Home » Archives by category » தமிழகம் (Page 259)

தமிழக அமைச்சருக்கு உபி அமைச்சர் கண்டனம்!

Comments Off on தமிழக அமைச்சருக்கு உபி அமைச்சர் கண்டனம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் அமைச்சர் ஜிதின் பிரசாதா தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமயனை கண்டித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. பேட்டி ஒன்றில் மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் “வடமாநிலத்தில் இருந்து வந்த மாணவர்களால் தான் தமிழகத்தில் கொரோனா பரவியது என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது” என்று கூறினார். இதற்கு உத்தர பிரதேச மாநில அமைச்சர் ஜிதின் பிரசாதா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் “கொரோனாவுக்கு மாநில எல்லைகளை தெரியாது. தமிழக அமைச்சர் […]

Continue reading …

இசைஞானிக்கு சதாபிஷேகம்!

Comments Off on இசைஞானிக்கு சதாபிஷேகம்!

இசைஞானிக்கு இளையராஜாவுக்கு திருக்கடையூர் கோவிலில் சதாபிஷேக விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தேவாரப்பாடல் பாடப்பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான இக்கோயிலில் சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்த தலம் ஆதலால் இத்தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இக்கோயிலில் 60, 70, 75, 80, 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் முறையே மணிவிழா, பீமரதசாந்தி, விஜயரத சாந்தி, […]

Continue reading …

மலர் கண்காட்சியில் லட்சக்கணக்கில் வசூல்!

Comments Off on மலர் கண்காட்சியில் லட்சக்கணக்கில் வசூல்!

ரூ.20 லட்சம் நுழைவு கட்டணம் சேலம் ஏற்காடு மலர் கண்காட்சியில் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டள்ளது. கொடைக்கானலும் உதகையும் ஏற்காடும் தமிழ்நாட்டின் முக்கியமான கோடைக்கால சுற்றுலா தளங்களில் ஒன்று. தற்போது கோடைக்கால சீசன் தொடங்கி களைகட்டத் தொடங்கியுள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கொடைக்கானல், ஏற்காடு, உதகையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். ஏற்காட்டில் நடைபெறும் மலர் கண்காட்சியை கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் […]

Continue reading …

வடமாநிலத்தவர்களுக்கு டிஜிபி உத்தரவு!

Comments Off on வடமாநிலத்தவர்களுக்கு டிஜிபி உத்தரவு!

டிஜிபி சைலேந்திரபாபு தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் வடமாநிலத்தவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். குல்பி, பானிப்பூரி விற்பவர்கள் மற்றும் இன்னபிற வேலையில் ஈடுபடுபவர்கள் உட்பட அனைவரும் தங்களது பேர் மற்ற விவரங்களை காவல்நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை, மயிலாப்பூரில் தொழிலதிபர் கொலையில் வடமாநிலத்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், தமிழக மக்களின் பாதுகாப்பிற்காக டிஜிபி சைலேந்திரபாபு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

Continue reading …

பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர பட்டப்படிப்புகள் செல்லாது

Comments Off on பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர பட்டப்படிப்புகள் செல்லாது

யுஜிசி அமைப்பு பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர பட்டப்படிப்புகள் இனி செல்லாது என்று அறிவித்துள்ளது. பெரியார் பல்கலைக்கழகம், 1997ம் ஆண்டில் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டது. பல்கலைக்கழகத்திற்கு சமூக சீர்திருத்தவாதி பெரியார் பெயரிடப்பட்டது. பல்கலைக்கழக தேசிய தர நிர்ணய ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றது. சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளை உள்ளடக்கியது. பெரியார் பல்கலைக் கழகம் நடத்தும் தொலைதூர பட்டப்படிப்புகள் இனி செல்லாது என யுஜிசி அறிவித்துள்ளது. மாணவர்கள் யாரும் பெரியார் பல்கலைக்கழக […]

Continue reading …

எஸ்.டி.ஆரின் திரைப்படம் ரூ.117 கோடி வசூல்!

