
தனியார் பேருந்து ஒன்று அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டத்திலிருந்து துறையூர் நோக்கி சென்ற போது கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்திலிருந்து துறையூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டது. செந்துறை அடுத்துள்ள ராயம்புரம் பகுதியில் சாலையிலிருந்த பள்ளத்தில் இறங்கி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் 20 வயது கல்லூரி மாணவர் கார்த்தி என்பவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களை மீட்டு அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் […]
Continue reading …
புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்தின் விலைகளை குறைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்து வந்தநிலையில் மார்பக புற்றுநோய் மருந்து ரூ.80,000லிருந்து ரூ.3800ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்தின் விலை குறைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை மார்பக புற்றுநோய் சிகிச்சைக்காக ஒவ்வொரு மாதமும் 80 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அது 3800 […]
Continue reading …
வானிலை மையம் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது. நாளை வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக வானிமை மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்குப் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு நிலவுவதால், அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்குத் திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வாக வலுவடையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. […]
Continue reading …
டிடிவி தினகரன் அதிமுகவின் இந்த நிலைமைக்கு டில்லி பாஜகதான் காரணம் என்று கூறியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுகவின் தற்போதைய நிலைமைக்கு டெல்லி பாஜக தான் காரணம் என்றும் பாஜக நினைத்தால் அதிமுக ஒருங்கிணைந்துவிடும் என்றும் கூறியுள்ளார். அதிமுக தற்போது நான்கு பிரிவுகளாக இருப்பதாக கூறப்படுகிறது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக, ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக மற்றும் தினகரன் சசிகலா ஆகிய பிரிவுகளில் இயங்கி வருகிறது. இந்நிலையில் அதிமுக இந்த […]
Continue reading …
ஓபிஎஸ் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர் திமுக தொண்டர் ஒருவர் மீது கல்லை வீசியெறிந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் இன்று நடக்க இருந்த மொழிப்போர் தியாகிகள் தின நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருந்த நிலையில் நேற்று அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. அப்போது அந்த பகுதியை ஆய்வு செய்ய வந்த அமைச்சர் ஆவடி நாசர், அங்கு சேர் போடாததை கண்டு அங்குள்ளவர்களை ஒருமையில் திட்டியதுடன், கற்களையும் வீசி எறிந்தார். இந்த சம்பவம் […]
Continue reading …
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கமல்ஹாசனின் ஆதரவளிப்பதாக கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.எஸ்.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவளிப்பதாக அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். சென்னையின் தனது கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசுவதற்கு முன்பாக வாசிக்கப்பட்ட அறிக்கையில், “ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி மற்றும் கூட்டணியில் அங்கம் […]
Continue reading …
முகநூல் மூலம் காதலித்து 45 வயது பெண்ணை 62 வயது மத போதகர் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்களது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் மத போதகர் ஒருவர் முகநூல் மூலம் அதே பகுதியைச் ஒரு பெண் ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று இரவு மனைவிக்கு உணவு வாங்க மதபோதகர் வெளியே சென்று இருந்த […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாஞ்சில் சம்பத் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடல் நிலை குறித்துகேட்டறிந்துள்ளார். நாஞ்சில் சம்பத் தமிழகத்திலுள்ள சிறந்த பேச்சாளரும் இலக்கியவாதியுமாவார். வைகோவின் மதிமுகவின் பல ஆண்டுகளாக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தவர். அக்கட்சியிலிருந்து விலகி, கடந்த 2012ம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்துளார். அக்கட்சியில் கொள்கை பரப்பு துணைச்செயலாளராக பொறுப்பு வகித்தார். அவர் மறைவுக்குப் பின், தினகரன் ஆதரவாளராக இருந்த அவர், அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் முக்கிய பொதுக்கூட்டங்கள், […]
Continue reading …
முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் திமுகவில் அமைச்சர்கள் ஜோக்கர்கள், அடாவடி செய்பவர்கள் தான் உள்ளனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுகவில் ஜோக்கர்கள் மற்றும் அடாவடி செய்பவர்கள்தான் அமைச்சர்களாக இருக்கிறார்கள், பொதுமக்களை அடிப்பவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளை அசிங்கப்படுத்துபவர்கள்தான் திமுகவில் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள். இதுவரை தமிழ்நாட்டில் கல் தூக்கி அடித்த ஒரு அமைச்சரை பார்த்ததில்லை. தமிழ்நாடு வெட்கி தலைகுனியும் ஜோக்கர் அரசுதான் தற்போது நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் புரட்சி செய்வார்கள். மக்களின் புரட்சிக்கு முன் எதுவும் […]
Continue reading …
நிதிநிறுவன இயக்குனர் ஒருவர் ரூபாய் 100 கோடி மோசடி வழக்கில் கைதானதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் சதீஷ்குமார் என்பவர் நிதிநிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக குற்றச்சாட்டப்பட்டது. இதனை அடுத்து சதீஷ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் கடந்த 2019ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் ஜாமீனில் வெளிவந்த நிலையில் மன அழுத்தத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் […]
Continue reading …