சென்னை : இந்தியாவில் கொரோனா வைரஸ் வளர்ச்சி விகிதம் 40% குறைந்திருப்பதாகவும், தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்களில் இந்த வேகம் மேலும் குறைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருப்பது நிம்மதியளிக்கிறது. அதேநேரத்தில் இது ஆறுதல் அடைவதற்கான தகவல் தானே தவிர, அசட்டையாக இருப்பதற்கான நேரமல்ல என்பதை உணர்ந்து கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும். இந்தியாவில் ஊரடங்கு ஆணை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பாக கொரோனா வைரஸ் பரவல் 3 நாட்களில் இரட்டிப்பாகி வந்ததாகவும், கடந்த ஒரு வாரத்தில் இவ்விகிதம் 6.2 […]
Continue reading …மயிலாடுதுறை : சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் ஆய்வாளர் ஸ்ரீபிரியா. இவர், சீர்காழியில் உள்ள கொரோனா பாதிக்கப்பட்ட பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இவரின் கணவர் சோமசுந்தரம். இவர் நாகை மாவட்டத்தில் காவலராக பணியில் இருந்தபோது, புகாரின் அடிப்படையில் நிரந்தர பணிநீக்கம் பெற்று, நீதிமன்ற உத்தரவின் பேரில் திருவாரூர் மாவட்டம் ஏரவாஞ்சேரி காவல் நிலையத்தில் பணிக்கு சேர்ந்து, இன்று வரை மருத்துவ விடுப்பில் உள்ளார். இந்நிலையில் மேற்படி ஆய்வாளர், சீருடையில் தனது சொந்த […]
Continue reading …புது டெல்லி : அஞ்சலக ஊழியர்களுக்கு, அவர்கள் பணியில் இருக்கும்போது நோய்த் தொற்று ஏற்பட்டால், அவர்களுக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய உள்துறையின் அறிவிப்பு : அஞ்சல்துறையானது, இன்றியமையாத சேவைகளின் கீழ் வருகிறது என்பதை உறுதி செய்கிறது. கிராம அஞ்சல் சேவகர்கள் உள்ளிட்ட அஞ்சல்துறை ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு தபால்களை விநியோகிப்பது, அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கு, அஞ்சலக ஆயுள் காப்பீடு, AePS வசதியின் கீழ் எந்த வங்கியில் இருந்தும் எந்தக் […]
Continue reading …சென்னை : ஆசியா கண்டத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய “குடிசைக்குடியிருப்பு” பகுதியான மும்பை தாராவியில் எறத்தாழ ஏழு லெட்சம் மக்கள் குடியிருக்கின்றார்கள். இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து வந்திருந்து பல வகைப்பட்ட மக்கள் அங்கு வசித்து வந்தாலும் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள். கண்ணுக்கு தெரியாத கொரோனா உலகம் முழுக்க ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்தியாவில் அதுவும் மகாராஷ்ட்ராமாநிலத்தில்தான் அதிக அளவு பாதிப்பினை ஏற்ப்படுத்தி அதிலும் குறிப்பாக அம்மாநிலத்தின் தலைநகர் மும்பையின் முக்கிய பகுதியானதாராவியையும் நிலைகுலைய செய்து கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் இதுவரை 2800 க்கும் மேற்ப்பட்டவர்கள் […]
Continue reading …சென்னை : ஊரடங்கு தொடர்பாக பாரதப் பிரதமரின் அறிவிப்பு மற்றும் மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிமுறைகள் குறித்து தமிழ்நாட்டில் எடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (15.4.2020) தலைமைச் செயலகத்தில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் திரு.க.சண்முகம், நிதித்துறை கூடுதல் தலைமைச் […]
Continue reading …சென்னை : தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதால், பரிசோதனை மையங்களையும், சோதனை எண்ணிக்கையையும் அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் வீரியம் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், தமிழகத்தில் இந்நோயால் பாதிக்கப்பட்ட 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதும், எந்தவித அறிகுறியும் இல்லாமல் திடீரென கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் அதிக அளவில் இருப்பதும் மிகுந்த கவலை அளிக்கிறது. நோய்ப் பரவலைத் தடுக்க ஊரடங்கிற்கு எந்தளவுக்கு […]
Continue reading …சென்னை : கொரோனா வைரஸ் நோய் தமிழ்நாட்டில் 1200-க்கும் மேற்பட்டோரை தாக்கியிருப்பது ஒருபுறமிருக்க, பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரத்தையும் பறித்திருக்கிறது. அதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்களின் மாதாந்திர குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். கொரோனா வைரஸ் குறித்த அச்சமும், கொரோனா பரவலைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவும் தமிழகத்தில் கிட்டத்தட்ட 90% மக்களின் வாழ்வாதாரங்களை பறித்திருக்கின்றன. அரசு ஊழியர்கள், அமைப்பு சார்ந்த பணியாளர்கள் ஆகியோருக்கு மட்டும் தான் ஊதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் ஒட்டுமொத்த […]
Continue reading …கடலூர்: கடந்த இரண்டு நாட்களாக சமூக வலை தளங்களில் கடலூர் நகர துணை கண்காணிப்பாளர் சாந்தியை பற்றி வைரலாக ஒரு தகவல் பரவிய வண்ணம் உள்ளது. அந்த தகவல் என்னவென்றால், கொரானா பாதுகாப்பு பணியில் இருக்கும் சுமார் 500 காவலர்களுக்கு தனது சொந்த செலவில் வீட்டிற்கு தேவையான காய் கறிகளை வாங்கி கொடுத்து, அனைத்து காவலர்கள் மனதிலும் நீங்கா இடம்பிடித்து விட்டார் என்ற செய்தி தான். இதில் கவனிக்கப்பட விசயம் என்னவென்றால், இந்த செய்தியை கடலூர் நகர […]
Continue reading …சென்னை : பேரிடர் காலங்களில் மனித நேயத்தோடு மக்களுக்கு உதவி செய்கின்ற பண்பாளர்களை பாராட்டி ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக செயல்பட்டு வருபவர் நம் தமிழக முதல்வர் பாசமிகு அண்ணன் எடப்பாடியார் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆதாரத்தோடு விளக்கம். இந்த அசாதாரண சூழ்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான பொதுமக்களின் பங்காளிப்பாக 100 ரூபாயிலிருந்து நிவாரண நிதியாக வழங்கலாம் என்று அறிக்கை கொடுத்து உதவுகின்ற உள்ளங்களை ஊக்குவிக்கின்ற வகையில் வாய்ப்புகளை உருவாக்கி […]
Continue reading …இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவளித்து வருகின்றோம். முஸ்லிம்கள் இஸ்லாமிய ஹிஜ்ரி மாதம் ரமலான் மாதம் முழுவதும் 30 நாட்களும் 14 மணி நேரம் உண்ணாமல், பருகாமல் நோன்பிருந்து இறைவனை வழங்கி வழிபட்டு, இல்லாதோருக்கு ‘ஜகாத்’ எனும் ஏழை வரி வழங்கி வருகின்றனர். இவ்வருட ரமலான் நோன்பு எதிர் வரும் ஏப்ரல் 25 […]
Continue reading …