Home » Archives by category » தமிழகம் (Page 273)

சென்னை, பேரூரில் 6078 கோடி மதிப்பில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம்

Comments Off on சென்னை, பேரூரில் 6078 கோடி மதிப்பில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம்

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை சென்னை கடற்கரை சாலையில் உள்ள பேரூரில் ரூ.6,078 கோடி மதிப்பில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தை அமைக்க உள்ளது.   நாள் ஒன்றுக்கு 40 கோடி லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட இந்த திட்டத்தை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை மற்றும் தமிழக அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் மூலம் தாம்பரம், பல்லாவரம், பெருங்களத்தூர், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 23 லட்சம் மக்கள் பயன் பெறுவார்கள். […]

Continue reading …

9 பாலங்களை திறந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Comments Off on 9 பாலங்களை திறந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.310.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 9 பாலங்களை இன்று திறந்தார்.   தலைமைச் செயலகத்தில், இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெடுஞ்சாலைத் துறை சார்பில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,திருவண்ணாமலை,வேலூர்,விழுப்புரம்,கோயம்புத்தூர். மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 310 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஆறு இரயில்வே மேம்பாலங்கள், ஒரு இரயில்வே கீழ்ப்பாலம், ஒரு உயர்மட்டப் பாலம் மற்றும் ஒரு பல்வழிச் சாலை […]

Continue reading …

டாஸ்மாக் பார்களை மூட உத்தரவுக்கு ஐகோர்ட் தடை!

Comments Off on டாஸ்மாக் பார்களை மூட உத்தரவுக்கு ஐகோர்ட் தடை!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை மூடவேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் முதன்மை அமர்வு தடை விதித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை 6 மாதங்களுக்கு மூடவேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்த நிலையில் இந்த புதிய உத்தரவு வெளியாகியுள்ளது. இதன்படி தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் பார்களை மூட […]

Continue reading …

டில்லியில் திமுக அலுவலகம் திறப்பு

Comments Off on டில்லியில் திமுக அலுவலகம் திறப்பு

டெல்லியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா- கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைத்தார். கோலாகலமாக நடைபெறும் திறப்பு விழாவில், மத்திய அமைச்சர்கள், சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்பட பல கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். கட்சி அலுவலகத்திற்கு வந்தடைந்த மு.க.ஸ்டாலின் சோனியா காந்தி அவர்களுக்காக காத்திருந்தார். சற்று நேரத்தில் வந்தடைந்த சோனியா காந்தியை வரவேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அண்ணா சிலையை திறந்து வைத்தார் […]

Continue reading …

வரும் கல்வியாண்டில் வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு!

Comments Off on வரும் கல்வியாண்டில் வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறை வரும் கல்வியாண்டில் வகுப்புகள் தொடங்கும் தேதியை அறிவித்துள்ளது. 2022-23 கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 13ம் தேதி தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 24ம் தேதி தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் தாமதமாக நடைபெறுவதால் ஜூன் 13ம் தேதி அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்படுகிறது.

Continue reading …

சொத்து வரிகள் உயர்வு!

Comments Off on சொத்து வரிகள் உயர்வு!

தமிழ்நாடு அரசு சொத்தின் மீதான வரிகளை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்…   சென்னை மாநகராட்சியின் பிரதானப் பகுதிகளில் 600 சதுர அடிக்கு குறைவான குடியிருப்பு கட்டடங்களுக்கு 50% சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 600 முதல் 1,200 சதுர அடி வரையுள்ள குடியிருப்புகளுக்கு 75%, 1,201 முதல் 1,800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்புகளுக்கு 100% சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 1,801 சதுர அடிக்கு மேல் சொத்து வரி 150% உயர்த்தப்படுகிறது. இதேபோல, சென்னையோடு […]

Continue reading …

அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மிதமான மழை!

Comments Off on அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மிதமான மழை!

தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் தான் இதற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெறிக்கிறது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் பலர் சாலையோர இளநீர் கடைகள், பழச்சாறு கடைகளை நாடும் நிலை உள்ளது. இப்படி இருக்கையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டில் அடுத்த […]

Continue reading …

தீட்சிதர்களுக்கு ஆதரவாய் நின்று, தமிழையும், தமிழர்களையும் வஞ்சிப்பதுதான் திராவிட மாடலா? – சீமான் !

Comments Off on தீட்சிதர்களுக்கு ஆதரவாய் நின்று, தமிழையும், தமிழர்களையும் வஞ்சிப்பதுதான் திராவிட மாடலா? – சீமான் !

சிதம்பரம் நடராசர் கோயிலிலுள்ள திருச்சிற்றம்பலம் மேடையில் தேவாரமும், திருவாசகமும் ஓதி, தமிழில் வழிபாடு செய்ய, அனுமதிக்கக் கோரிப் போராடுவதற்கு விதிக்கப்பட்டத் தடை, கடும் எதிர்ப்புக்குப் பின் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறதென்றாலும், ‘எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!’ எனும் முழக்கத்தை முன்வைத்து, ஆட்சிக்கு வந்த திமுகவின் அரசாட்சியின் கீழ் தமிழில் வழிபாடு செய்யவே போராட வேண்டிய நிலையிருப்பதும், அதற்கே அனுமதி மறுத்து, தடைவிதித்துப் பின், திரும்பப் பெறுவதுமானக் கெடுபிடியானப் போக்குகள் கடும் கண்டனத்திற்குரியது. சோழ மன்னர்களால் கட்டப்பட்ட சிதம்பரம் நடராசர் […]

Continue reading …

டாக்டர் பட்டம் பெற்றார் சிம்பு !

Comments Off on டாக்டர் பட்டம் பெற்றார் சிம்பு !

வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் நடிகர் சிலம்பரசனுக்கு இன்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.     சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், வேந்தருமான ஐசரி கே.கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் சிங் தாக்கூர் காணொலி மூலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.     அவருடன் சேர்ந்த தொழிலதிபர் […]

Continue reading …

ஜனவரி 14 – 18 அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் அனுமதியில்லை – தமிழக அரசு !

Comments Off on ஜனவரி 14 – 18 அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் அனுமதியில்லை – தமிழக அரசு !

ஜனவரி 14 முதல் 18 வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவிப்பு.    தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள நிலையில், மருத்துவமனைகளில் படுக்கைகள், மருத்துவ வசதிகளையும் அதிகப்படுத்தி வருகிறது.      இந்நிலையில் இருப்பினும் நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதைத் தவிர்க்க மாநிலத்தில் வரும் ஜனவரி 31 வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. […]

Continue reading …