Home » Archives by category » தமிழகம் (Page 235)

வந்தே பாரத் ரயில் ஒன்று மட்டுமே!

Comments Off on வந்தே பாரத் ரயில் ஒன்று மட்டுமே!

தெற்கு ரெயில்வேக்கு ஒரே ஒரு வந்தே பாரத் ரெயில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் புல்லட் ரயிலை விட அதிக வேகத்தில் இயங்கும் என்றும் இதன் சோதனை சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. வந்து வந்தே பாரத் ரயில் சென்னை ஐசிஎப் ஆலையில் தயாரிக்கப்பட்ட நிலையில் இந்த ரயில் 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் என்பது தெரிய வந்துள்ளது. சென்னை ஐசிஎப் ஆலையில் 27 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் […]

Continue reading …

வைரலாகும் பொன்னியின் செல்வன் தண்ணீர் பாட்டில்!

Comments Off on வைரலாகும் பொன்னியின் செல்வன் தண்ணீர் பாட்டில்!
வைரலாகும் பொன்னியின் செல்வன் தண்ணீர் பாட்டில்!

பிஸ்லெரி பாட்டிலில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் வெளியாகி படத்திற்காக புரொமோட் செய்யும் விதமாக வெளியாகி உள்ளது. இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான “பொன்னியின் செல்வன்” இம்மாதம் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மினரல் வாட்டர் நிறுவனமான பிஸ்லெரி தனது வாட்டர் பாட்டிலில் […]

Continue reading …

மின்துறை ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்!

Comments Off on மின்துறை ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்!

புதுவை அரசு மின்சாரத்துறையை தனியார்மயமாக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுவையில் மின்சாரத் துறை தனியார் மயமாக்க ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார துறை ஊழியர்கள் இன்று முதல் தங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மின்சார துறை தனியார்மயம் ஆக்கப்படும் என […]

Continue reading …

அமைச்சர் பொன்முடிக்கு சீமான் கண்டனம்!

Comments Off on அமைச்சர் பொன்முடிக்கு சீமான் கண்டனம்!

சமீபத்தில் தமிழக அமைச்சர் பொன்முடி திமுக ஆட்சியில் தான் பெண்கள் பேருந்துகளில் ஓசி பயணம் செய்கிறார்கள் என பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில் இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் பேசிய போது தமிழகத்தில் பெண்கள் ஓசியில் பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள் என்று பேசினார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய உள்ளது. இது குறித்து […]

Continue reading …

‘பொன்னியின் செல்வன்’ நவராத்திரி கொலு!

Comments Off on ‘பொன்னியின் செல்வன்’ நவராத்திரி கொலு!

“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் தாக்கம் நவராத்திரி திருவிழவையும் விட்டு வைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆம் கள்ளக்குறிச்சியில் “பொன்னியின் செல்வன்” கொலு வைத்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரது வீடுகளிலும் தற்போது நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சியில் பொதுமக்கள் கவனத்தைக் கவர்ந்துள்ள இந்த பொன்னியின் செல்வன் நவராத்திரி கொலுவில் பொன்னியின் செல்வன் நாவலில் உள்ள கேரக்டர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. வந்தியத்தேவன், அருள்மொழிவர்மன், கரிகாலன், சுந்தர சோழன், பெரிய பழுவேட்டரையர், சின்னப் பழுவேட்டரையர், நந்தினி, […]

Continue reading …

துரை தயாநிதி மத்திய அமைச்சரா?

Comments Off on துரை தயாநிதி மத்திய அமைச்சரா?

வருங்கால மத்திய அமைச்சர் துரை தயாநிதிஎன ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சரும் மறைந்த திமுக தலைவர் கலைஞர் அவர்களின் மூத்த மகனான மு.க.அழகிரி அழகிரி சர்ச்சைக்குரிய வகையில் கட்சி தலைமை குறித்து பேசி வந்ததால் கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டார். திமுகவை சேர்ந்தவர்கள் அவருடன் நெருக்கத்தை குறைத்துக் கொண்டனர். இந்நிலையில், தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை நிறுத்திக் கொண்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஸ்டாலின் […]

Continue reading …

பிரீ பையர் விளையாட்டு குறித்து நீதிபதிகள் கருத்து

Comments Off on பிரீ பையர் விளையாட்டு குறித்து நீதிபதிகள் கருத்து

வன்முறையைத் தூண்டும் விதமாக பிரீ பையர் விளையாட்டு இருப்பதாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளான பப்ஜி, பிரீபயர் பாக்ஸ் அதிக சிறுவர்களிடமும், மாணவர்களிடமும் இளைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. சில ஆன்லைன் கேம்களுக்கு அரசு தடையுத்தரவு போட்டிருந்தாலும் சிலர் இன்னும் அதை எப்படியாவது விளையாடிட வேண்டுமென நினைக்கிறார்கள். ஆன்லைன் கேம் விளையாட்டு எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சிறுவர்களுக்கும் குழந்தைகளும் புரிவதில்லை. இன்று, உயர் நீதிமன்றன் மதுரைக்கிளை பிரீபயர் விளையாட்டு வன்முறையைத் தூண்டும் […]

Continue reading …

குமரி அனந்தனுக்கு அரசு வீடு: வழங்கிய முதல்வர்!

Comments Off on குமரி அனந்தனுக்கு அரசு வீடு: வழங்கிய முதல்வர்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குமரி அனந்தனுக்கு அரசு வீடு ஒதுக்கிய அரசாணையை வழங்கியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த குமரிஅனந்தன் காங்கிரஸ் பிரமுகர் என்பதும், சுதந்திர போராட்ட தியாகி ஆவார். தமிழுக்கும் தமிழகத்திற்கும் தன் வாழ்நாளெல்லாம் பெருமை சேர்த்த குமரி அனந்தனுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வீடு வழங்கிட வேண்டுமென கோரிக்கை விடப்பட்டது. இக்கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டதையடுத்து தமிழக வீட்டு வசதி வாரியத்தின் குடியிருப்பில் அவருக்கு ஒரு வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டார். இது குறித்த […]

Continue reading …

பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு!

Comments Off on பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு!

பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயது 60 என அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு தற்போது அமலுக்கு வந்துள்ளது. பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயது 60 ஆக நீடிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த கோரிக்கை குறித்து பரிசீலனை செய்த பள்ளி கல்வித்துறை பகுதிநேர ஆசிரியர்கள் 60 வயதில் ஓய்வு பெறுவார்கள் என சமீபத்தில் அறிவித்தது. அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்டு நிலையில் பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயது 60 […]

Continue reading …

கட்டிட தொழிலாளியின் மகள் “மிஸ் தமிழ்நாடு!”

Comments Off on கட்டிட தொழிலாளியின் மகள் “மிஸ் தமிழ்நாடு!”

“மிஸ் தமிழ்நாடு” பட்டத்தை செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியின் மகள் வென்றுள்ளதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற ’மிஸ் தமிழ்நாடு அழகி போட்டியில் தமிழகத்திலிருந்து ஏராளமான அழகிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் செங்கல்பட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளியின் மகள் ரக்சயா என்பவர் மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்றுள்ளார். இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. தனது பெற்றோர் வறுமையாக இருந்த சூழ்நிலையிலும் பகுதி நேரமாக வேலை செய்து சொந்த முயற்சியில் அழகி போட்டிக்காக […]

Continue reading …