
மயிலாடுதுறையில் வரதட்சணைக்காக ஒரு இளம்பெண்ணை உயிருடன் எரித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கரைமேடு கிராமத்தைச் சேர்ந்த மோகன சுந்தரம் – உஷா ராணி தம்பதியரின் மகன் கார்த்திக் (29). இவருக்கும் மேலமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் – ஜெகதாம்பாள் தம்பதியனரின் மகளான தர்ஷிகா (23) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்களை பெண் வீட்டார் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். அவரது […]
Continue reading …
சென்னை உயர்நீதிமன்றம் கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் வழக்கில் விசாரணை நல்ல முறையில் நடைபெற்று வருவதாக விசாரணை அமைப்புகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில், நியாயமான முறையில் விசாரணை நடத்தவும், கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கல்வி காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க […]
Continue reading …
உயர்நீதிமன்றம் கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூர் கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும், உறவினர்களும் தெரிவித்தனர். இதற்கு நியாயம் கேட்டு சாலை மறியல், போராட்டங்களில் ஈடுபட்ட பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். பள்ளியும், பள்ளி வாகனமும் சூறையாடப்பட்டது. மாணவியின் மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில், நியாயமான முறையில் விசாரணை நடத்தவும், கலவரம் […]
Continue reading …
இன்று நடிகர் மற்றும் இயக்குநர் கே.பாக்யராஜ் அதிமுகவில் இணைந்துள்ளார். எம்ஜிஆர் காலத்திலிருந்தே அதிமுக ஆதரவாளராக இருந்த கே.பாக்யராஜ் இடையில் சில காலம் திமுக உள்ளிட்ட கட்சிக்கு மாறினார். பிறகு தனிக்கட்சியும் ஆரம்பித்தார். இந்நிலையில் இன்று திடீரென அவர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் கே.பாக்யராஜ் பாஜகவுக்கு ஆதரவாக பேசியதால் அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது.
Continue reading …
இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை செய்வதாக உத்தரவிட்டுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கைதான அனைவரும் இலங்கையிலுள்ள திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட 9 மீனவர்களும் இன்னும் ஓரிரு நாளில் தமிழகம் […]
Continue reading …
மார்பளவுக்கு புதைமண்ணில் புதைந்து உயிருக்குப் போராடிய சிறுவனை இளைஞர்கள் மீட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. நெய்வேலி அருகே மண்ணுக்குள் மார்பளவுக்கு புதைந்து உயிருக்குப் போராடிய சிறுவனை இளைஞர்கள் மீட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மங்களத்தில், புதை மண் இருப்பது தெரியாமல் சென்ற ஏழு வயது சிறுவன் ஒருவர் அதில் சிக்கிக் கொண்டார். அவர் கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் புதை மண்ணில் இறங்கி, மண்ணுக்குள் மார்பளவு புதைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த […]
Continue reading …
தொழிலதிபர் காருக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ள சம்பவம் தூத்துக்குடியில் நடந்துள்ளது. இதுபற்றி போலீஸ் விசாரணை செய்து வருகிறது. தூத்துக்குடியைச் சேர்ந்த ராமசாமி என்ற தொழிலதிபர் தனக்கு சொந்தமான காரை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். இந்நிலையில் நள்ளிரவில் 4 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் காரின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தொழிலதிபர் வீட்டிற்கு அருகில் […]
Continue reading …
கல்லூரி விடுதியில் மாணவர் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பது ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கல்லூரி விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்த மாணவர் அலோக்குமார் என்பவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். இதுபற்றி காவல்துறையினர் விசாரணை செய்ததில், அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விடுமுறைக்கு சொந்த ஊர் செல்லாமல் […]
Continue reading …
ஸ்ரீமதியின் தாயார் 2 மாணவிகள் ரகசிய வாக்குமூலம் அளித்ததில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் கள்ளக்குறிச்சியில் 12ம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் மரணமடைந்தார். அந்த மாணவியின் இரண்டு தோழிகள் இன்று நீதிபதி முன் ரகசிய வாக்குமூலம் கொடுத்ததாக செய்திகள் வெளியானது. இந்த செய்தி குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீமதியின் தாயார், ‘ரகசிய வாக்குமூலம் கொடுத்த இரண்டு மாணவிகள் உண்மையில் ஸ்ரீமதி தோழிகளா என்பதை நாங்கள் அறிய […]
Continue reading …
டிஎன்பிஎஸ்சி குரூப் 5 ஏ தேர்வுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. டிசம்பர் 18ம் தேதி நடைபெறும் எழுத்து தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 21 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப்-5ஏ தேர்வுக்கு https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 161 இடங்களை நிரப்ப குரூப் 5ஏ தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வுக்கு […]
Continue reading …