Home » Archives by category » தமிழகம் (Page 146)

உரிமைத் தொகை திட்டத்திற்கு முகாம்கள் நிறைவு!

Comments Off on உரிமைத் தொகை திட்டத்திற்கு முகாம்கள் நிறைவு!

தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெற 1.50 கோடிக்கும் மேலானோர் விண்ணப்பங்களை தந்துள்ளதாகவும், மகளிர் உரிமைத் தொகை திட்ட பதிவுக்கான சிறப்பு முகாம்கள் நேற்றுடன் நிறைவடைந்ததாகவும் அறிவித்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக மீண்டும் முகாம் அமைக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 2 கட்டங்களாக நடந்த முகாமில் ஏறத்தாழ 1 கோடியே 55 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் […]

Continue reading …

சைலேந்திரபாபு பதவியை ஆளுனர் நிறுத்திவைப்பு!

Comments Off on சைலேந்திரபாபு பதவியை ஆளுனர் நிறுத்திவைப்பு!

ஆளுனர் தமிழக அரசு டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயரை பரிந்துரை செய்ததை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக அரசு டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி மற்றும் 10 உறுப்பினர் பதவிகளுக்கும் பரிந்துரை பட்டியலை ஆளுனருக்கு அனுப்பியது. ஆனால் தமிழக அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காமல் ஒரு மாதமாக ஆளுநர் நிறுத்திவைத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு பதிலளித்த பிறகும் ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பணி நியமனங்களை விரைந்து மேற்கொள்ள டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் […]

Continue reading …

ஜியோவின் அசத்தல் ஆஃபர்!

Comments Off on ஜியோவின் அசத்தல் ஆஃபர்!

ஜியோ நிறுவனம் இந்திய தொலைதொடர்பில் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. தனது ரீசார்ஜ் பேக்குகளில் நெட்ப்ளிக்ஸை இலவசமாக வழங்குகிறது. ஜியோ நிறுவனம் இந்திய தொலைதொடர்பு நிறுவனங்களில் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனங்களில் ஒன்று. அவ்வபோது வாடிக்கையாளர்களை என்கேஜ் செய்யும் விதமாக ஜியோ நிறுவனம் பல்வேறு ஸ்பெஷல் பேக்குகளையும், சிறப்பு சலுகைகளையும் வழங்கி வருகிறது. தற்போது ஜியோ தனது ரீசார்ஜ் திட்டங்களுடன் இலவசமாக நெட்ப்ளிக்ஸ் சேவையை வழங்குகிறது. அதன்படி ரூ.1099 மற்றும் ரூ.1,499 ஆகிய இரண்டு பேக்குகளை அறிமுகம் செய்துள்ளது. […]

Continue reading …

அதிமுக மாநாட்டில் ரூ.100, ரூ.500 விநியோகமா?

Comments Off on அதிமுக மாநாட்டில் ரூ.100, ரூ.500 விநியோகமா?

நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மதுரையில் அதிமுக மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. மாநாட்டில், 51 அடி உயர கம்பத்தில் அதிமுக கொடியை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றி வைத்தார். பெருமளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இம்மாநாட்டிற்கு 3 லட்சம் அதிமுக தொண்டர்கள் வருகை தந்திருந்ததாக தகவல் வெளியாகிறது. மாநாட்டிற்கு முன்பு, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ரஜினி ரசிகர்களை மதுரை மாநாட்டிற்கு வரவழைக்க, “ஜெயிலர்” திரைப்பட டிக்கெட்டிகள் இலவசமாக வழங்கியிருந்தார். இது பரபரப்பாக பேசப்பட்டது. மதுரை அதிமுக […]

Continue reading …

50 அடி பள்ளத்தில் விழுந்த வாலிபர்!

Comments Off on 50 அடி பள்ளத்தில் விழுந்த வாலிபர்!

22 வயது வாலிபர் அருவியில் குளித்து கொண்டே செல்பி எடுத்த போது 50 அடி பள்ளத்தில் விழுந்து உயிருக்காக போராடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. செல்பி எடுக்கும் மோகத்தால் எத்தனை ஆபத்துகள் வந்தாலும் மக்களுக்கு விழிப்புணர்வில்லை. ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்க கூடாது என ஏற்கனவே பலமுறை அறிவுத்தப்பட்டும், ஆபத்தை கண்டு கொள்ளாமல் பல இளைஞர்கள் செல்பி எடுத்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் தடை செய்யப்பட்ட மாசிலா […]

Continue reading …

இளம்பெண்ணை கண்காணித்தவர் கைது!

