Home » Archives by category » தமிழகம் (Page 341)

கொரோனா வைரஸ் : பத்திரிக்கையாளர்களுக்கு பரிசோதனை மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

Comments Off on கொரோனா வைரஸ் : பத்திரிக்கையாளர்களுக்கு பரிசோதனை மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
கொரோனா வைரஸ் : பத்திரிக்கையாளர்களுக்கு பரிசோதனை மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

கோவை ஏப்ரல், 21   மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை ரேபிட் சோதனை கருவி மூலம் நடத்தப்பட்டது, இந்த முகாமில் நெற்றிக்கண் வார இதழ் கோவை மாவட்ட தலைமை நிருபர் வே. மாரீஸ்வரன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு தங்கள் ரத்த மாதிரிகளை வழங்கி கொரோனா பாதிப்பு குறித்து சோதனை செய்து கொண்டனர்.   முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி சோதனை குறித்து சுகாதாரத் துறையினரிடம் […]

Continue reading …

நடிகை ஜோதிகா மீது ஆன்மீக பேரவை கடும் கண்டனம்!

Comments Off on நடிகை ஜோதிகா மீது ஆன்மீக பேரவை கடும் கண்டனம்!
நடிகை ஜோதிகா மீது ஆன்மீக பேரவை கடும் கண்டனம்!

மயிலாடுதுறை, ஏப்ரல், 21 தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜன் மீது தேவையற்ற விமர்சனம் செய்த நடிகை ஜோதிகாவுக்கு மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை கடும் கண்டனம்.  சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் நடிகை ஜோதிகா, தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் மீது தேவையற்ற விமர்சனங்கள் செய்துள்ளார். இதற்கு மயிலாடுதுறை ஆன்மீக பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன் வெளியிட்டுள்ள கண்டன […]

Continue reading …

மதுவிலக்கை அமல்படுத்த சரியான நேரம் – காந்திய மக்கள் இயக்கம்!

Comments Off on மதுவிலக்கை அமல்படுத்த சரியான நேரம் – காந்திய மக்கள் இயக்கம்!
மதுவிலக்கை அமல்படுத்த சரியான நேரம் – காந்திய மக்கள் இயக்கம்!

சென்னை : மதுவிலக்கு தளர்த்தப்பட்ட காலம் முதல் இன்று வரை இப்படியொரு சந்தர்ப்பம் அமைந்ததில்லை. குறிப்பிட்ட சில நாட்கள் அரசாங்க விடுமுறயக கடைகள்  அடைக்கப்படும். அதுவும் முன்கூட்டியே தெரிவிப்பதால் அந்த சில நாட்களுக்கு தேவையானதை வாங்கிச் சென்றவர்களும் உண்டு. ஆனால் கடந்த ஒரு மாதம் என்பது எதிர்பாராத ஒன்று. மக்கள் வீடுகளில் குடும்படத்துடன் இருக்கும் சூழலில் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அவர்கள் மேம்பட்டு குடிப்பழக்கத்தில் இருந்து வெளிவந்திருக்கிறார்கள். எனவே மனிதர்களை சுற்றியிருக்கும் சூழல், தன்மை அவர்களை நெறிப்படுத்தும் […]

Continue reading …

கொரோனா ஆபத்தில் இதழாளர்கள்: செய்தியாளர் சந்திப்புகளை கைவிடுவீர்!

Comments Off on கொரோனா ஆபத்தில் இதழாளர்கள்: செய்தியாளர் சந்திப்புகளை கைவிடுவீர்!
கொரோனா ஆபத்தில் இதழாளர்கள்: செய்தியாளர் சந்திப்புகளை கைவிடுவீர்!

சென்னை, ஏப்ரல் 21 சென்னையில் செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள்  மூவருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. மேலும் பல பத்திரிகையாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக, அவர்களுக்கும் கொரோனா வைரஸ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிகம் ஆளாவோர் பட்டியலில் மருத்துவர்களுக்கு அடுத்தப்படியாக பத்திரிகையாளர்கள் தான் உள்ளனர். மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தில்லியிலும் கணிசமான பத்திரிகையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Continue reading …

மருத்துவமனை ஊழியர்களுக்கு உதவிய ஜோதிடர் ஷெல்வி!

Comments Off on மருத்துவமனை ஊழியர்களுக்கு உதவிய ஜோதிடர் ஷெல்வி!
மருத்துவமனை ஊழியர்களுக்கு உதவிய ஜோதிடர்  ஷெல்வி!

சென்னை : தமிழ்நாடு அரசு பன்னோக்கு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுக்காக, ஜோதிடர் ஷெல்வி, 2 டன் அரிசியை நேற்று நன்கொடையாக வழங்கினார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுக்குள் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை, தமிழக அரசு எடுத்து வருகிறது. முதல்வரின் நிவாரண நிதிக்கு, பலரும் நன்கொடை அளித்து வருகின்றனர். இதற்கிடையே, அரசியல் கட்சியினர், திரையுலக பிரபலங்கள், தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள் என பலரும், தங்களால் இயன்ற அளவுக்கு, உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், […]

Continue reading …

20 லட்சத்திற்கும் அதிகமான உணவுப் பொட்டலங்களை விநியோகித்துள்ளது இந்திய ரெயில்வே !

