
பொள்ளாச்சியில் கடைவீதி உரிமையாளர்கள் பிரதமர் மோடி பிறந்த நாளுக்கு எதிர்ப்ப- தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு கடை அடைப்பு செய்து சாலைமறியலில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி நகர்புற பகுதியில் உள்ள கடைவீதியில் 5000 மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன, இப்பகுதியில் ஆட்டோ ஸ்டோண்ட் உள்ளது, பிரதமர் மோடி பிறந்தநாள் முன்னிட்டு பாரதிய கோவை மாவட்டம் ஆட்டோ தொழிலாளர் சங்கம் பிஎம்எஸ் நிர்வாகிகள் பிரதமர் மோடி பிறந்தநாள் முன்னிட்டு அனுமதியின்றி பேனர் வைத்ததால் கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடைகள் […]
Continue reading …
ஆதிதிராவிட பள்ளி குழந்தைகளுக்கு திண்பண்டங்களை வழங்க முடியாது தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகில் பாஞ்சாகுளம் கிராமத்தில் தீண்டாமை கொடுமை செய்த பெட்டிக்கடை சீல் வைக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகிலுள்ள பஞ்சாகுளம் கிராமத்தில் மகேஷ்வரன் மற்றும் ராமச்சந்திர மூர்த்தி ஆகிய இருவரும் ஒரு பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள ஆதி திராவிட பள்ளிக் குழந்தைகளுக்கு அவர் கடையில் வந்து பொருட்கள் கேட்டால் வழங்க முடியாது என கூறியதாகக் கூறப்படுகிறது. அதிகாரிகள் அக்கடைக்குச் சென்று […]
Continue reading …
ஆபாச பாடம் நடத்தியதாக கன்னியாகுமரியைச் சேர்ந்த ஆசிரியர் எந்த தவறும் செய்யவில்லை என்று ஆசிரியர் நல சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் வணிகவியல் பாட ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் கிறிஸ்துதாஸ். இவர் பள்ளி மாணவர்களுக்கு அடிக்கடி ஆபாசமான பாடங்கள் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கிறிஸ்துதாஸ் மீது […]
Continue reading …
12ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஜித் என்ற 21 வயது வாலிபர் அதே பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஒருவரை காதலித்துள்ளார். இந்த காதல் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே மாணவிக்கு மாப்பிள்ளை பார்க்க ஏற்பாடு செய்துள்ளனர். இதையடுத்து அஜித் மற்றும் 12ம் வகுப்பு மாணவி இருவரும் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து மூன்று நாள் குடும்பம் நடத்தியுள்ளனர். […]
Continue reading …
சதுரங்க வேட்டை சினிமா பாணியில் கோவையில் தங்க புதையல் கிடைத்திருப்பதாக கூறி மளிகைக்கடை வியாபாரி ஒருவரை இரண்டு பேர் ஏமாற்றிய சம்பவம் நடந்தேறியுள்ளது. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள வாகராயம்பாளையத்தை சேர்ந்த சதாசிவம் அப்பகுதியில் மளிகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு அடிக்கடி அப்பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் பொருட்கள் வாங்க வந்துள்ளனர். ஒரு நாள் சதாசிவத்திடம் பேசியவர்கள் தாங்கள் அருகில் உள்ள கல்லூரியில் படித்து வருவதாகவும், மீத நேரங்களில் கூலி வேலைக்கு சென்று […]
Continue reading …
ரூ.12 லட்சம் மின்சாரக்கட்டணம் புதுச்சேரியில் வசித்து வரும் ஒரு நபருக்கு வந்துள்ளதைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். புதுவையில் விஸ்வநாதன் நகரைச் சேர்ந்த பாதுகாவலர் சரணன் வீட்டிற்கு ரூ.12 லட்சம் மின்கட்டணம் வந்துள்ளது. இவருக்கு மாதம் தோறும் ரூ.800 வந்துகொண்டிருந்த நிலையில், அவருக்கு ரூ.12 லட்சம் மின்கட்டணம் வந்துள்ளது. புதுச்சேரியில் வசித்து ஒரு தனியார் மையத்திற்கு மின்சாரத்துறையை மாற்றும் நடவடிக்கை நடந்து வரும் நிலையில் மின்சாரத்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மின்கணகெடுப்புக்கு யாரும் வராத நிலையில், […]
Continue reading …
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாரணாசி நீதிமன்றத்தின் தீர்ப்பு நாட்டின் ஒற்றுமைக்கும், மக்களின் நலனுக்குமெதிரானது என அறுவுறுத்தியுள்ளார். ஞான வாபி வசூதியில் சென்று காசி விஸ்வநாதரை வழிபட வேண்டுமென்று 5 பெண்கள் அளித்த மனு விசாரணைக்கு உகந்தது என கூறியிருக்கும் வாரணாசி நீதிமன்றத்தின் தீர்ப்பானது அதிர்ச்சியளிக்கிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “1991ம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் சிறப்புச்சட்டம், 1947ம் ஆண்டுக்கு முன்பு வழிபாட்டுத்தலங்கள் எந்த நிலைமையில் இருந்ததோ அதே […]
Continue reading …
இந்து அமைப்புகள் கோவையில் பெரியார் பெயரில் உணவகம் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே அமைந்துள்ளது கண்ணாரபாளையம் கிராமத்தில் “தந்தை பெரியார் உணவகம்” என்ற பெயரில் புதிய உணவகம் திறக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் முழுவதுமாக முடிந்து இன்று உணவகம் திறப்பு விழா நடைபெற இருந்தது. இந்நிலையில் அங்கு வந்த இந்து அமைப்பை சேர்ந்த சிலர், பெரியார் பெயர் கொண்ட உணவகத்தை திறக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். […]
Continue reading …
டிஎன்பிஎஸ்சி தலைமைச் செயலகத்தில் ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலை வாய்ப்பை பற்றிய அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்ற செய்தியாளர்கள் தேவை என்றும் இன்று முதல் வரும் அக்டோபர் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களாக பணியாற்ற விரும்பும் நபர்கள் […]
Continue reading …
அமைச்சர் பொன்முடி தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும அறிவியல் கல்லூரிகளில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு புதிய திட்டம் என்னென்ன என்பதை அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் பல பல்கலைக்கழகங்களும், அதன் கீழ் பல கலை அறிவியல் கல்லூரிகளும் செயல்படுகின்றன. இவை தவிர்த்து தன்னாட்சி பெற்ற பல்கலைகழகங்களும் செயல்படுகின்றன. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பின் ஏராளமான மாணவர்கள் அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்பித்திருந்தனர். மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அனைத்து அரசு கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. […]
Continue reading …