பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் பெற்ற மண்டல தலைவர் கருப்பையாவை, மதுரை வில்லாபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரடியாக சென்று வாழ்த்தினார். செய்தியாளர்களிடம் திருச்சி சூர்யா, “விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மண்டலத்தில் அதிக வாக்குகளை இந்த மண்டலத்தின் தலைவர் கருப்பையா பெற்று இருக்கிறார். பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்கி விடலாம் என்ற திராவிட கட்சிகளின் கொள்கைக்கு அப்பாற்பட்டு பணமில்லாமல் தேர்தலை சந்திப்போம் என்கிற முடிவை எங்கள் மாநில தலைவர் எடுத்தார். […]
Continue reading …அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளான ஜூன் 10ம் தேதி அன்று இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சமூக நல ஆணையர் வெளியிட்டுள்ள செய்தியில், “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் பள்ளிக் குழந்தைகளுக்கு டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாளன்று இனிப்பு பொங்கல் வழங்கவும், குழந்தைகள் மையங்கள் / சத்துணவு மையங்களில் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு நாள்தோறும் சத்துணவிற்காக அனுமதிக்கப்பட்டுள்ள அரிசியின் அளவில் அரிசி பயன்படுத்தவும். […]
Continue reading …நூறு நாள் வேலைக்கு செல்லும் பெண்ணுக்கு ரூ.40 கோடி ஜிஎஸ்டி கட்ட கோரி நோட்டீஸ் வந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த ஏலக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் மலர் நூறுநாள் வேலை திட்டத்தின் கீழ் கூலி வேலை செய்து வருகிறார். இவரது வீட்டிற்கு விழுப்புரம் வணிக வரி துணை ஆணையர் அலுவலகத்திலிருந்து வந்த கடிதத்தில், தமிழ்நாடு ஜிஎஸ்டி சட்டப் படி இந்த ஆண்டுக்கான வரி மற்றும் கடந்த 3 ஆண்டுகளுக்கான அபராதம் என மொத்தம் ரூ.40 கோடி ரூபாய் […]
Continue reading …உடல்நிலை சரியில்லாத தனது பாட்டியை போடி அருகே உள்ள நாகலாபுரம் கண்மணி என்பவர் பார்க்க வந்தார். அப்போது போடி காவல் நிலையம் முன்பு நடந்து சென்ற கொண்டிருந்த போது, இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள், பெண்ணின் கையில் வைத்திருந்த செல்போன் மற்றும் பணத்தைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர். இதுகுறித்து போடி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் நிலையத்திற்கு முன்பு நடந்த இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
Continue reading …அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் மீண்டும் கூட்டணி ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் அண்ணாமலையை அடையாளம் காட்டியதே அதிமுகதான் என்றும் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர், “2019 மக்களவைத் தேர்தலை விட, நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. பல்வேறு விமர்சனங்களை தாண்டி அதிமுக கூட்டணி அதிக வாக்குகளை பெற்றுள்ளது. நடப்பு மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி குறைந்த வாக்குகள் பெற்றுள்ளது. சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணி அமைப்பது தான் கட்சிகளின் நிலைப்பாடு, பாஜக […]
Continue reading …தமிழ்நாடு அரசு கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள யுவராஜுக்கு சிறையில் முதல் வகுப்பு ஒதுக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு முதல் வகுப்பு சிறை ஒதுக்கக் கோரி அவரது மனைவி சுவிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இம்மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் […]
Continue reading …நாளை காலியாக கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6,244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு நடைபெறவுள்ளது. மொத்தம் 6,244 காலி இடங்களுக்காக நடத்தப்படும் இத்தேர்வை சுமார் 20 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அவ்வகையில் கிராம நிர்வாக அலுவலர், வனக் காப்பாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட குரூப் 4 பதவிகளில் […]
Continue reading …தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தமிழ்நாடு வேறு மாதிரி முடிவெடுத்திருந்தால் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கக் கூடும், நாட்டை வழிநடத்தும் நாற்பதுக்கு நாற்பது என்று தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைத்தளத்தில் அவர், “திமுக கூட்டணி 40 இடங்களில் வென்றும் பயனில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், அப்படியில்லை தங்களை எதுவும் செய்துவிட முடியாது என்ற இறுமாப்பில் இருந்த பாஜக இப்பொழுது பிற மாநிலக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டிய சூழலுக்கு வந்திருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மோடி தலைக்கு […]
Continue reading …நாளை மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக புதிய எம்பி-க்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பாஜக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி கைப்பற்றியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று […]
Continue reading …தமிழகம் முழுவதும் சென்னை உள்பட கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழை பெய்யும் என முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம், “தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும், குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், விழுப்புரம், […]
Continue reading …