*ராமேஸ்வரத்தில் திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பரபரப்பு* *கடல் நீர் உள்வாங்கியதால் தரை தட்டி நிற்கும் நாட்டுப் படகுகள் – மீனவர்கள் அச்சம்* *காலநிலை மாற்றம் காரணமாக கடல் உள்வாங்கியதாக கடல்வள ஆராய்ச்சியாளர்கள் தகவல்* *சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு வந்துவிடும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம*
Continue reading …முன்னாள் அதிமுக அமைச்சர் மீதான வழக்கை சிபிசிஐடி க்கு மாற்ற நடிகை மனு. நடிகை சாந்தினி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கர்ப்பம் ஆக்கினார். பின்னர் கருவை கலைக்குமாறு மிரட்டினார். இது தொடர்பான புகாரை, மணிகண்டன் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வழக்கு பதிவு செய்ய விடாமல் தடுத்து விட்டார். எனவே, வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” என […]
Continue reading …பட்டா நிலத்தில் அனுமதி பெறாமல் திருட்டுத்தனமாக இரவில் செம்மண் எடுத்தல். நடவடிக்கை எடுக்க கோரி ஆண்டிபட்டி விவசாயிகள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையடிவார கிராமமான பாலக்கோம்பையை சேர்ந்த விவசாய தம்பதியினர் வேல்முருகன் கோமதி அவர்களுக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் பரப்பளவு உள்ள தோட்டம் மற்றும் காடு கிராமத்தின் அருகே உள்ளது. இந்தத் தோட்டத்தில் தினந்தோறும் இரவில் அதே கிராமத்தைச் சேர்ந்த காளிராஜ் என்பவர் அரசு அனுமதி பெறாமலும் […]
Continue reading …குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி. 8 நாட்களுக்கு பின் மெயின் அருவியில் அனுமதி =சுற்றுலா பயணிகள் உற்சாகம். மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவிகளிலும் குளிக்க அனுமதி. மெயின் அருவியில் ஆண்கள் பகுதி நடைபாதையில் டைல்ஸ் பதிக்கும் பணிகள் நடைபெறுவதால், பெண்கள் பகுதி வழியாக தடுப்பு அமைத்து ஆண்கள் அனுமதி.
Continue reading …மதுரையில் அறுபத்து மூன்று நாயன்மாா்களின் வீதியுலா. மதுரை ஆதீன குரு மூலவரான திருஞானசம்பந்தரின் குருபூஜை விழா, மதுரை ஆதீனம் சாா்பில், கடந்த 21-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை காலை, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் திருஞானசம்பந்தருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பிறகு, திருஞானசம்பந்தரை தங்கப் பல்லக்கில் எழுந்தருளச் செய்து, அறுபத்து மூன்று நாயன்மாா்களின் வீதியுலா நடைபெற்றது.
Continue reading …25 சிலிண்டர், ரூ. 1 லட்சத்து பத்தாயிரம் திருடிய ஓட்டுநர் கைது. மதுரை மாவட்டம் திருப்பாலையில், கேஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார் ரமேஷ். சத்திரப்பட்டியைச் சேர்ந்த சக்தி முருகன் என்பவர் கேஸ் ஏஜென்சியில் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், கலெக்சன் தொகையான 1 லட்சத்து 10 ஆயிரத்தை கையாடல் செய்த சக்தி முருகன், 25 சிலிண்டர்களையும் திருடி விற்றுள்ளார். இது குறித்து, ரமேஷ் அளித்த புகாரின் பேரில், ஓட்டுநர் சக்தி முருகனை திருப்பாலை போலீசார் நேற்று […]
Continue reading …குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 குழந்தைகள் உயிரிழப்பு. டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீ விபத்தில் இருந்து 12 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன. அதில் ஒரு குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையின் விசாரணையில் முதற்கட்ட […]
Continue reading …காவல்துறை – போக்குவரத்து துறை இடையேயான மோதல் முடிவுக்கு வந்தது. நாங்குநேரியில் அரசு பேருந்தில் காவலர் டிக்கெட் எடுப்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. டிக்கெட் எடுப்பதில் தகராறு ஏற்பட்ட நடத்துனரும், காவலரும் நேரில் சந்தித்து சமாதானம். இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி, சமாதானம் பேசி கை குலுக்கி கொண்டனர்.
Continue reading …தொடர்ந்து பெய்த மழையால் மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மாநகராட்சி வார்டு 84-வது வார்டு பகுதியில் சாக்கடை நீர் செல்லாமல் குளம் போல் தேங்கியுள்ளது. 84வது வார்டு பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரியிடம் பல்வேறு முறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் திடீரென மதுரை விமான நிலைய சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அவனியாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மணி குமார் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மார்ட்டின் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் […]
Continue reading …தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுகளுக்கான குரூப் 2, 2ஏ பாடத்திட்டத்தில் மாற்றம் செய்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளில் தனித்தனியே முதன்மைத் தேர்வு நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2024ம் ஆண்டிற்கான திருத்தியமைக்கப்பட்ட தேர்வுக்கால அட்டவணை 24.4.2024ல் வெளியிட்டபோது தேர்வர்களின் நலன் கருதி ஒருங்கிணைந்த குடிமைப் […]
Continue reading …