Home » Archives by category » தமிழகம் (Page 260)

இனி கைரேகைக்கு பதில் கண்கருவிழி

Comments Off on இனி கைரேகைக்கு பதில் கண்கருவிழி

அமைச்சர் சக்கரவாணி ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு இனி கைரேகைக்கு பதில் கண் கருவிழி கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதுபற்றி அவர் பேசியபோது, “தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி கடத்தல் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளிடம் அரிசி கடத்தல் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஆலோசனை செய்யப்பட்டு, ரேஷன் அரிசி கடத்தலில் யார் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரிசி கடத்தலை தடுக்கும் விதமாக […]

Continue reading …

ஆன்லைன் ரம்மி குறித்து தமிழக டிஜிபி எச்சரிக்கை!

Comments Off on ஆன்லைன் ரம்மி குறித்து தமிழக டிஜிபி எச்சரிக்கை!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் விழிப்புணர்வு குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். மக்களிடையே ஆன்ட்ராய்டு போன் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி மோசடி விளையாட்டுகளால் பாதிக்கப்பட்டு பலர் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளது. தன்னிடமிருந்த பணத்தை மட்டும் இழந்தது போதாமல், பலர் கடன் வாங்கி விளையாடி ஏமாந்து, கடனையும் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதுகுறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு “சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டு […]

Continue reading …

7 பேருக்கு மஹாராஷ்டிராவில் ஒமிக்ரான்!

Comments Off on 7 பேருக்கு மஹாராஷ்டிராவில் ஒமிக்ரான்!

புதிய வகை ஒமிக்ரான் மஹாராஷ்டிராவில் ஏழு பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இது மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பாதிப்புகள் அதிகரித்து நிலையில், வேறுபட்ட நிலையில் தொடர்ந்து பரவி பாதிப்பு அதிகரித்து வருகின்றன. தற்போது ஆப்பிரிக்காவில் இருந்து பரவ தொடங்கியுள்ள புதிய வகை ஒமிக்ரான் பாதிப்பு பீதியை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் புதிய வகை ஒமிக்ரான் மகாராஷ்டிராவில் 7 பேருக்கு உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா மாதிரிகள் பரிசோதனையில் 4 பேருக்கு பி.ஏ.4 வகை ஒமிக்ரானும், 3 […]

Continue reading …

100 மீட்டர் உள்வாங்கிய கடல்

Comments Off on 100 மீட்டர் உள்வாங்கிய கடல்
100 மீட்டர் உள்வாங்கிய கடல்

ராமேஸ்வரத்தில் கடலின் நீர் மட்டம் 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கி உள்ளது. தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில் கடல் நீர் உள்வாங்கி வருவது தொடர்ந்து நடைபெறும் ஒன்றானது. சமீபத்தில் திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதை அடுத்து பக்தர்கள் பெரும் ஆர்வத்துடன் பார்த்தனர். இந்நிலையில் இன்று திடீரென ராமேஸ்வரம் கடலின் நீர்மட்டம் 100 மீட்டர் தூரத்திற்கு உள் வாங்கி உள்ளது. ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் சங்குமால் கடற்கரை பகுதியில் 100 மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் உள் வாங்கியதால் கடலுக்கு அடியில் […]

Continue reading …

மு.க.ஸ்டாலினுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

Comments Off on மு.க.ஸ்டாலினுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்துள்ளார். இச்சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சந்திப்பின் போது முன்னாள் பாமக தலைவர் ஜிகே மணி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். பாமக தலைவராக புதிதாக தேர்வு செய்யப்பட்டதையடுத்து முதல்வரை சந்தித்து அவரிடம் அன்புமணி வாழ்த்து பெற்றதாக கூறப்படுகிறது. அதிமுக […]

Continue reading …

நேரில் சென்று இரங்கல் தெரிவித்த சூர்யா!

Comments Off on நேரில் சென்று இரங்கல் தெரிவித்த சூர்யா!

நாமக்கல் மாவட்ட ரசிகர் மன்ற செயலாளராக பணிபுரிந்தவர் ஜெகதீஷ். அவர் திடீரென உயிரிழந்ததை அடுத்து சூர்யா நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார். ஜெகதீஷின் மறைவு குறித்து தகவல் அறிந்த சூர்யா உடனடியாக நாமக்கல் சென்று அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது மனைவி குழந்தைகளுக்கு ஆறுதல் கூறிய சூர்யா, உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார்.

Continue reading …

முதலமைச்சர் ஸ்டாலினின் 5 கோரிக்கைகள்!

Comments Off on முதலமைச்சர் ஸ்டாலினின் 5 கோரிக்கைகள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை வந்த பிரதமர் மோடியிடம் மிக முக்கியமான ஐந்து கோரிககைகளை முன் வைத்துள்ளார். * மீனவ சமுதாய மக்களின் முக்கியப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கச்சத்தீவை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். * மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில் தொடக்கத்தில் கொடுக்கும் திட்டத்தின் பங்கை திட்டம் முடியும் வரை தொடர வேண்டும் * மாநிலத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் * இந்திக்கு […]

Continue reading …

பிரதமர் திறந்த வைத்த ரயில் பாதைகள்!

Comments Off on பிரதமர் திறந்த வைத்த ரயில் பாதைகள்!

இன்று பிரதமர் மோடி சென்னை வந்தார். அவர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தமிழகத்தில் உள்ள பல்வேறு ரயில் பாதைகளை தொடங்கி வைத்தார். பெங்களூரு-விலிருந்து சென்னை நான்கு வழி விரைவு சாலையின் 3ம் கட்ட பணி, துறைமுகம் – மதுரவாயல் 2 அடுக்கு மேல் நிலை சாலை, ரூ.450 கோடி செலவில் மதுரை – தேனி அகலப்பாதையில் ரயில் சேவை, ரயில் நிலையங்களின் மறு சீரமைப்பு பணிகள், ரூ.256 கோடி செலவில் […]

Continue reading …

மாணவியையே கடத்திய ஆசிரியர்!

Comments Off on மாணவியையே கடத்திய ஆசிரியர்!

தருமபுரியில் 8ம் வகுப்பு மாணவியை அவரது ஆசிரியரே கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக முபாரக் என்பவர் அதே பள்ளியில் 8ம் வகுப்பு படித்த மாணவி ஒருவரை ஆசை வார்த்தைகள் பேசி இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார் முபாரக் அயோத்திப்பட்டினம் பகுதியில் சென்றதை சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டுபிடித்தனர். அவரை மொரப்பூரில் வைத்து கைது செய்த போலீசார் […]

Continue reading …

காயத்ரி ரகுராம் திமுகவை சாடல்!

Comments Off on காயத்ரி ரகுராம் திமுகவை சாடல்!

பாஜக கட்சியைச் சேர்ந்தவரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் இனிமேல் திமுகவால் ஸ்டிக்கர் ஒட்ட முடியாது: என கூறியுள்ளார். மத்திய அரசு ஏற்கனவே அமல்படுத்திய திட்டங்களைத்தான் திமுக அறிவிக்கிறது. அப்படி அறிவித்த திட்டங்களில் மேல் திராவிட மாடல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளதாகவும் பாஜகவினர் கூறி வருகின்றனர். அவ்வகையில் இன்று நடிகையும், பாஜக பிரபலமான காயத்ரி ரகுராம் “இனிமேல் திமுகவால் மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்ட முடியாது. திமுகவால் சமூக நீதி மற்றும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை வெறும் […]

Continue reading …