Home » Archives by category » தமிழகம் (Page 39)

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.

Comments Off on பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு எழுதிய 8,94,264 பேரில் 8,18,743 மாணவ, மாணவிகள் தேர்ச்சி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் – 91.55% கடந்த ஆண்டு 91.39% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், தற்போது தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரிப்பு தேர்வு எழுதியவர்களில் 4,22,591 மாணவிகளும், 3,96,152 மாணவர்களும் தேர்ச்சி மாணவிகள் – 94.53%, மாணவர்கள் 88.58% = இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே தேர்ச்சி விகிதத்தில் முந்தினர்.

Continue reading …

5 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன் பிடித்திருவிழா!

Comments Off on 5 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன் பிடித்திருவிழா!

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி ஒன்றியம் குராயூர் கிராமத்தில் அமைந்துள்ள பெரிய கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. கண்மாயில் கடந்த இரு மாதங்களாக தண்ணீர் இன்றி வறண்ட நிலையில், தேங்கிய நீரில் ஏராளமான மீன்கள் இருந்தன. அவற்றை குராயூர், மொச்சிகுளம், மருதங்குடி, சென்னம்பட்டி, இலுப்பக்குளம், வேப்பங்குளம், திருமால், ஓடைப்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இதில் குறவை, […]

Continue reading …

தபால் நிலையம் முற்றுகை; போராட்டத்தில் பொதுமக்கள்!

Comments Off on தபால் நிலையம் முற்றுகை; போராட்டத்தில் பொதுமக்கள்!

திருச்செங்கோட்டில் செயல்பட்டுக் கொண்டிருந்த தபால் நிலையத்தை முன் அறிவிப்பின்றி காலி செய்ததால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 40 வருடங்களாக திருச்செங்கோடு நெசவாளர் காலனி பகுதியில் இயங்கி வந்த தபால் நிலையத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணக்காளர்கள் 3 கோடி ரூபாய் வைப்புத்தொகை 3 கோடி ரூபாய் ரெக்கரிங் டெபாசிட் உள்ளது. அங்குள்ள பொதுமக்கள் பெண்கள் என சுமார் 5000க்கும் மேற்பட்டவர்கள் வரவு செலவு கணக்கு வைத்துள்ளனர். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் டெபாசிட்டாளர்கள் கணக்காளர்கள் பொதுமக்கள் இடம் […]

Continue reading …

தொழிற்பயிற்சி வகுப்புகளுக்கு நாளை முதல் சேர்க்கை!

Comments Off on தொழிற்பயிற்சி வகுப்புகளுக்கு நாளை முதல் சேர்க்கை!

நாளை முதல் 8 மற்றும் 10 ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி வகுப்புகளுக்கான சேர்க்கை தொடங்குகிறது. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் என மொத்தம் 407 தொழிற்பயிற்சி மையங்கள் தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இப்பயிற்சி மையங்களில் எலெக்ட்ரீசியன், வெல்டர், மெக்கானிக் என பொறியியல் தொழிற் கல்வியில் 61 வகை படிப்புகளும், பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் உணவு தயாரிப்பு, தையல் […]

Continue reading …

கோவை மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை!

Comments Off on கோவை மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை!

சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் அளித்த பேட்டியில், பெண் காவலர்கள் குறித்தும், போலீஸ் அதிகாரிகள் பற்றியும் பாலியல் தொடர்பான அவதூறு கருத்துகளை தெரிவித்திருந்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன. கோவை சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா அவர் மீது புகாரளித்திருந்தார். அதன்படி கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்து, தேனியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்த சவுக்கு சங்கரை கடந்த 4ம் தேதி அதிகாலையில் கைது செய்து, கோவை சிறையிலடைத்தனர். […]

Continue reading …

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு?

Comments Off on தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு?

இரண்டு நாட்களுக்கு தூத்துக்குடி மாவட்டம் முழுதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி பகுதியில் பிரசித்திப்பெற்ற வீரசகாதேவி ஆலய திருவிழா நடைபெற உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இன்று மாலை 6 மணி முதல் மே 12ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. அதன்படி அந்த உத்தரவில், “ஐந்து நபர்களுக்கு மேற்பட்ட கூட்டம் சேரக்கூடாது, பிற மாவட்டங்களில் இருந்து விழாவில் கலந்து கொள்ளும் […]

Continue reading …

கோவிஷீல்டை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

Comments Off on கோவிஷீல்டை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கோடிக்கணக்கானோர் செலுத்தியவர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் லண்டன் உயர் நீதிமன்றத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கோவிஷீல்டு குறித்த வழக்கு நடந்தது. இவ்வழக்கின் போது கோவிஷீல்டு தடுப்பூசி மிகவும் அரிதான பக்க விளைவு ஏற்படுத்தும் என்றும் ரத்தம் உறைய வாய்ப்பு இருக்கலாம் என்றும் ஒப்புக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தடுப்பூசி ஏற்கனவே 175 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்நிறுவனம் தற்போது தாக்கல் செய்த […]

Continue reading …

சாம் பிட்ரோடா மீண்டும் சர்ச்சை பேச்சு!

Comments Off on சாம் பிட்ரோடா மீண்டும் சர்ச்சை பேச்சு!

இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா இந்தியாவில் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்கள் போலவும், தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் இருக்கிறார்கள் என கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா, இந்தியாவில் வாரிசுரிமை தொடர்பாக புதிய சர்ச்சையை கிளப்பினார். அது பெரும் விவாதப் பொருளானது. இந்தியாவில் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்கள் போலவும், தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் இருக்கிறார்கள் என அவர் பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்தியாவைப் போன்ற […]

Continue reading …

சென்னை வானிலை மையம் தகவல்!

Comments Off on சென்னை வானிலை மையம் தகவல்!

வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் மே 11ம் தேதி வரை 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் அறிவிப்பில், “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் […]

Continue reading …

பி.எஸ்.என்.எல் ஊழியர்களின் ஐடியா!

Comments Off on பி.எஸ்.என்.எல் ஊழியர்களின் ஐடியா!

தங்கள் பயனாளிகளுக்கு 5ஜி சேவையை தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் வழங்கி வருகிறது. ஆனால் இன்னும் பிஎஸ்என்எல் நிறுவனம் தங்கள் பயனாளர்களுக்கு 3ஜி சேவை மட்டுமே வழங்கி வருகிறது. இதனால் ஏராளமான பயனாளிகள் அதிலிருந்து வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிஎஸ்என்எல் ஊழியர்கள் பயனாளிகளை தக்க வைத்துக்கொள்ள வோடபோன் ஐடியாவுடன் பிஎஸ்என்எல் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் இதன் மூலம் பிஎஸ்என்எல் பயனாளிகளுக்கு நேரடியாக 5ஜி சேவையை வழங்கலாம் என்றும் ஐடியா கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஜியோ […]

Continue reading …