
சென்னை டு மும்பை ரயில் பயணம் இனி ஈஸி சென்னையில் இருந்து மும்பைக்கு விமானத்தில் சுமார் இரண்டு மணி நேரத்தில் சென்று விடலாம்.ரயிலில் பயணித்தால், 23 மணி நேரம் ஆகும்.இந்த பயண நேரத்தை குறைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.சென்னை- மும்பை இடையேயன ரயில் பாதையை தரம் உயர்த்தியும், சில இடங்களில் புது ரயில் பாதைகள் அமைத்தும், பயண நேரத்தை குறைக்கும் நடவடிக்கையில் ரயில்வே இறங்கியுள்ளது. மணிக்கு நூறு மைல் வேகத்தில் ரயில் செல்லும் வகையில் பாதை தரம் உயர்த்தப்படும். […]
Continue reading …
கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதை அடுத்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வால் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.முதலில் 120 மின்சார ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது தினமும் 500 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது கூடுதலாக 160 மின்சார ரயில்கள் இன்று முதல் இயக்கப்பட உள்ளது. கூட்ட நெரிசல் காரணமாக கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் பயணிகள் நலனை […]
Continue reading …
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி அவரது ரசிகர்கள் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் வீடு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நடிகர் ரஜினிகாந்த் நாளை மறுநாள், அதாவது 31 -ம் தேதி அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவதாக தெரிவித்திருந்தார். இதனால், அவரது அறிவிப்புக்காக அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியல் கட்சி தொடங்கும் முடிவை தாம் கைவிடுவதாகவும், அதற்காக ரசிகர்களும், பொது மக்களும் தன்னை மன்னிக்க […]
Continue reading …
நாலு பேர் நாலு விதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. அதனால் நான் கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்திருக்கும் ரஜினியின் முடிவு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ‘அரசியலுக்கு வரவில்லை’ என்பது ரஜினியின் முடிவல்ல. பாபாவின் முடிவு.பாபா சொன்னால்தான் எதையும் செய்வேன் என எம்மிடம் ஒருமுறை கூறினார். தற்போது உயர் ரத்தஅழுத்தம் பாபா அவருக்குச் செய்த எச்சரிக்கையென கருதுகிறார் என்று தெரிவித்துள்ளவர், […]
Continue reading …
பணமில்லா வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் ஆன்லைன் மூலம் பணபரிவர்த்தனையை இந்தியா முழுவதிலும் மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதனை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் பல செயலிகளும் மக்களுக்கு சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் LPG சிலிண்டரை Paytm-லிருந்து முன்பதிவு செய்வதன் மூலம் சுமார் ரூ.500 வரை கேஷ்பேக் பெறலாம். LPG சிலிண்டர்கள் 700 முதல் 750 ரூபாய் வரை இருக்கும்நிலையில் 200 முதல் 250 ரூபாய் செலவில் Paytm-ன் சிறப்பு கேஷ்பேக்கைப் பயன்படுத்திக் கொள்ளலாம். […]
Continue reading …
இன்று சேலம் எடப்பாடித்தொகுதியில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது, ‘பொங்கல் பண்டிகையொட்டி ஒவ்வொரு குடும்ப அட்டை தாரருக்கும் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும்’ என்று தெரிவித்தார். இது குறித்து அவர் கூறும் போது, ‘ பொங்கல் பண்டிகை வருவதை யொட்டி ஒவ்வொரு குடும்ப அட்டை தாரருக்கும் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும். இந்தத்திட்டம் 2021 ஆம் ஆண்டு […]
Continue reading …
காட்பாடி அருகே மூதாட்டியை கீழே தள்ளி 8.5 சவரன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.வேலூர் மாவட்டம், காட்பாடி தாராபடவேடு பகுதியில் வசித்து வரும் நடராஜன் என்பவரின் மனைவி ராணி(60). இவர் சில தினங்களுக்கு முன்னர், வீட்டின் அருகே இருக்கும் கடைக்கு நடந்து சென்றிருக்கிறார். அப்போது, எதிரே பைக்கில் வந்த 2 பேர் மூதாட்டியை கீழே தள்ளி செயினை அறுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக மூதாட்டி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் […]
Continue reading …
தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.தனியார் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூரில் இன்று (டிச.17) நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த 460 தனியார் பள்ளிகளுக்குத் தொடர் அங்கீகார ஆணைகளை வழங்கினார்.இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது:“இந்தியாவிலேயே தமிழக அரசு அனைத்துத் துறைகளிலும் […]
Continue reading …
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் பணி கடந்த 2 ஆண்டுகளாக நினைவிட கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த நினைவிடத்தின் மையப்பகுதியில் பீனிக்ஸ் பறவை, இடது புறத்தில் அறிவு சார் பூங்கா, வலது புறத்தில் அருங்காட்சியம் அமைக்கப்படுகிறது. இதை தவிர்த்து நடைபாதை, குடிநீர் வசதி, செயற்கை நீரூற்று உள்ளிட்டவை ஏற்படுத்தப்படுகிறது. இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த பீனிக்ஸ் பறவை இறக்கை வடிவமைப்பு பணி கடந்த நவம்பர் மாதத்தில் முடிவடைந்தது. இதையடுத்து ஜெயலலிதா நினைவு மண்டபத்தில் அருங்காட்சியகம் மற்றும் […]
Continue reading …
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுசேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.மழைக்கு வாய்ப்பு:புரவி புயலுக்கு பின் தமிழகத்தில் பகல் நேரத்தில் ஒரு வாரமாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் இரவு வேளைகளில் குளிர்ந்த சூழல் நிலவுகிறது. தற்போது தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது குமரி கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி […]
Continue reading …