
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போதைப் பொருட்களை இறக்குமதி செய்து இளைஞர்களின் வாழ்க்கையை முழுவதுமாக பாழாக்க நினைக்கும் முதலமைச்சரின் குடும்பத்தை நாம் மீண்டும ஒருமுறை தேர்ந்தெடுக்கக் கூடாது என்று தெரிவித்தார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓசூர் ராம்நகரில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், “எதிர்கட்சியாக உள்ள காங்கிரஸ் மற்றும் திமுகவை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கிருஷ்ணகிரி மற்றும் […]
Continue reading …
ஓ பன்னீர் செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் மீது பாஜக அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஓ பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் தற்போது தொகுதி முழுவதும் தீவிரமாக சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். அவருடைய ஆதரவாளர்கள் தமிழகம் முழுதும் இருக்கும் நிலையில் ஆங்காங்கே அந்தந்த தொகுதியில் உள்ள வேட்பாளர்களுக்கு அவர்கள் வாக்கு சேகரிக்காமல் ஒட்டுமொத்த ஆதரவாளர்கள் அனைவரும் ராமநாதபுரத்தில் குவிந்து […]
Continue reading …
கோவையில் இன்று ரம்ஜான் கொண்டாட்டமாக பல இடங்களில் மக்களுக்கு விநியோகிக்க இஸ்லாமிய மக்கள் பிரியாணி தயார் செய்து வருகின்றனர். அன்பையும், சகோதரத்துவத்தையும் போற்றும் இஸ்லாமிய பண்டிகையாக ரம்ஜான் பெருநாள். தமிழகத்தில் தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட சில அமைப்புகள் நேற்று பெருநாள் கொண்டாடி இருந்தாலும், தலைமை காஜி அறிவிப்பின்படி பெரும்பான்மை மக்கள் இன்று பெருநாளை கொண்டாடி வருகின்றனர். காலையிலேயே பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்களின் சிறப்பு கூட்டுத் தொழுகை பிரார்த்தனை மேற்கொண்டனர். கோவையில் போத்தனூர், உக்கடம், கோட்டைமேடு என பல பகுதிகளில் […]
Continue reading …
வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரசாரம் நடத்தி வருகின்றனர். 5-ஆம் கட்ட பிரச்சாரத்தை தென் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் நாளை தொடங்குவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் “மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 23-ம் தேதி […]
Continue reading …
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் நடிகை ராதிகா போட்டியிடுகிறார். அவர் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது ஒரு சிலர் ’கிழக்கு சீமையிலே’ கேரக்டர் போல் நடித்துக் காமிங்கள் என்று கேட்டுக் கொல்ல உடனே அவர் நடித்து காண்பித்தது வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். அத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக மாணிக் தாகூர், தேமுதிக வேட்பாளராக விஜயபிரபாகரன் போட்டியிடுகின்றனர். மூவருக்கும் இடையே போட்டி சரிசமமாக இருப்பதாகவும் யார் வேண்டுமானாலும் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாகவும் […]
Continue reading …
டிபன் கடையில் சாப்பிட்டுவிட்டு ரூ.20ஐ கொடுக்காமல் சென்ற விவசாயியை அக்கடைக்காரர் அடித்துக் கொன்ற சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் கொன்னக்குடி கிராமத்தை சேர்ந்த 58 வயதான ஏசுதாஸ் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். சமீபத்தில் ஏசுதாஸ் அதே பகுதியில் ஜோசப்ராஜ் நடத்தி வந்த ஓட்டலில் டிபன் சாப்பிட்டுள்ளார். அதில் ரூ.20 தர வேண்டியது இருந்த நிலையில் கடனாக சொல்லிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அதை அவர் திரும்ப தரவில்லை என கூறப்படுகிறது. கடந்த 8ம் தேதி […]
Continue reading …
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தலுக்காக செலவு செய்ய முடியாமல் அவர் தடுமாறுவதாக கூறப்படுகிறது. முதல் முறையாக திருச்சி பாராளுமன்ற தொகுதியில் துரை வைகோ களம் இறங்கி உள்ளார். கூட்டணி கட்சிகள் ஆதரவு அவருக்கு இருந்தாலும் பணம் அதிகம் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. திருச்சியில் துரை வைகோவுக்கு எதிராக போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கருப்பையா மற்றும் பாஜக கூட்டணியின் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் ஆகிய இருவரும் […]
Continue reading …
வீட்டிற்குள் நுழைந்த பாம்பிடம் சண்டையிட்டு குழந்தைகளை காப்பாற்றி நாய் இறந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாசத்திலும் நன்றியிலும் முதலிடத்தில் இருப்பது நாய்கள்தான். அந்த பாசத்திற்காக நாய் உயிரையே விட்ட சம்பவம் அரியலூரில் நடந்துள்ளது. அரியலூரில் உள்ள கழுவன்தொண்டி கிராமத்தை சேர்ந்த செல்வேந்திரன். இவரும், இவரது மனைவி சாந்தியும், 2 மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகள் சகிதம் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த வீட்டில் கடந்த 11 ஆண்டுகளாக ஹெண்ட்ரி என்று ஒரு நாயையும் வளர்த்து வந்துள்ளனர். குடும்பத்தினரிடம் மிகவும் […]
Continue reading …
பிரதமர் மோடி திமுகவை வீட்டுக்கு அனுப்ப பாஜகவால் மட்டுமே முடியும் என்று தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, பாஜக வேட்பாளர்கள் அண்ணாமலை, எல்.முருகனை ஆதரித்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த தேர்தலில் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் எங்கு சென்றாலும் பாஜகவின் ஆதிக்கும் தெளிவாக தெரிகிறது. ஜவுளி துறையில் சிறந்து விளங்கும் கோவையில் மின் கட்டண உயர்வால் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பாஜக அரசின் நடவடிக்கையால் கோவையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் காப்பாற்றபட்டுள்ளது.வறுமையில் […]
Continue reading …