Comments Off on 20 லட்சத்திற்கும் அதிகமான உணவுப் பொட்டலங்களை விநியோகித்துள்ளது இந்திய ரெயில்வே !
20 லட்சத்திற்கும் அதிகமான உணவுப் பொட்டலங்களை விநியோகித்துள்ளது இந்திய ரெயில்வே !

கொவிட்-19 முடக்க நிலை காலத்தில், இந்திய ரெயில்வே ஏழைகளுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் இது வரையிலும் 20.5 லட்சத்திற்கும் கூடுதலான உணவுப் பொட்டலங்களை விநியோகித்துள்ளது. வடக்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு மற்றும் தென்மத்திய ரெயில்வே மண்டலங்களில் உள்ள புதுதில்லி, பெங்களூர், ஹுப்ளி, மத்திய மும்பை, அகமதாபாத், பூசாவல், ஹௌரா, பாட்னா, கயா, ராஞ்சி, கதிஹார், தீன் தயாள் உபாத்யாய நகர், பாலசோர், விஜயவாடா, குர்தா, காட்பாடி, திருச்சிராப்பள்ளி, தன்பத், கௌகாத்தி, சமஸ்திபூர், பிரயாக்ராஜ், இட்டாசி, விசாகப்பட்டினம், செங்கல்பட்டு, பூனா, ஹாஜிப்பூர், ராய்பூர் மற்றும் டாட்டாநகர் […]

Continue reading …

மே 3 வரை ஊரடங்கு நீடிக்கும்: தமிழக அரசு அறிவிப்பு!

Comments Off on மே 3 வரை ஊரடங்கு நீடிக்கும்: தமிழக அரசு அறிவிப்பு!
மே 3 வரை ஊரடங்கு நீடிக்கும்: தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை :  தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசு அறிவித்துள்ள மே 3ம் தேதி வரை தொடர்ந்து கடைப்பிடிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு வெளியிட்ட ஆணையில், 20.4.2020க்குப் பிறகு எந்தெந்த தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பது பற்றி மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. டெல்லி, கர்நாடகா, பஞ்சாப், தெலுங்கானா, மகாராஷ்ட்ரா, குஜராத் […]

Continue reading …

கொரோனாவால் பாதிக்கப்படும் மருத்துவப் பணியாளர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துங்கள் – டிடிவி தினகரன்

Comments Off on கொரோனாவால் பாதிக்கப்படும் மருத்துவப் பணியாளர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துங்கள் – டிடிவி தினகரன்
கொரோனாவால் பாதிக்கப்படும் மருத்துவப் பணியாளர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துங்கள் – டிடிவி தினகரன்

சென்னை  : கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியிலிருக்கும் பணியாளர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுவருவது மிகுந்த கவலை அளிக்கிறது. தலைநகர் சென்னையில் பணிபுரியும் மருத்துவர்கள் தொடங்கி கிராமப்புற செவிலியர்கள் வரை வித்தியாசமின்றி இந்தத் தொற்றுக்கு ஆளாகும் மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அரசு கவனித்து, அதைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை பணியில் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு […]

Continue reading …

மருத்துவர்களை கடவுளாக மதிப்பது உண்மை எனில், மனிதர்களாகவாவது இறுதிச் சடங்கு செய்ய அனுமதிப்பீர்!

Comments Off on மருத்துவர்களை கடவுளாக மதிப்பது உண்மை எனில், மனிதர்களாகவாவது இறுதிச் சடங்கு செய்ய அனுமதிப்பீர்!
மருத்துவர்களை கடவுளாக மதிப்பது உண்மை எனில், மனிதர்களாகவாவது இறுதிச் சடங்கு செய்ய அனுமதிப்பீர்!

சென்னை : சென்னையில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சி அளித்தது என்றால், அவரது உடலை கீழ்ப்பாக்கம் இடுகாட்டில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் செய்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் இன்னும் அதிக வேதனையை அளிக்கிறது. கொரோனாவிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கான போராட்டத்தில் தங்களின் உயிரை இழந்த மருத்துவர்களுக்கு இத்தகைய அவமதிப்புகளை இழைப்பது கண்டிக்கத்தக்கது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நியூ ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும், புகழ்பெற்ற நரம்பியல் நிபுணருமான […]

Continue reading …

அடுத்த உத்தரவு வெளியாகும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும் : தமிழக அரசு

Comments Off on அடுத்த உத்தரவு வெளியாகும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும் : தமிழக அரசு
அடுத்த உத்தரவு வெளியாகும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும் : தமிழக அரசு

சென்னை : தமிழகத்தில் அடுத்த உத்தரவு வெளியாகும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு வெளியிட்ட ஆணையின் படி எந்தெந்த புதிய தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பதை பற்றி மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தது. இதற்கென, மாநில அரசு ஒரு வல்லுநர் குழுவை நியமித்து உள்ளது. அந்தகுழு, தன் முதற்கட்ட கூட்டத்தை நடத்தி, அதனுடைய […]

Continue reading …