
நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் ஊராட்சி தலைவர் நரசிம்மமூர்த்தியை அடித்துக் கொலை செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது தாரவேந்திரம் ஊராட்சி. இந்த ஊராட்சியின் தலைவராக பிபி பாளையத்தை சேர்ந்த நரசிம்மமூர்த்தி இருந்து வந்தார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தளி பகுதி கமிட்டி உறுப்பினராக இருந்து வந்தார். அவர் நேற்று இரவு (ஆக. 2) அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து, […]
Continue reading …
கழிவுநீர் கால்வாய் கோவையில் கனமழை பெய்த நிலையில் காவலர் ஒருவர் சுத்தம் செய்கின்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழையால் நல்ல மழை பெய்கிறது. இதன் காரணமாக கோவை, திருப்பூர், தேனி உட்பட பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. கோவையில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கோவையில் பெய்த கனமழையால் கழிவுநீர் கால்வாய் அருகே குப்பைகள் சேர்ந்து நீர் வெளியேற முடியாதபடி […]
Continue reading …
குப்பை தொட்டியில் சக்திவாய்ந்த துப்பாக்கி இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மத்திய சிறை அருகே உள்ள குப்பைத் தொட்டியில் தூய்மைப் பணியாளர் சுத்தம் செய்யும் போது ஒரு கையடக்க துப்பாக்கி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து சோதனையிட்டு வருகின்றனர். குப்பைத் தொட்டியில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து போலீசார் சோதனை செய்தபோது அந்த துப்பாக்கி சட்டவிரோதமாக சிறைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் […]
Continue reading …
பள்ளி மாணவர் விழுப்புரத்தில், தனியார் பேருந்திலிருந்து கீழே இறங்கும்போது, பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். அனீஸ் என்ற மாணவர் விழுப்புரம் மாவட்டம் பழைய பேருந்து நிலையமருகே வந்த பேருந்தில் பயணித்துள்ளார். மாணவர் அனீஸுடன் வந்தவர்கள் ஓடும் பேருந்தில் இருந்து கீழே இறங்கியுள்ளனனர். அப்போது, அனீஸ் இறங்க முயன்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். கீழே விழுந்த வேகத்தில் பேருந்தின் பின்பக்கச் சக்கரத்தில் சிக்கி அனீஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் சிசிடிவி காட்சிப் பதிவுகளைக் […]
Continue reading …
முதலமைச்சர் மலையாள மனோரமா பத்திரிகையின் 75 வது ஆண்டுவிழாவில் நியூஸ் கருத்தரங்கில் மாநில அரசுகளை தன்னிறைவாக வைத்திருந்தால் இந்தியா மகிழ்ச்சியாக இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும் போது, “75ம் ஆண்டு கொண்டாட்டம் என்பது வெறும் கொண்டாட்டமாக இல்லாமல், அடுத்த வளர்ச்சிக்கான திட்டமிடலாக இருக்கவேண்டும். மாநில அரசுகள் தன்னிறைவாகக இருந்தால்தான் இந்தியா வலிமையுடன் இருக்கும். ஒரு மாநிலம் தன்னிறைவு பெறுகிறது என்றால் அம்மாநிலம் வளார்ச்சியடைகிறது என்று அர்த்தம். இது மாநிலங்களின் வளர்ச்சி நாட்டை வளப்படுத்தும், பலப்படுத்தும். […]
Continue reading …
3 நாட்களுக்கு அதிகமான கனமழைக்கான வாய்ப்பிருப்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை தமிழகத்திற்கு விடுக்கப்பட்டள்ளது. தற்போது மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த சுழற்சி உருவாகியுள்ளது. அதன் காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பத்தனம்திட்டா, இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் 40-50 கி.மீ வேகத்தில் இருக்கும். ஆகையால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க போக […]
Continue reading …
சென்னை, ஜூலை 29- நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரனுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சூளையில், சொக்கவேல் சுப்பிரமணியர் திருக்கோயில் அமைந்துள்ளது. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள இந்த கோவிலுக்கு சொந்தமான இடங்களை, குத்தகைக்கு எடுத்த தனிநபர்கள், நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர். இதுகுறித்து புகார் அளித்து, சூளையைச் சேர்ந்த சுகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த […]
Continue reading …
கல்லூரிகளில் முதலாமாண்டு சேர்க்கை நடைபெற்று வருகிறது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு நாளையுடன் கடைசி நாள் என்பதால் அரசு கல்லூரிகளில் சேர்வதற்காக மாணவ மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பிளஸ் டூ, சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து கல்லூரிகளில் விண்ணப்பம் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது. ஏற்கனவே 5 நாள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. நாளையுடன் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பிக்க கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பொறியியல் கல்லூரியில் 2 லட்சத்து 5 ஆயிரம் பேர்களும், […]
Continue reading …
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொறுப்பு பதிவாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவிக்கு பல்கலைக் கழகத்தின் பொறுப்பு பதிவாளரான கோபியால் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி மாணவி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் கோபி கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியுடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில் சேலம் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கைது செய்யப்பட்டிருப்பது பல்கலைக்கழக வட்டாரங்களில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Continue reading …
பொறியியல் கல்லூரி மாணவி மாடியிலிருந்து கிழே விழுந்தது தற்கொலை முயற்சியா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தனியார் பொறியியல் கல்லூரியில் முதல் மாடியில் இருந்து மாணவி ஒருவர் கீழே விழுந்து சம்பவம் விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டியில் நடந்துள்ளது. இதில் மாணவி படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலத்த காயமடைந்த மாணவியை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் […]
Continue reading …