Comments Off on இளம்பெண்ணை கண்காணித்தவர் கைது!

கோவையை சேர்ந்த துப்பறியும் உரிமையாளர் இரண்டு பேர் இளம் பெண்ணை தொடர்ந்து கண்காணித்து பின் தொடர்ந்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை செய்தபோது அப்பெண்ணின் கணவரே இளம் பெண்ணின் மீது சந்தேகப்பட்டு துப்பறிய செய்ததாக தெரியவந்துள்ளது. துப்பறியும் நிறுவனங்கள் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் தற்போது வளர்ந்து வருகிறது. திருமணத்திற்கு பெண் பார்க்கும் போது திருமணம் செய்ய போகும் பெண்ணை கண்காணிப்பது, திருமணம் செய்யப் போகும் மாப்பிள்ளையை கண்காணிப்பது உள்ளிட்டவற்றை துப்பறியும் நிபுணர்கள் செய்து தருவார்கள். அந்த […]

Continue reading …

மதுரை நீட் எதிர்ப்பு போராட்டம் தேதி மாற்றம்!

Comments Off on மதுரை நீட் எதிர்ப்பு போராட்டம் தேதி மாற்றம்!

வரும் 20ம் தேதி திமுக இளைஞரணி தரப்பிலிருந்து தமிழகம் முழுதும் நீட் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது. மதுரையில் மட்டும் இப்போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு காரணமாக சமீபத்தில் மாணவன் மற்றும் அவருடைய தந்தை இறந்ததையடுத்து நீட் எதிர்ப்பு போராட்டம் நடத்தப் போவதாக திமுக இளைஞரணி மாணவரணி மருத்துவர் அணி அறிவித்தது. அதே 20ம் தேதி அதிமுக மாநாடு மதுரையில் நடைபெற உள்ளதால் அதிமுக இதற்கு கண்டனம் தெரிவித்தது. பிரதான எதிர்க்கட்சி மாநாடு நடத்துவதால் ஜனநாயகத்தை கருத்தில் […]

Continue reading …

இடுக்கியில் முழு அடைப்பு போராட்டம்

Comments Off on இடுக்கியில் முழு அடைப்பு போராட்டம்

கேரள மாநிலம் செல்லும் தமிழக வாகனங்கள் தேனியில் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கேரளாவிலுள்ள இடுக்கியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதன் காரணமாக தமிழகத்திலிருந்து செல்லும் வாகனங்கள் கேரள எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழக வாகனங்கள் தேனி எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இடுக்கி மாவட்டத்திற்கு ஏற்றப்படும் தமிழக அரசு பேருந்துகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் சபரிமலை கோவிலுக்கு செல்லும் ஐயப்பன் வாகனங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன […]

Continue reading …

காசு காலியானதால் தற்கொலை செய்த குடும்பம்!

Comments Off on காசு காலியானதால் தற்கொலை செய்த குடும்பம்!

வாழ்நாள் முழுவதும் வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்காமல் கையில் இருந்த காசு காலியானதும் ஒரு குடும்பம் தற்கொலை செய்து கொண்டுள்ளது. மதுரை சேர்ந்த பாண்டியன் சுகாதாரத்துறை அதிகாரியாக வேலை செய்தார். இவருக்கு வாசுகி என்ற மனைவியும் உமாதேவி, கோதண்டபாணி ஆகிய குழந்தைகளும் இருந்தனர். பாண்டியன் தனது மனைவி வாசுகியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். கணவர் பிரிந்தவுடன் வாசுகி தனது மகள் மகனுடன் தனியே வசித்து வந்தார். கணவன் பிரிவால் கடும் மன உளைச்சலில் இருந்த […]

Continue reading …

அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி அமலாக்கத்துறை குற்றச்சாட்டு!

Comments Off on அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி அமலாக்கத்துறை குற்றச்சாட்டு!

அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர் செந்தில் பாலாஜி மீது போக்குவரத்து துறையில் லஞ்சம் வாங்கியதாக வழக்கு பதிவு செய்து சமீபத்தில் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் போக்குவரத்து துறையில் பணி அமத்துவதற்காக லஞ்சம் பெற்ற விவகாரத்தில் கூட்டுச்சதி நடந்துள்ளது என்றும் நாமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளது. விசாரணையின் […]

Continue reading …