Home » Archives by category » தமிழகம் (Page 4)

கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து; முதலமைச்சர் ஸ்டாலின்!

Comments Off on கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து; முதலமைச்சர் ஸ்டாலின்!

  தூய்மை பணியாளரின் மகள் குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று நகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். “கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குரூப் 2 தேர்வில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த துர்கா வெற்றி பெற்று நகராட்சி ஆணையராக பதவியேற்க உள்ளார். என் தாத்தாவும், அப்பாவும் தூய்மைப்பணியாளர்கள், அந்த அடையாளத்தை மாற்ற வேண்டும் என நினைத்தேன், இன்றிலிருந்து எங்கள் வாழ்க்கை மாறியுள்ளது என்று துர்கா கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது […]

Continue reading …

கோவில் தொடர்பான வழக்கிற்கு நீதிமன்றம் காட்டம்!

Comments Off on கோவில் தொடர்பான வழக்கிற்கு நீதிமன்றம் காட்டம்!

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கோயிலை பூட்டி வைப்பது சாமியை சிறை வைப்பதற்கு சமம் என்று கருத்து தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் முத்தாலம்மன் மாரியம்மன் கோயில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலை திறந்து, நாள்தோறும் பூஜைகள் நடத்த அனுமதி வழங்க கோரி, பாண்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, “இரு சமுதாயத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக கோயிலைப் பூட்டியதால், சாமிக்கு […]

Continue reading …

மத்திய – மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்!

Comments Off on மத்திய – மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மீனவர்கள் 32-பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில், “வங்கக்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள், 4 நாட்டுப் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து அராஜக முறையில் சிறைபிடிக்கப்பட்டு வருகிறார்கள். மத்திய பாஜக அரசு இதற்கான நிரந்தரத் தீர்வினை எட்ட போதிய முயற்சிகள் எடுக்காமல் […]

Continue reading …

இன்று முதல் தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடக்கம்!

Comments Off on இன்று முதல் தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடக்கம்!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பள்ளி கல்வி முடிக்கும் மாணவர்கள் உயர்கல்வி படித்தே ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவையில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு முதலமைச்சர் ரூ.1000 உதவித் தொகை வழங்கினார். பின்னர் பேசிய அவர், “தொடக்க விழாவுக்கு வரும் முன்பே மாணவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்க நேற்றே உத்தரவிட்டேன். நாள்தோறும் ஏராளமான திட்டங்களை தீட்டினாலும் ஒரு சில திட்டங்கள்தான் நமது மனதுக்கு […]

Continue reading …

விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாடு?

Comments Off on விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாடு?

திருச்சி பொன்மலை ஜி-கார்னர் திடலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடத்த அனுமதி கோரி ரயில்வே கோட்ட மேலாளிடம் அக்கட்சி நிர்வாகிகள் கடிதம் வழங்கியுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர்களை சேர்ப்பது, கட்சி நிர்வாகிகளை நியமிப்பது, விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களை தொடர்ந்து சந்தித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்குவது, […]

Continue reading …

ஆளுநர் ஆர்.என்.ரவி துணைவேந்தர்களுடன் சந்திப்பு!

Comments Off on ஆளுநர் ஆர்.என்.ரவி துணைவேந்தர்களுடன் சந்திப்பு!

ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் திடீரென கூட்டம் நடத்தப் போவதாக கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் முக்கிய ஆலோசனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. உயர் கல்வி அமைச்சர் பொன்முடி கடந்த மூன்று நாட்களுக்கு முன்னால் துணைவேந்தர் கூட்டத்தை நடத்தினார். அதில் சில முக்கிய விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டது. உயர்கல்வி அமைச்சரின் கூட்டத்தை அடுத்து அதிரடியாக ஆளுநர் ரவி, துணைவேந்தர் கூட்டத்தை இன்று நடத்தவுள்ளார். இக்கூட்டத்தில் தமிழக பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் […]

Continue reading …

அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!

Comments Off on அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் ஜெய் ஸ்ரீ ராம் மற்றும் முருகனுக்கு அரோகரா என சொல்வார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “இந்துக்கள் விரும்பும் கடவுளை வழிபட அனைத்து சுதந்திரமும் தமிழ்நாட்டில் உள்ளது. பக்தர்களின் வழிபாட்டு உரிமையில் திமுக அரசு தலையிடாது. ஜெய் ஸ்ரீ ராம் என்றாலும் ஏற்றுக் கொள்வோம், […]

Continue reading …

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் காரசார விவாதம்!

Comments Off on வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் காரசார விவாதம்!

காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் வக்பு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாதவர் உறுப்பினராக முடியும் என்பது மத சுதந்திரத்துக்கு எதிரானது என்றும் வக்பு வாரிய சட்டதிருத்தம் இஸ்லாமியர்ளுக்கு முற்றிலும் எதிரானது என்றும் மக்களவையில் விமர்சித்துள்ளன. மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ முஸ்லிம்களின் சமூக, பொருளாதார நலன்களுக்கான வக்பு வாரியத்தின் அதிகாரங்களைக் குறைக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் […]

Continue reading …

திமுக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்!

Comments Off on திமுக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போதைப்பொருள் விற்பனையை தடுக்கத் தவறிய விடியா திமுக முதலமைச்சருக்கு கடும் கண்டனம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “சென்னை, நங்கநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஒரு மாணவனின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த ஆசிரியர் அம்மாணவனது புத்தகப் பையை சோதனையிட்டபோது, அப்பையில் கஞ்சா பொட்டலங்ககள் இருப்பதை கண்டறிந்து காவல்துறைக்கு புகார் செய்ததாகவும், மாணவன் அந்த கஞ்சா பொட்டலங்களை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பழவந்தாங்கல் ரயில்வே நிலையத்தில் வாங்கியதாகவும் இன்றைய நாளிதழ்களில் வந்த செய்திகள் […]

Continue reading …

சபாநாயகருக்கு நேரில் ஆஜராக அதிரடி உத்தரவு!

Comments Off on சபாநாயகருக்கு நேரில் ஆஜராக அதிரடி உத்தரவு!

சபாநாயகர் அப்பாவுக்கு, அதிமுக குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் செப்டம்பர் 9ம் தேதி நேரில் ஆஜராகுமாறு எம்.பி -எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. ஒபிஎஸ் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்ற சசிகலா முயன்றபோது அதற்கு போர்க்கொடி தூக்கினார். இதனால் அதிமுகவில் பிரச்சனை பூதாரகமானது. அதன்பின் சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்லவே, எடப்பாடி பழனிசாமி திடீரென சசிகலாவால் முதலமைச்சராக பதவி ஏற்றார். இதனால் அப்போதைய அதிமுக ஆட்சியும் […]

Continue reading …