
மா.சுப்பிரமணியன் 2023ம் ஆண்டு நீட் தேர்வு தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார். தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2023ம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 7ம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார். நீட் தேர்வு […]
Continue reading …
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அன்னூரில் விவசாய நிலங்களை பூங்கா அமைப்பதற்கு கையகப்படுத்த மத்திய அரசின் அறிவிப்புக்கு எங்களது போராட்டமே காரணம் என தெரிவித்துள்ளார். அன்னூரில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி தொழில் பூங்கா அமைப்பதற்கு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து விவசாயிகளுடன் இணைந்து தமிழக பாஜக நடத்திய மாபெரும் போராட்டத்தின் எதிரொலியாக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது என்று அறிவித்துள்ளது அறிவாலயம் அரசு. விவசாய பெருங்குடி மக்களின் குரலுக்கும் தமிழக பாஜகவினரின் குரலுக்கும் செவி சாய்த்த முதலமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்துக் […]
Continue reading …
மூதாட்டி ஒருவரை அரசுப் பேருந்து நடத்துனர் கவுரவக் குறைவாக நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருகாவூரில் இருந்து 34/கி என்ற அரசுப் பேருந்து இயங்கப்பட்டு வருகிறது. இப்பேருந்தில் இன்று பயணித்த மூதாட்டி ஒருவர் மெலட்டூரில் ஏறி தஞ்சாவூர் சென்றார். அதே பேருந்தில் மீண்டும் திரும்பியுள்ளார். அப்போது, நடத்துனர் மூதாட்டியிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டு ஓசி என்றால் போயிட்டு போயிட்டு வருவியா என்று கூறியதாகக் கூறப்படுகிறது. இதை ஒருவர் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து, சமூக […]
Continue reading …
தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மகன் திருமண வரவேற்பிற்கு கேரளாவிலிருந்து இரண்டு யானைகள் கொண்டு வரப்போவதாக தகவல்கள் வெளியாக உள்ளது. மதுரையில் நடந்த கஜபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக யானைகள் அந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தமிழக அமைச்சர் மகன் திருமணம் நடைபெறும் இடத்தில் யானைகள் நிறுத்தப்பட்டன என தெரிகிறது. செப்டம்பர் 30 அன்று நடந்த நிகழ்விற்கு விருந்தினர்களை வரவேற்க விலங்குகள் பயன்படுத்தப்பட்டன என்று ஒரு செய்தி அறிக்கை கூறுகிறது. சமீபத்தில் ஆர்டிஐ தாக்கல் செய்யப்பட்டதை […]
Continue reading …
சமீபத்தில் தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் என்ற பகுதியில் உள்ள விவசாய நிலங்களைக் கையகப்படுத்தித் தொழில்பூங்கா அமைப்பதற்கு அரசாணை பிறப்பித்தது. இதற்கு எதிராக விவசாயிகள், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இன்று தமிழக அரசு, இந்த அரசாணையை ரத்து செய்வதாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழில் மற்றும் கல்வி துறைகளில் சிறந்து விளங்கும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்கப்படுத்தி, பல முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், கோயம்புத்தூர் […]
Continue reading …
முதல் முறையாக தமிழகத்தில் நடமாடும் இடுகாடு வசதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி தன்னார்வ அமைப்பு ஒன்றுடன் சேர்ந்து இந்த ஏற்பாட்டை செய்துள்ளது. 25 லட்சம் ரூபாய் செலவில் செய்யப்பட்டுள்ள நடமாடும் இடுகாடு இயந்திரத்தை வீடுகளுக்கு சென்று பிணங்களை எரித்து ஒரு மணி நேரத்தில் அஸ்தியை சம்பந்தப்பட்டவரிடம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சேவைக்காக 7,500 ரூபாய் கட்டணம் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் கட்டமாக ஈரோட்டில் இந்த வசதி செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக ரோட்டரி […]
Continue reading …
விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் பீச் ஒலிம்பிக் போட்டி நடைபெற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இன்று தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுடன் அமைச்சர் உதயநிதி கலந்துரையாடிய பின் செய்தியாளர்கள் சந்திப்பில், “முதலமைச்சர் தங்க கோப்பை போட்டிகள் ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறார், அதற்காக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது மாற்றுத் திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு […]
Continue reading …
அமைச்சர் உதயநிதியிடம் பி.டி.பீரியடில் வேறு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும், அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவிகள் கோரிக்கை வைத்தனர். நேற்று உதயநிதி ஸ்டாலின் தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இன்று அவர் சென்னையில் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது பள்ளி நாட்களில் பி.டி.பீரியடில் வேறு வகுப்புகள் எடுப்பதை கைவிட வேண்டும் என மாணவி ஒருவர் கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று […]
Continue reading …
இந்திய வானிலை ஆய்வு மையம் டிசம்பர் 19ம் தேதி வரை இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. அந்தமான் அருகே வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கி அதே பகுதியில் நீடித்து வருவதாகவும் இதன் காரணமாக தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகரத் தொடங்கியதும் […]
Continue reading …
பாராளுமன்றத்தில் பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள் சமுதாயம்த்தை சேர்க்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. பல ஆண்டுகளாக பல அரசியல் கட்சிகள் நரிக்குறவர்கள் என்று கூறப்படும் குருவிக்காரர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்த மசோதா தயாராக இருந்த நிலையில் தற்போது இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குருவிக்காரர்கள், நரிக்குறவர்கள் உள்ளிட்ட சமூகத்தின் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துள்ளதை அடுத்து அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறப்பான இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]
Continue reading …