
மருத்துவ படிப்பு படிப்பதற்கு இந்தியாவில் நீர் தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தஞ்சையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ராமமூர்த்தி (68). இவர் நாளை மறுநாள் நடக்கவிருக்கும் நீட் தேர்வு எழுதவிருக்கிறார். ஏற்கனவே 28 பட்டப்படிப்புகளை முடித்துள்ளார். தற்போது மருத்துவராக வேண்டுமென்ற ஆசையும் உள்ளதாம். 68 வயதிலும், வயது என்பது சாதனைக்கு தடையல்ல என்பதற்கு ஏற்ப, நீட் தேர்வு எழ்த தயாராகவுள்ளார். இவருக்குப் பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
Continue reading …
தனுஷ்கோடியில் இலங்கையில் இருந்து வந்த 2 குடும்பங்களை காவல்துறையினர் மீட்டனர். தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கையிலிருந்து வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினை காரணமாக அந்நாட்டில் வாழமுடியாமல் இன்று இரண்டு குடும்பங்கள் இலங்கையில் இருந்து அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகின. கடலோர காவல் படையினரால் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் தனுஷ்கோடியில் மீட்கப்பட்டு அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வந்த அகதிகளில் ஒருவர், “இலங்கையின் தற்போதைய […]
Continue reading …
பெரியகுளம் அருகே அண்ணன் மனைவியை அறிவாளால் வெட்டி கொலை செய்த நபர். சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பாரதியார் தெருவைச் சேர்ந்த ராஜூ (55) என்பவர்,அவரது அண்ணன் வெள்ளைச்சாமியின் மனைவி ராமுத்தாய் என்பவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் இடத்தகராறு காரணமாக மின்சார இணைப்பு பெயர் மாற்றுவது சம்பந்தமாக அண்ணன் வெள்ளைச்சாமியின் பேரில் இருக்கும் மின்சார இணைப்பை ராஜு பெயருக்கு மாற்றி தரவில்லை […]
Continue reading …
அதிமுக கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்னையில் தற்போது ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து தற்போது ஓபிஎஸ் மகன்களும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இன்று பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் “கழகத்தின் கொள்கை கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால், கழகத்தின் சட்டதிட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறையை குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழகத்தின் […]
Continue reading …
பள்ளி மாணவர்கள் கம்மல், செயின், காப்பு அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்ட பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லும்போது கம்மல், செயின், காப்பு, கயிறு போன்றவை அணியக்கூடாது. தலையில் எண்ணெய் வைத்து தலை வாரவேண்டும். மாணவ மாணவியருக்கு டாட்டூ போன்றவற்றுடன் பள்ளிக்கு வர அனுமதி இல்லை. இதுபோன்ற நிபந்தனைகளை வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று சமூக பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.
Continue reading …
4 மருத்துவமனைகளுக்கு சீல் வைக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரோட்டை சேர்ந்த சிறுமியை அவரது தாயாரும், தாயாரின் காதலனும் சேர்ந்து கட்டாயப்படுத்தி கருமுட்டைகளை மருத்துவமனைகளுக்கு விற்ற விவகாரம்.சிறுமியை தாயாரின் காதலன் வன்கொடுமை செய்த சம்பவமும் நடந்தேறியுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியின் தாயார், தாயாரின் காதலன், கருமுட்டை விற்ற ஏஜெண்ட் பெண் உட்பட மூன்று பேரையும் கைது செய்தனர். பின்னர் இதுதொடர்பாக சிறப்பு குழு அமைத்து […]
Continue reading …
கடந்த சில மாதங்களாகக் குறைந்திருந்த கொரொனா தொற்று சில வாரங்களாக அதிகரித்து வரும், தினம் தோறும் கொரொனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில், தனக்கு கொரொனா தொற்று இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் அரசியல் தலைவர்களும், பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும், கொரொனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தனது சமூக வலைதளத்தில், “இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #சிளிக்ஷிமிஞி19 உறுதி செய்யப்பட்டதையடுத்து […]
Continue reading …
தமிழ்நாட்டில் காவிரி கரை ஒரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரியில் கரைபுரண்டு வெள்ளம் ஓடுகிறது. இந்த காட்சிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணையிலிருந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக […]
Continue reading …
நேற்று பல பகுதிகளில் தமிழ்நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் 17.5 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதனால் மாநிலம் முழுவதும் முகக்கவசம் கட்டாயமாக்கபட்டுள்ளது. மீண்டும் தடுப்பூசி முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நேற்று தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் […]
Continue reading …