Home » Archives by category » தமிழகம் (Page 203)

ஆன்லைன் ரம்மியால் இளைஞர் பலி!

Comments Off on ஆன்லைன் ரம்மியால் இளைஞர் பலி!

ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஒரு இளைஞர் பலியாகி உள்ளார். இந்த இளைஞர் காவிரியாற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கவர்னருக்கு தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்ற மசோதா இயற்றப்பட்டு அந்த மசோதா அனுப்பப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவ்வகையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் கான் என்பவர் ஆன்லைன் ரம்மியில் செல்போன் கடையில் வேலை பார்த்து சம்பாதித்த […]

Continue reading …

கரூர் 4 வழிச்சாலைக்கு ரூ.137 கோடி!

Comments Off on கரூர் 4 வழிச்சாலைக்கு ரூ.137 கோடி!

தற்போது கரூரில் இருக்கும் இரண்டு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றம் செய்வதற்காக தமிழ்நாடு அரசு ரூ.137கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழ்நாடு அரசு வைரமடையிலிருந்து கரூர் வரை இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற முடிவு செய்துள்ளது. இச்சாலை மூலப்பொருட்களை தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்வதற்கும், தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் உற்பத்தி பொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்வதற்கும் பயன்படும் என்று கூறப்பட்டுள்ளது. கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், சென்னை, கோவை, ஊட்டி ஆகிய மாவட்டங்களை இணைக்கும் இச்சாலையில் தினந்தோறும் போக்குவரத்து […]

Continue reading …

இடைத்தேர்தலுக்கான 41 மனுக்கள் நிராகரிப்பு!

Comments Off on இடைத்தேர்தலுக்கான 41 மனுக்கள் நிராகரிப்பு!

வரும் 27ம் தேதி நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கலுக்கான தேதி முடிவடைந்துவிட்டது. இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா ஆகியோர் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 121 வேட்பாளர்களில் 80 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் 41 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். […]

Continue reading …

பாஜக தனது ஆதரவை அறிவித்தது!

Comments Off on பாஜக தனது ஆதரவை அறிவித்தது!

பாஜக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதரவு யாருக்கு என்பது குறித்த அறிக்கையை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். வரும் 27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் பணிகள் தொடங்கியுள்ளன. பல்வேறு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில் இரண்டாக பிரிந்துள்ள அதிமுகவும் இரண்டு வேட்பாளர்களை அறிவித்தது. எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில் முருகன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டதால் இருவரில் […]

Continue reading …

கல்வி இயக்குனரின் உத்தரவு

Comments Off on கல்வி இயக்குனரின் உத்தரவு

கல்லூரி கல்வி இயக்குனர் முதலாமாண்டு கல்லூரி மாணவர்கள், மாணவிகளுக்கு மட்டும் சனிக்கிழமையும் வகுப்பு நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். 2022 – 2023ம் ஆண்டின் கல்வி ஆண்டில் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை தாமதமானதால் கல்லூரிகளில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் கட்டாயம் வகுப்பு நடத்தப்பட வேண்டும் என கல்லூரிகளுக்கு கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 2023ம் ஆண்டு மே ஒன்றாம் தேதிக்குள் முதலாமாண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை நடத்தி முடித்திருக்க வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார். முதலாமாண்டு மாணவர்களுக்கு […]

Continue reading …

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வா?

Comments Off on மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வா?

இன்னும் ஒரு சில நாட்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீத அகவிலைப்படி உயர்த்தப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% என இருந்த அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் 38 சதவீதத்திலிருந்து 4 சதவீதம் உயர்த்தப்பட்டு 42 சதவீதமாக அகவிலைப்படி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 42 […]

Continue reading …

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Comments Off on பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

பள்ளி கல்வித்துறை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் அரசு நிதிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் பள்ளியில் பணியாற்றும் போது மாணவர்கள் வருகை, ஆசிரியர்கள் வருகை, மற்றும் பள்ளியில் உள்ள பதிவேடுகள் தற்போது கையால் எழுதி வரும் நிலையில் இனி அனைத்தும் கையால் எழுதுவதை தவிர்த்து கணினி மூலம் கண்காணிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்திருந்தது. […]

Continue reading …

ஆளுநர் மீது அன்புமணி குற்றச்சாட்டு!

Comments Off on ஆளுநர் மீது அன்புமணி குற்றச்சாட்டு!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு கவர்னர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “மதுரை அருகே சாத்தமங்கலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த உணவக ஊழியர் குணசீலன் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரத்து செய்யப்பட்ட […]

Continue reading …

ரயில்வேயின் அதிரடி உத்தரவு..!

Comments Off on ரயில்வேயின் அதிரடி உத்தரவு..!

தெற்கு ரயில்வே போது மேலாளர் ஆர்என் சிங் ஒரு ரயில்வே ஊழியர் எந்த மாநிலத்தில் பணிபுரிந்து வருகிறாரோ அந்த மாநிலத்தின் மொழி தெரிந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். பிற மாநிலங்களைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக ரயில் டிக்கெட் கவுண்டரில் இருப்பவர்களுக்கு மாநில மொழி தெரியாததால் பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் பெரும் பிரச்சனை வருகிறது. எனவே பயணிகளோடு தொடர்புடைய ரயில்வே ஊழியர்களுக்கு அந்தந்த மாநில மொழி தெரிந்திருக்க வேண்டியது அவசியம். இனிமேல் […]

Continue reading …

கனமழை அலெர்ட்?

Comments Off on கனமழை அலெர்ட்?

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் வங்க கடலில் உருவான புயல் சின்னம் இலங்கையில் கரையை கடந்த நிலையில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த நாட்களில் தென் மாவட்டங்கள், டெல்டா பாசன பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. வானிலை ஆய்வு மையம் இன்றும் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக […]

Continue reading …