Comments Off on எஸ்.டி.ஆரின் திரைப்படம் ரூ.117 கோடி வசூல்!

ஐந்து மொழிகளில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான திரைப்படம் “மாநாடு”. சிம்பு, எஸ்.ஜே.சூர்யா இருவரின் கூட்டணி உருவான இந்த திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். இப்படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கினார். சுரேஷ் காமாட்சி தயாரித்தார். இத்திரைப்படம் ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவானது. வெளியான முதல் நாளிலே ரூ.9 கோடி வசூலித்தது. முதல் வாரத்தில் ரூ.50 கோடி வசூலித்தது. 25வது நாளில் ரூ.100 கோடிகளைக் கடந்தது. இவ்வாண்டின் துவக்கத்தில் 100வது நாளைக்கொண்டாடிய இப்படம் ஓடிடியில் ரிலீஸானது. இப்படத்தின் தயாரிப்பாளர் […]

Continue reading …

தொழிற்கல்வி பாடம் ரத்து!

Comments Off on தொழிற்கல்வி பாடம் ரத்து!

9 மற்றும் 10ம் வகுப்பிற்கான தொழில்கல்வி பாடம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 9ஆம் வகுப்பு மற்றும்10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில் கல்வித் திட்டத்தை கடந்த அதிமுக ஆட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக பல மாணவ, மாணவர்களும், தொழிற்கல்வி பாடத்திட்டம் தேவையில்லை என்று சில மாணவர்களும் கூறியுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் 9ம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தொழில்கல்வி பாடத்திட்டம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Continue reading …

தமிழகம் யுபிஎஸ்சி தேர்வில் பின்னடைவு

Comments Off on தமிழகம் யுபிஎஸ்சி தேர்வில் பின்னடைவு

யுபிஎஸ்சி நடத்தும் ஐ.ஏஎஸ், ஐபிஎஸ்-2021ம் ஆண்டு தேர்வு முடிவுகள் நேற்று வெளிகி உள்ளது. இதில் தேர்ச்சி விகிதத்தில் பின் தமிழகம் தங்கியுள்ளது. நேற்று யுபிஎஸ் சி நடத்தும் 2021ம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியானது. இந்திய அளவில் சுமார் 685 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் இருந்து 27 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 19 மாணவர்கள் சனங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள். இத்தேர்வில் இந்திய அளவில் சுமார் 261 பேர் தேர்ச்சி […]

Continue reading …

இன்றுடன் முடிந்தது பத்தாம் வகுப்பு தேர்வுகள்!

Comments Off on இன்றுடன் முடிந்தது பத்தாம் வகுப்பு தேர்வுகள்!

10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்றுடன் முடிவடைந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படாமலே அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. இந்த வருடம் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு நிச்சயம் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி முடிவடையும் என்றும், அதேபோல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ம் தேதி முதல் மே 30-ம் தேதி வரை நடைபெறும் என்றும் 11ம் […]

Continue reading …

பெண் அதிகாரி வெட்டு!

Comments Off on பெண் அதிகாரி வெட்டு!

அரசு பெண் அதிகாரி ஒருவரை இளநிலை உதவியாளரே அரிவாளால் வெட்டியுள்ளார். தேனியில் பெருந்திட்ட வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் ராஜராஜேஸ்வரி (வயது 50) திட்ட அலுவலராக பணியாற்றி வருகிறார். இளநிலை உதவியாளராக உமாசங்கர் (40) என்பவர் இளநிலை உதவியாளராக பணியாற்றினார். இன்று பகல் 1.30 மணியளவில் திட்ட அலுவலகத்துக்கு வந்துள்ளார் உமாசங்கர். அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ராஜராஜேஸ்வரியில் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அங்கு ராஜராஜேஸ்வரியை உமாசங்கர் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. […]

Continue reading …