Home » Archives by category » தமிழகம் (Page 292)

பெரும்பாக்கத்தில் புதிய காவல் நிலையத்தை காவல் ஆணையர் திறந்துவைத்தார்!

Comments Off on பெரும்பாக்கத்தில் புதிய காவல் நிலையத்தை காவல் ஆணையர் திறந்துவைத்தார்!

சென்னை பெரும்பாக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய காவல்நிலையத்தை சென்னை மாநகரா காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இன்று திறந்து வைத்து, காவல் நிலைய பணிகளை துவக்கி வைத்தார். பெரும்பாக்கம், எழில்நகர், 8 மாடி அடுக்குக் குடியிருப்பு வளாகத்தில் இந்த புதிய காவல்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காவல்நிலையத்தின் முதல் காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ள ரஞ்சித்குமார், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களை வாழ்த்தினார். காவல்நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டார். இப்புதிய காவல்நிலையத்தின் ஆய்வாளர் ரஞ்சித் குமாரின் செல்லிடப்பேசி எண்களான 9840619597 […]

Continue reading …

சென்னை கல்லூரி விடுதியில் நடத்தப்பட்ட சோதனை 210 பேருக்கு கொரோனா!!

Comments Off on சென்னை கல்லூரி விடுதியில் நடத்தப்பட்ட சோதனை 210 பேருக்கு கொரோனா!!

சென்னை கல்லூரி விடுதியில் நடத்தப்பட்ட சோதனை 210 பேருக்கு கொரோனா!! சென்னையில் உள்ள கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் மாணவர்கள் உள்பட 210 பேருக்கு கரோனா உறுதியானதாக சென்னை மாநகராட்சித் தெரிவித்துள்ளது. ‘டிசம்பர் 16- ஆம் தேதி வரை சென்னையில் உள்ள கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் மாணவர்கள் உள்பட 6,344 கரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 210 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது; 3,773 பேருக்கு நெகட்டிவ் என முடிவுகள் வந்துள்ளது. இன்னும் 2,361 பேரின் பரிசோதனை முடிவுகள் […]

Continue reading …

அரசாணைகள் தமிழில் வெளியிட கோரிய வழக்கு அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!!!

Comments Off on அரசாணைகள் தமிழில் வெளியிட கோரிய வழக்கு அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!!!

அரசாணைகள் தமிழில் வெளியிட கோரிய வழக்கு அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!!! தமிழ்நாட்டில் அரசாணைகள், சுற்றறிக்கைகள், கடிதங்கள் ஆகியவற்றை தமிழில் தயாரித்து வெளியிட உத்தரவிடக்கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பழனி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றினைத் தாக்கல்செய்திருந்தார். அதில், “தமிழ்நாட்டில் முதல் மொழியாக தமிழ், இரண்டாம் மொழியாக ஆங்கிலம் என இரட்டை மொழி கொள்கை பின்பற்றப்பட்டுவரும் நிலையில், தொன்மையான தமிழ்மொழி அரசு […]

Continue reading …

முதல்வர் குறித்து இனி விமர்சிக்க கூடாது…ஸ்டாலினை எச்சரித்த உயர்நீதிமன்றம்

Comments Off on முதல்வர் குறித்து இனி விமர்சிக்க கூடாது…ஸ்டாலினை எச்சரித்த உயர்நீதிமன்றம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து கடுமையான விமர்சனங்களை வைக்க கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மிகவும் கடுமையாக விமர்சிப்பதை ஸ்டாலின் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை. தமிழக முதலமைச்சர் குறித்து ஆதாரமற்ற விமர்சனங்கள் வைப்பதையும் மு.க ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும்.அரசியல் ஆதாயத்திற்கான தலைவர்கள் கடுமையான வார்த்தைகளை பேசுவது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல. கருத்து சுதந்திரம் என்று தலைவர்கள் தவறான வார்த்தைகளை பேசுவது […]

Continue reading …

அரையாண்டு தேர்வுகள் நடக்குமா…? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

Comments Off on அரையாண்டு தேர்வுகள் நடக்குமா…? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

அரசுப் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் பள்ளிகள் விரும்பினால் இணையவழியாக அரையாண்டு தேர்வு நடத்திக்கொள்ளலாம் என்றும் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் மொடச்சூர், அயலூர், கலிங்கியம் உள்ளிட்ட ஊராட்சிகளில் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் பணிகளைப் அமைச்சர் செங்கோட்டையன் தொடக்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தனியார் பள்ளிகள் விரும்பினால் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வை இணையவழியில் நடத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார். 50 விழுக்காடு பாடங்களைக் குறைப்பதுடன், எந்தெந்தப் […]

Continue reading …

இந்தமுறை திமுகவை வீழ்த்தினால் முடிந்தது கதை – அமைச்சர் தங்கமணி!!

