Home » Archives by category » தமிழகம் (Page 3)

பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வார்னிங்!

Comments Off on பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வார்னிங்!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டத்தை விட கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், மாநில பெற்றோர், ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ், “கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் தொல்லை விவகாரத்தில், […]

Continue reading …

ஆளுநருடன் தலைமைச் செயலாளர் சந்திப்பு!

Comments Off on ஆளுநருடன் தலைமைச் செயலாளர் சந்திப்பு!

ஆளுநர் ஆர்.என். ரவியை சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தலைமைச் செயலாளர் முருகானந்தம் சந்தித்து பேசியுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தலைமைச் செயலாளர் முருகானந்தம் சந்தித்துள்ளார். தலைமைச் செயலாளராக பொறுப்பேற்ற பின் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து முருகானந்தம் வாழ்த்துப் பெற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. 3 மூத்த அமைச்சர்கள் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, புதியவர்களுக்கு […]

Continue reading …

கொடியை அறிமுகம் செய்த விஜய்!

Comments Off on கொடியை அறிமுகம் செய்த விஜய்!

இன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்தது. இது குறித்த செய்திகள் பரபரப்பாக ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. விஜய்யுடன் கூட்டணி வைக்க சில அரசியல் கட்சி தலைவர்கள் விருப்பப்படுவதாகவும் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வம் காட்டுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. நாம் தமிழர் கட்சியின் சீமான் விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்புவதாகவும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தனித்து கட்சி நடத்திய அவரால் ஒரு இடத்தில் கூட வெல்ல […]

Continue reading …

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு அதிரடி உத்தரவு!

Comments Off on சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு அதிரடி உத்தரவு!

  சென்னை உயர்நீதிமன்றம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் 6 கால பூஜை தவிர மற்ற நேரங்களில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதை தடுக்கக் கூடாது என பொது தீட்சிதர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை மூன்றாம் தேதி சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆணி திருமஞ்சன தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தில் சம்பந்தமூர்த்தி ராமன் என்பவரால் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. அதில், ஆணி திருமஞ்சன திருவிழாவின் போது பக்தர்கள் கனக சபையில் ஏறி […]

Continue reading …

கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

Comments Off on கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

  தமிழ்நாடு அரசு திருச்சி மாநகராட்சியை 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் மட்டுமே உள்ளன. அதனால் சுற்றுவட்டாரத்திலுள்ள வார்டுகளை இணைப்பது குறித்த அறிவிப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இன்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்த திருச்சி மணிகண்டம் ஒன்றியம் தாயனூர் கிராமம் புங்கனூர் ஊராட்சியை சேர்ந்த கவுன்சிலர் கார்த்திக் தலைமையில் ஊராட்சி முக்கியஸ்தர்கள் புங்கனூர் ஊராட்சியை […]

Continue reading …

நாளை முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு!

Comments Off on நாளை முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு!

நாளை முதல் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு கலந்தாய்வு தொடங்க உள்ளது. மொத்தம் 10 ஆயிரம் இடங்களுக்கு 40 ஆயிரம் மாணவர்கள் போட்டியிடுகின்றனர். அதாவது ஒரு இடத்திற்கு நான்கு மாணவர்கள் போட்டியிடுகிறார்கள். தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னை கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி, 22 தனியார் மருத்துவக் கல்லூரி, மூன்று அரசு பல் மருத்துவமனை கல்லூரி, 20 தனியார் மருத்துவமனை கல்லூரிகள் உள்ளது. இந்த கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் […]

Continue reading …

யுபிஎஸ்சி நேரடி நியமன முறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு!

Comments Off on யுபிஎஸ்சி நேரடி நியமன முறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு!

  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுப் பணிகளில் மூத்த அதிகாரிகளின் நேரடி நியமனத்துக்கான நடைமுறை ரத்து செய்யப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். மத்திய அரசுப் பணிகளில் மூத்த அதிகாரிகளின் நேரடி நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதைத்தொடர்ந்து நேரடி நியமனத்துக்கான நடைமுறையை நிறுத்தி வைக்கும்படி, யுபிஎஸ்சி தலைவருக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார். இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வலைதளப்பதிவில், “சமூக நீதிக்கு வெற்றி. இந்தியா கூட்டணியின் […]

Continue reading …

விஜய்க்கு அழைப்பு விடுத்த அண்ணாமலை!

Comments Off on விஜய்க்கு அழைப்பு விடுத்த அண்ணாமலை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக தலைமையில் மாமன் மச்சான் கூட்டணி அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் பாஜக ஆட்சி வரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக பங்காளி கட்சிகள் தான், ஆனால் அந்த பங்காளிகளுடன் நாங்கள் ஒருபோதும் சேரப் போவது கிடையாது. பாஜக தலைமையில் மாமன் மச்சான் கூட்டணி அமைக்கப்படும். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கூட்டணிக்கு அழைத்தால் அவருடன் கூட்டணி வைப்போம். […]

Continue reading …

கொந்தளிக்கும் இபிஎஸ்!

Comments Off on கொந்தளிக்கும் இபிஎஸ்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டில்லிக்கு காவடி எடுத்து தப்பிவிடலாம் என்று நினைத்தால் புத்திசாலிகளான தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று திமுக அரசுக்கு எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர், “பதவி வரும்போது பணிவு வர வேண்டும், துணிவும் வர வேண்டும் தோழா என்று நம்மை எல்லாம் ஆளாக்கிய மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் கூறியிருக்கிறார். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின், பணிவு என்றால் கிராம் என்ன விலை என்று […]

Continue reading …

பள்ளி மாணவி பலாத்காரம் குறித்து கனிமொழி வருத்தம்!

Comments Off on பள்ளி மாணவி பலாத்காரம் குறித்து கனிமொழி வருத்தம்!

திமுக எம்.பி கனிமொழி பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தின் வடு இன்னமும் நீங்காமல் உள்ளது. கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழக முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் தளத்தில், “கிருஷ்ணகிரியில் 13 வயது பள்ளி மாணவி […]

Continue reading …