும். […]

Continue reading …

தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி!

Comments Off on தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி!

திமுக அரசுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெரும் விபத்து ஏற்பட்டால்தான் தமிழக அரசுக்கு முழிப்பு வருமா? என கேள்வி எழுப்பியுள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: பண்ருட்டி சன்னியாசிபேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சமையல் கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்திருக்கிறது. இவ்விபத்தில் சத்துணவு பெண் அமைப்பாளர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுதும் சிதிலமடைந்து இருக்கும் பத்தாயிரத்துக்கும் அதிகமான பள்ளிக் கட்டிடங்களை இடித்து, புதிய கட்டிடங்கள் கட்டப் போவதாக அறிவித்த திமுக, அதன் பிறகு அது […]

Continue reading …

தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியா?

Comments Off on தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியா?

பாஜகவின் கேபி ராமலிங்கம் தமிழகத்தில் பிப்ரவரி மாதம் முதல் கவர்னர் ஆட்சி அமலுக்கு வந்துவிடும் என பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக மற்றும் அதிமுகவின் தலைவர்கள் ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் என கூறி வருகின்றனர். சேலம் அருகே ஓமலூரில் பாஜக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தமிழகத்தில் வரும் பிப்ரவரி மாதம் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துவிடும் […]

Continue reading …

முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்!

Comments Off on முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்று 6 ஆண்டுகள் ஆனதையடுத்து தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: “திமுக எனும் பேரியக்கம் உண்மையான ஜனநாயக சக்திகளுடன் இணைந்து பயணிக்கின்ற இயக்கம். மக்கள் நலனுக்கு ஆதரவானவர்கள் யார், மக்களின் எதிரிகள் யார் என்று அடையாளம் கண்டு செயல்படுகின்ற இயக்கம். அந்த வகையில்தான் 2019-ம் ஆண்டு அமைந்த கொள்கைக் கூட்டணி அடுத்தடுத்த தேர்தல்களிலும் உறுதியாகத் தொடர்வதுடன், ஒவ்வொரு தேர்தல் களத்திலும் வெற்றியும் தொடர்ந்து வருகிறது. அதுபோல, திமுகவினரும் […]

Continue reading …

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உத்தரவு

Comments Off on முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உத்தரவு

நீதிமன்றம்அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும் என உத்தரவிட்டுள்ளது. ஓபிஎஸ் உட்பட அவரது அணியினர் அதிமுக கொடி மற்றும் கரையை பயன்படுத்தக்கூடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக பொது குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க கூறி ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது செல்லும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அதிமுக கொடி மற்றும் கரை வேட்டியை ஓபிஎஸ் அணியினர் பயன்படுத்தக்கூடாது என்று […]

Continue reading …

செந்தில் பாலாஜிக்கு காவல் நீட்டிப்பு!

Comments Off on செந்தில் பாலாஜிக்கு காவல் நீட்டிப்பு!

சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்ட காவல் ஆகஸ்ட் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவலை நீடித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்பி எம்எல்ஏக்களக்கான சிறப்பு நீதிமன்றத்தில் காணொளி மூலம் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் செந்தில் பாலாஜியின் காவல் ஆகஸ்ட் 28ம் தேதி […]

Continue reading …

ஓபிஎஸ்-ஐ நீக்கியது செல்லும்; உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Comments Off on ஓபிஎஸ்-ஐ நீக்கியது செல்லும்; உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை உயர் நீதிமன்றம் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு ஜூலை 11ம் தேதி அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியில் ஒற்றைத் தலைமை கொண்டுவருவது உள்ளிட்ட தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. இத்தீர்மானத்தை எதிர்த்து, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிபை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், எம்.எல்.ஏ மனோஜ் பாண்டடியன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை இன்று […]

Continue reading …