Home » Archives by category » தமிழகம் (Page 268)

சனிக்கிழமையிலும் ரிஜிஸ்டர் ஆபீஸ் உண்டு

Comments Off on சனிக்கிழமையிலும் ரிஜிஸ்டர் ஆபீஸ் உண்டு

தமிழக அரசு பொதுமக்களின் வசதிக்காக வரும் காலங்களில் சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கும் என அறிவித்துள்ளது. மேலும் விடுமுறை நாளன்று பத்திரப்பதிவு பணியை மேற்கொள்ளும் வகையில் சார்பதிவாளர் அலுவலகங்களில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பத்திர பதிவு செய்யும் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continue reading …

புதியதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம்

Comments Off on புதியதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம்

சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம், தமிழகத்தில் புதிய சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என கூறியுள்ளார். இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், “தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சித்தா, யுனானி, ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் புதிய பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும். தமிழ்நாடு இயல் இசை கவின் கலை பல்கலைக்கழகம் தவிர அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பிற அனைத்து பல்கலைக்கழகங்களிலும் வேந்தராக ஆளுநர் இருந்து வரும் நிலையில் புதிதாக தொடங்கப்படும் […]

Continue reading …

மகப்பேறு உதவித்தொகை உயர்வு!

Comments Off on மகப்பேறு உதவித்தொகை உயர்வு!

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கட்டுமான தொழிலாளர் நல வாரிய பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு உதவித்தொகை ஆறாயிரத்திலிருந்து பதினெட்டாயிரமாக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார். இன்று சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் விபத்தில் சிக்கிய கட்டுமான தொழிலாளர்களுக்கான உதவித்தொகை ஒரு லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் எனவும் அறிவிப்பு செய்துள்ளார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்களின் இந்த அறிவிப்பை அடுத்து கட்டுமான தொழிலாளர் நல வாரிய பெண் தொழிலாளர்கள் தங்களது நன்றியை தமிழக அரசுக்கு […]

Continue reading …

விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு!

Comments Off on விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு!

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என கூறினார். ஏற்கனவே ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச இணைப்பு வழங்கப்படும் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று சட்டமன்றத்தில் கூறியுள்ளார். தமிழக அரசு விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்பது இந்த அறிவிப்பில் இருந்து தெரியவருகிறது என அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Continue reading …

ரேசனில் புதிய திட்டம்

Comments Off on ரேசனில் புதிய திட்டம்

தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி ரேசன் கடைகளில் கண் கருவிழி சரிபார்க்கும் முறை முன்னோட்டத் திட்டமாகச் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். தமிழக சட்டபபேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று ரேசன் கடைகளில் உணவுப்பொருள் வழங்கல் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்து பேசிய தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி, ரேசன் கடைகளில் உள்ள சரிபார்க்கும் கருவியில் விரல் ரேசனை பதிவு செய்வதில் சில நேரங்களில் தோல்வி ஏற்படுவதாகவும் அப்போது, கையெழுத்துப் பெற்று பொருட்கள் வழங்கப்படுவதாககவும் கூறினார்.

Continue reading …

முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்!

Comments Off on முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்!

மறுபடியும் முதலிலிருந்தா…..? ஆமாம் திடீரென அதிகரிக்கும் கொரோனா தொற்று இந்த கேள்வியை ஒவ்வொருவர் மனதில் கேட்க வைத்திருக்கிறது.- இதனால் மீண்டும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.   உலகம் முழுவதும் கொரோனாவின் ஆல்பா, பீட்டா, ஒமிக்ரான் என பல்வேறு வகைகளும் பரவி மக்களை பாதித்து வருகிறது. ஒமிக்ரானை விட வேகமாக பரவும் ஒமிக்ரானின் புதிய திரிபான எக்ஸ் இ என்ற தொற்று சமீபத்தில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டது. இதே போல் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தொற்று எண்ணிக்கை உயர்ந்து […]

Continue reading …

மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவு

Comments Off on மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவு

மருத்துவக் கல்வி இயக்ககம் தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளது.   வட மாநிலங்கள் மற்றும் சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா பரவல் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவம் மற்றும் செவிலிய மாணவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும், தடுப்பூசி முகாம்களின் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்றும் மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா 4வது அலையை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக […]

Continue reading …

கொடநாடே எங்களுக்கு கோயில்!

Comments Off on கொடநாடே எங்களுக்கு கோயில்!

சசிகலா தனது பேட்டியில் கொடநாடு எஸ்டேட் என்பது மற்றவர்களுக்கு சாதாரண இடமாக இருக்கலாம், ஆனால் எங்களுக்கு அது கோயில் என கூறியுள்ளார்.   கடந்த சில ஆண்டுகளாக கொடாநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை கொள்ளை குறித்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே இந்த வழக்கில் பல பிரமுகர்களிடம் விசாரணை நடந்து உள்ளது. முதல்கட்ட விசாரணை: சசிகலாவுக்கு கொடாநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை கொள்ளை விசாரணை தொடர்பாக சம்மன் அனுப்பட்டது. இதில் முதல் நாள் விசாரணை நான்கு […]

Continue reading …

மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி

Comments Off on மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி

மாநில விளையாட்டுத்துறை தொடர்பாக விதி எண் 110 கீழ் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவை, இளைஞர் நலன் கருதி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.   அந்த அறிவிப்பில் சென்னை அருகே பிரம்மாண்ட விளையாட்டு நகரம் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 4 மண்டலங்களில் தலா ஒரு ஒலிம்பிக் பயிற்சி அகாடமி அமைக்கப்படும் எனவும், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தலா ரு.3 கோடி செலவில் விளையாட்டு அரங்கங்கள் அமைக்கபப்டும் எனவும், ரூ.22 கோடி ஒலிம்பிக் தங்கப்பதக்கம் தேடுதல் திட்டம் செயல்படுத்தப்படும் […]

Continue reading …

திருச்சி மாவட்டத்திற்கு 29ஆம் தேதி விடுமுறை!

Comments Off on திருச்சி மாவட்டத்திற்கு 29ஆம் தேதி விடுமுறை!

வரும் ஏப்ரல் 29ம் தேதி அன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டம் ஏப்ரல் 29ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேரோட்டத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீரங்கம் கோயில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை என திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார். இதனையொட்டி அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் […]

Continue reading …