Comments Off on இந்தமுறை திமுகவை வீழ்த்தினால் முடிந்தது கதை – அமைச்சர் தங்கமணி!!

மணப்பாறையில் அதிமுக மகளிர்குழு பூத் கமிட்டியை துவக்கி வைத்து, கையேட்டினை வெளியிட்டு ஆலோசனை வழங்கும் விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி கலந்து கொண்டார். அந்த விழாவில் எல்.எல்.ஏ சந்திரசேகர், முன்னாள் எம்.பி.குமார், ரத்தினவேல், முன்னாள் அமைச்சர் பேராசிரியர் பொன்னுச்சாமி ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேர்தல் வந்தாலே பொய்யான வாக்குறுதிகளை தருவது திமுகவின் வழக்கம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில், நகை கடன்களை தள்ளுபடி செய்வதாக கூறி வாக்கு கேட்டு வெற்றி பெற்றவர்கள் நாடாளுமன்றம் சென்றார்கள் […]

Continue reading …

திருமணமாகாத பெண்ணிற்கு கருக்கலைப்பு முயற்சி மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்!!

Comments Off on திருமணமாகாத பெண்ணிற்கு கருக்கலைப்பு முயற்சி மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்!!

மணப்பாறை தனியார் மருத்துவமனையில் திருமணமாகாத பெண்ணிற்கு கருக்கலைப்பு செய்ய முயற்சி செய்வதாகக் கூறி அவரது உறவினர்கள் மருத்துவமனையை நள்ளிரவில் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த தோப்புப்பட்டியைச் சேர்ந்தவர் ஆரோக்கியம் இவரது 35 வயது மகள். திருமணமாகாத இவர் அதே பகுதியை சேர்ந்த கண்ணுச்சாமி(எ)சூசை என்பவர் தோட்டத்திற்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மணப்பாறை மதுரை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அங்கு அவருக்கு […]

Continue reading …

ஜெயலலிதா சமாதியில் கைவைத்தால் கை வெட்டப்படும் அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை!!

Comments Off on ஜெயலலிதா சமாதியில் கைவைத்தால் கை வெட்டப்படும் அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை!!

ஜெயலலிதா நினைவிடத்தில் கை வைத்தால் கை வெட்டப்படும் என்றும், ஆ.ராசா வெளியே நடமாட முடியாத சூழல் ஏற்படும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரித்துள்ளார்.கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெயலலிதாவை பற்றி பேச ஆ.ராசாவிற்கு அருகதை கிடையாது என காட்டமாக கூறினார். காற்றில் கூட ஊழல் செய்ய முடியும் என்று உலகிற்கு நிரூபித்துக் காட்டிய விஞ்ஞானி ஆ.ராசா என்று விமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, 2ஜி ஊழல் வழக்கு தொடர்பாக ராசாவும் கனிமொழியும் திகார் சிறையில் இருந்தார்கள் […]

Continue reading …

TOP 100 பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த ஈரோட்டு பெண் யார் அவர்?

Comments Off on TOP 100 பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த ஈரோட்டு பெண் யார் அவர்?

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் செண்பகப்புதூரை சேர்ந்த ஒரு பெண் இந்தியாவின் 100 பணக்கார பெண்கள் பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார். இது நம்பும்படியாக உள்ளதா? என கேட்கலாம். ஆம். இதை நம்பித்தான் ஆக வேண்டும். பட்டியலில் இடம் பிடித்த சத்தியமங்கலம் சாதனை பெண்ணின் சொத்து மதிப்பு 2 ஆயிரத்து 870 கோடி ஆகும். அந்த சாதனை பெண்ணின் பெயர் டாக்டர் வித்யா வினோத். இவர் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தின் முன்னாள் மாணவி […]

Continue reading …

மீண்டும் அம்மா ஸ்கூட்டர் அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட ஆணையர் பெறுவது எப்படி?

Comments Off on மீண்டும் அம்மா ஸ்கூட்டர் அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட ஆணையர் பெறுவது எப்படி?

பணிக்கு செல்லும் பெண்களுக்கு அ.தி.மு.க அரசின் திட்டமான அம்மா ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது. தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துஉள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க அரசு தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பணிக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் அளிப்பதாக வாக்குறுதி அளித்தது. இந்நிலையில் சட்ட மன்ற தேர்தலில் வென்ற அக்கட்சியின் முதல்வர் தனது முதல் கையெழுத்தை இத்திட்டத்திற்காக போட்டார். ஆட்சிக்கு வந்த சிறிது நாட்களிலேயே இத்திட்டத்தை செயல்படுத்தவும் […]

Continue reading …