Home » Archives by category » தமிழகம் (Page 226)

தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை உறுதி!

Comments Off on தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை உறுதி!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைமையில் தான் தேர்தல் கூட்டணி என்று உறுதியுடன் தெரிவித்துள்ளார். 2024ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் இந்த தேர்தலுக்கு இப்போதே அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் பாஜக தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் என்று அரசியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர். இன்று கூட்டம் ஒன்றில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும். பாராளுமன்ற தேர்தல் மட்டுமின்றி அடுத்து […]

Continue reading …

பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

Comments Off on பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 10,11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். இந்த அட்டவணையின் படி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 வரை பொதுத்தேர்வு நடைபெறும். 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 முதல் ஏப்ரல் 5 வரை பொதுத்தேர்வு நடைபெறும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13 முதல் […]

Continue reading …

பரந்தூர் விமான நிலையம் காலத்தின் தேவை!

Comments Off on பரந்தூர் விமான நிலையம் காலத்தின் தேவை!

100 நாட்களை கடந்து பாரந்தூரில் கட்டப்படவுள்ள இரண்டாவது விமான நிலையத்திற்கு எதிரான போராட்டம் நிறைவுற்றது. மாநில அரசு சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் எனும் திட்டத்தை அறிவித்ததில் இருந்து ஏகனாபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு குடியிருப்பாளர்கள் தங்கள் மூதாதையர் நிலம் மற்றும் வீடுகளை விட்டு வெளியேற விரும்பவில்லை. இவர்களது போராட்டம் 100வது நாளை எட்டிய நிலையில் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்திய கிராம மக்கள், கனமழையையும் பொருட்படுத்தாமல் “நீர்நிலைகளை […]

Continue reading …

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஒத்திவைப்பு!

Comments Off on ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஒத்திவைப்பு!

நாளை தமிழகம் முழுதும் 44 இடங்களில் நடைபெறவிருந்த ஆர்எஸ்எஸ் ஊர்வலம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் அதனால் நாளை நடைபெற நடக்கவிருந்த ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென்மண்டல தலைவர் வன்னியராஜன் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நான்கு சுவர்களுக்குள் நடத்த நீதிமன்றம் கூறியிருப்பது ஏற்புடையது அல்ல என்றும் காஷ்மீர் கேரளா மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அணிவகுப்பு பொதுவெளியில் தான் நடைபெற்றது என்றும் தென்மண்டல மேலாளர் […]

Continue reading …

மக்களின் பரிதாப நிலைக்கு திமுக வழிவகுத்துள்ளது; ஓ.பன்னீர்செல்வம்!

Comments Off on மக்களின் பரிதாப நிலைக்கு திமுக வழிவகுத்துள்ளது; ஓ.பன்னீர்செல்வம்!

திமுக அரசு பால்விலை உயர்வால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடிய பரிதாப நிலைக்கு வழி வகுத்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஆவினின் ப்ரீமியம் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலையை லிட்டருக்கு ரூ.12 உயர்த்துவதாக ஆவின் அறிவித்துள்ளது. இதனால் ஆவின் ஆரஞ்சு நிற ப்ரீமியம் கொழுப்புசத்து நிறைந்த பால் பாக்கெட் ஒரு லிட்டரின் விலை ரூ.60 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு மட்டும் ரூ.46க்கு விலை மாற்றமின்றி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அட்டைதாரர்களாக இல்லாத மற்ற வாடிக்கையாளர்களுக்கு […]

Continue reading …

நெற்பயிர் காப்பீட்டுக்கு 15ம் தேதி கடைசி நாள்!

Comments Off on நெற்பயிர் காப்பீட்டுக்கு 15ம் தேதி கடைசி நாள்!

உழவர் நலத்துறை பருவ நெற்பயிர்களை வரும் 15ம் தேதிக்குள் காப்பிட செய்ய வேண்டுமென விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ஆண்டுதோறும் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர்காப்பீடு செய்யுமாறு தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. மழை காரணமாக பயிர் சேதமானாலும் காப்பீடு மூலம் இழப்பீடு பெற முடியும் என்பதால் காப்பீடு செய்ய வலியுறுத்தப்படுகிறது. தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் சம்பா, பிசானப் பருவ பயிர் நெற்பயிர்களை […]

Continue reading …

அமைச்சர் பொன்முடி அறிவிப்பால் பரபரப்பு!

Comments Off on அமைச்சர் பொன்முடி அறிவிப்பால் பரபரப்பு!

அமைச்சர் பொன்முடி விருப்பம் உள்ளவர்கள் இந்தி கற்கலாம் என தெரிவித்திருக்கிறார். பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒருபக்கம் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர் இவ்வாறு கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக மத்திய அரசு இந்தியைத் திணித்து வருவதாகவும் ஹிந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. திமுக மட்டுமன்றி அதன் கூட்டணி கட்சிகளும் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்று விழுப்புரம் அரசு சட்டக் […]

Continue reading …

ஓபிஎஸ் பிரதமரை சந்திக்கப் போவதாக அறிவிப்பு!

Comments Off on ஓபிஎஸ் பிரதமரை சந்திக்கப் போவதாக அறிவிப்பு!

ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்திற்கு பிரதமர் வந்தால் அவரை சந்திக்க இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இன்று மதுரையில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேட்டியின் போது, தமிழகத்துக்கு வரும் பிரதமரை நீங்கள் சந்திப்பீர்களா? என்று கேள்விக்கு, “தமிழகத்திற்கு பிரதமர் வருவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அப்படி வந்தால் கண்டிப்பாக அவரை சந்திப்பேன்.” என்றார். மேலும் கவர்னர் பதவி விலக வேண்டுமென திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, “தற்போது கவர்னர் குறித்து […]

Continue reading …

ஆவின் பால் விலை உயர்வு?

Comments Off on ஆவின் பால் விலை உயர்வு?

பால் பாக்கெட்டுகளை ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வரும் நிலையில் பிரீமியம் பால் பாக்கெட்டின் விலையை தற்போது உயர்த்துவதாக அறிவித்துள்ளது. தனியார் பால் விற்பனை நிறுவனங்கள் சமீப காலமாக பால் பாக்கெட்டுகளின் விலையை உயர்த்தியுள்ளன. இவ்வாண்டில் மட்டும் 4 முறை தனியார் பால் பாக்கெட் விலை உயர்ந்துள்ளது. ஆவின் பால் பாக்கெட்டுகள் தொடர்ந்து ஒரே விலையில் விற்பனையாகி வருகின்றன. கடந்த சில நாட்களாக பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை அதிகரித்து வழங்க வேண்டுமென ஆவின் நிறுவனத்திற்கு கோரிக்கைகள் […]

Continue reading …

ஆர்.எஸ்.எஸ். ஊர்வத்திற்கு 44 இடங்களில் அனுமதி!

Comments Off on ஆர்.எஸ்.எஸ். ஊர்வத்திற்கு 44 இடங்களில் அனுமதி!

ஆர்எஸ்எஸ் அமைப்பு ஊர்வலம் தமிழகத்தில் 44 இடங்களில் நடத்துவதற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தில் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து அனுமதியளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என திருமாவளவன் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நீதிமன்ற உத்தரவு காரணமாக திட்டமிட்டபடி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி சென்னை ஐகோர்ட்டு […]

Continue reading …