Home » Archives by category » தமிழகம் (Page 202)

உயிரிழந்த கபடி வீரருக்கு நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்!

Comments Off on உயிரிழந்த கபடி வீரருக்கு நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கபடி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பில், “குளித்தலை வட்டம் சத்தியமங்கலம் கிராமம் கணக்குப்பிள்ளையூர் பகுதியில் நடந்த கபடி போட்டியில் கலந்து கொண்ட மாணிக்கம் என்ற 26 வயது நபர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்துள்ளார். போட்டியில் வெற்றி பெற்ற பிறகு நெஞ்சுவலி மிகுதியாக இருந்ததால் அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அவரது […]

Continue reading …

செல்லூர் ராஜூ கமல் பிரச்சாரத்தை பற்றி கருத்து!

Comments Off on செல்லூர் ராஜூ கமல் பிரச்சாரத்தை பற்றி கருத்து!

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நடிகர்களுக்கு கூட்டம் கூடும், ஆனால் ஒட்டு விழாது என்று கமலின் பிரச்சாரத்தை பற்றி கருத்து கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக நேற்று நடிகர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்து வருகிறார். நடிகர்கள் பிரச்சாரத்துக்கு வந்தால் அவரை பார்க்க கூட்டம் கூடும், ஆனால் அவர்கள் பேசுவதை யாரும் கேட்க மாட்டார்கள், “முந்தானை முடிச்சு” திரைப்படத்தில் வரும் சிரிப்பு நடிகர் தவக்களை கூட்டிக்கொண்டு வந்து ஓட்டு போட்டு கேட்டபோது […]

Continue reading …

தமிழ்நாட்டின் 4 நகரங்களில் மாசு அதிகம்!

Comments Off on தமிழ்நாட்டின் 4 நகரங்களில் மாசு அதிகம்!

மத்திய அரசு தமிழ்நாட்டின் நான்கு நகரங்களில் அதிக மாசடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் இந்தியாவின் மாசடைந்த நகரங்கள் பட்டியல் குறித்த கேள்விக்கு, “நாடு முழுதும் 131 நகரங்கள் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை திருச்சி, தூத்துக்குடி, சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் காற்று மாசு அதிகளவில் உள்ளது. 23 மாநிலங்களில் 131 நகரங்களில் மாசு அதிகரித்துள்ளது. காற்று மாசுபாட்டை குறைக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Continue reading …

அண்ணாமலை ஆவேசம்!

Comments Off on அண்ணாமலை ஆவேசம்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை நகரம் கொலை நகரமாகிக் கொண்டிருக்கிறது என ஆவேசமாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “நேற்று கோவையில் பொதுமக்கள் முன்னிலையிலும், நீதிமன்ற வளாகத்திலும் இரண்டு கொலைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அது மட்டுமல்லாது, துப்பாக்கிக் கலாச்சாரமும் தலையெடுத்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. கொலை, கொள்ளைச் சம்பவங்கள் மாநிலம் முழுதும் அதிகரித்திருக்கின்றன. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. காவலர்களுக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. ஒட்டு மொத்த […]

Continue reading …

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கோரிக்கை!

Comments Off on தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கோரிக்கை!

தேமுதிக தலைவரான விஜயகாந்த் பசியால் இனி ஒரு உயிர்கூடபோகாத நிலையை உருவாக்கவேண்டும்- என்று தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் வறுமையால் இரண்டு உயிர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உணவில்லாமல் உயிரிழந்த இருவரை புதைக்க பணம் இல்லாததால் 7 நாட்கள் பிணத்துடன் அவரது குடும்பத்தினர் இருந்துள்ள சம்பவத்தை கேட்டு எனது மனம் ரணமாகி போனது. தனி ஒருவனுக்கு உணவு உணவு இல்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. ஆனால் இன்றைய நிலையில் […]

Continue reading …

பிரேமலா விஜயகாந்த்தின் கேள்வி!

Comments Off on பிரேமலா விஜயகாந்த்தின் கேள்வி!

தேமுதிக பொருளாளர் பிரேமலா விஜயகாந்த் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவின் நடுக்கடலில் பேனா சிலை வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மெரினா நடுக்கடலில் பேனா சிலை வைக்க சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அவ்வகையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், “எழுதாத பேனாவுக்கு நினைவுச் சின்னம் வைப்பது என்பது தேவையில்லாதது என்றும் அதுவும் கடலில் வைப்பது தேவையில்லாதது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இடைத்தேர்தல் என்பது ஜனநாயகமா? அல்லது பணநாயகமா? அது […]

Continue reading …

பிபிசிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Comments Off on பிபிசிக்கு எதிரான மனு தள்ளுபடி!

உச்சநீதிமன்றத்தில் பிபிசி-ஐ இந்தியாவில் தடை விதிக்க வேண்டுமென தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. “இந்தியா தி மோடி கொஸ்டீன்” என்ற ஆவணப்படம் சமீபத்தில் பிரதமர் மோடி குறித்து பிபிசி தயாரித்து வெளியிட்டது. இந்த ஆவணப்படம் வெளியான நிலையில் மத்திய அரசால் தடை செய்யப்பட்டு, இப்படத்தைப் பகிரவும் சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆவணப்படம் வெளியிட்டத்திற்கு பிபிசி நிறுவனத்திற்கு பாஜக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தியா முழுதும் இதுபேசுபொருளாக மாறியுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த […]

Continue reading …

கடலில் வீசப்பட்ட 12 தங்கக்கட்டிகள்!

Comments Off on கடலில் வீசப்பட்ட 12 தங்கக்கட்டிகள்!

இரண்டு நாள் தேடலுக்கு பிறகு மீனவர்கள் கடலில் வீசியெறிந்த தங்க கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையிலிருந்து மீன்பிடி பைபர் படகில் தங்கம் கடத்திவரப்பட்டதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து சுங்கத்துறையினர் அந்த படகை சுற்றி வளைத்தனர். இதையடுத்து மீனவர்கள் அந்த தங்க கட்டிகளை கடலில் தூக்கி எறிந்ததாக கூறப்பட்டது, கடலில் தூக்கி எறியப்பட்ட தங்க கட்டிகளை தேடும் பணியில் சுங்கத்துறை அதிகாரிகள் இரண்டு நாள் தேடலுக்கு பிறகு தற்போது 12 கிலோ தங்க கட்டிகள் […]

Continue reading …

முதல்முறை தமிழகம் வரும் ஜனாதிபதி?

Comments Off on முதல்முறை தமிழகம் வரும் ஜனாதிபதி?

தமிழ்நாட்டிற்கு முதல்முறையாக ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டவுடன் திரௌபதி முர்மு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 25ம் தேதி இந்திய ஜனாதிபதியாக திரௌபதி முர்மு பதவியேற்றார். குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் முதல் பழங்குடியின அரசியல்வாதி மற்றும் இரண்டாவது பெண் இவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 15வது குடியரசுத் தலைவராக பதவி ஏற்று கொண்ட திரௌபதி முர்மு முதல் முறையாக தமிழ்நாட்டிற்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. அவர் பிப்ரவரி பிப்ரவரி […]

Continue reading …

ஓபிஎஸ்-ன் ஆதரவாளரின் பரபரப்பு பேச்சு!

Comments Off on ஓபிஎஸ்-ன் ஆதரவாளரின் பரபரப்பு பேச்சு!

ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர் புகழேந்தி ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் வாங்கவில்லை என்றால் அதிமுக அலுவலகத்தை எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்க வேண்டும் என புகழேந்தி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக வேட்பாளராக தென்னரசு ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். இவருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கவிருப்பதால் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கடும் சவால் கொடுப்பார் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு பெற்ற தென்னரசு வேட்பாளருக்கு ஓபிஎஸ் ஆதரவு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஈரோட்டில் […]

Continue reading …