காவிரியில் நீர்வரத்து 5 ஆண்டுகளுக்கு பின், 2 லட்சம் கனஅடியை தாண்டியுள்ளது. இதனால் ஒகேனக்கல் பகுதியில் தீவாக மாறியுள்ளது. இதனால் ஒகேனக்கல் பகுதியில் எங்கு பார்த்தாலும் தண்ணீராக காட்சியளிப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு 2 லட்சம் கன அடிக்கு மேல் நீர்வரத்து வந்தது. 5 ஆண்டுகள் கழித்து தற்போது 2 லட்சம் கன அடியை தாண்டியுள்ளது. திரும்பும் திசை எல்லாம் கடல் போல் ஒகேனக்கல் காட்சி அளிப்பதாகவும், கரையோர வீடுகளை காவிரி நீர் சூழ்ந்துள்ளதாகவும் செய்திகள் […]
Continue reading …தமிழக மீனவர் ஒருவர் ராமேஸ்வரம் மீனவர்கள் சென்ற படகு மீது இலங்கை கடற்படையின் கப்பல் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது, “இலங்கை கடற்படையால் ஆழ்கடலில் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். நேற்று 359 மீன்பிடிக் கப்பல்கள் அனுமதிச் சீட்டு பெற்று கடலுக்குள் சென்றன. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் […]
Continue reading …தமிழக அரசு தகைசால் தமிழர் விருதை குமரி அனந்தனுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. கடந்த 2021-ல் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகத்துக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தகைசால் தமிழர் என்ற விருதை உருவாக்கவும், இந்த விருதுக்கான விருதாளரைத் தேர்வு செய்திட ஒரு குழுவை அமைத்திடவும் ஆணையிட்டிருந்தார். இந்த விருதினை கடந்த 3 ஆண்டுகளில் சங்கரைய்யா, ஆர். நல்லகண்ணு மற்றும் கி.வீரமணி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதுக்கான நடப்பாண்டு விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட […]
Continue reading …பெண் ஒருவர் பச்சிளம் குழந்தையை கட்டைப்பையில் வைத்து கடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் ஒருவர் வேலூர் அரசு மருத்துவமனையில் பிறந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆன குழந்தையை கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் விசாரணை செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பார்ப்பது போல் வந்த பெண் ஒருவர் குழந்தையை கட்டைப்பையில் வைத்து கடத்திச் சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. கட்டைப்பையில் குழந்தையை எடுத்துச் செல்லும் பெண்ணுடன் ஒரு […]
Continue reading …தமிழக மீனவர்கள் 23 பேர் இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர். மேலும் மூன்று மீனவர்களுக்கு 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படை கைது செய்து வருவது தொடர்கதை ஆகி வருகிறது. மேலும் மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் தலையிட்டு, சமூகத் தீர்வு காண வேண்டும் […]
Continue reading …சைபர் கிரைம் காவல்துறை டில்லியைச் சேர்ந்த மோசடி நபரை அதிரடியாக கைது செய்துள்ளது. தேனி, கெங்குவார்பட்டியை சேர்ந்த பானுமதி (74) சென்னை ஐஐடி மற்றும் அமெரிக்காவில் உள்ள நார்த் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரிடம் மும்பை காவல் நிலையத்திலிருந்து பேசுவதாக கூறி அவரின் ஆதார் எண் மூலம் சிம் கார்ட் வாங்கப்பட்டிருப்பதாகவும், அந்த சிம் வாட்ஸ் அப் மூலம் pornographic images பொதுமக்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறதாகவும், மும்பை கனரா வங்கிகணக்குடன் இணைக்கப்பட்டிருப்பதாகவும் அதன் […]
Continue reading …முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.5 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடுமையான மழைப்பொழிவின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் விலைமதிக்க முடியாத உயிரிழப்புகளும், பொதுச் சொத்துக்களுக்கு சேதமும் ஏற்பட்டுள்ளது. இன்று கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். இந்த இயற்கை […]
Continue reading …நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கேரளாவில் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கமல்ஹாசன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும், வால்பாறையிலும் நிலச்சரிவினால் ஏற்பட்ட பேரழிவுகள் என் நெஞ்சைப் பதற வைக்கின்றன. தங்களது அன்புக்குரியவர்களையும், வீடு வாசல், உடைமைகளையும் இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள், பருவநிலை மாற்றத்தின் காரணமாக இயற்கைப் பேரிடர்கள் வழக்கமான நிகழ்வாகிவிட்டன. இதன் தாக்கத்தைப் புரிந்துகொண்டு […]
Continue reading …தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புதிய ஊழல் பாதையை அமைத்துக் கொடுப்பதில், திமுக தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது என கூறியுள்ளார். இதுகுறித்து அவர், “ஊழலுக்கான புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்து, தனது இந்தி கூட்டணிக் கட்சிகளுக்குப் புதிய ஊழல் பாதையை அமைத்துக் கொடுப்பதில், திமுக தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. கடந்த காலங்களில், மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கான மாணவர்களின் தகுதிப் பட்டியலைக் கொடுத்து, கட்சிக்கு நன்கொடை வாங்கும் வழியை அறிமுகப்படுத்திய திமுக, இப்போது நன்கொடை வசூலிப்பதில் புதிய உயரத்துக்குச் சென்றுவிட்டனர். […]
Continue reading …120 அடியை எட்டியுள்ளது மேட்டூர் அணையின் நீர்மட்டம். இதனால் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி ஆற்றின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வருகிறது. ஒரு மாதமாக இடைவிடாமல் பெய்து வரும் மழையால் கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பியுள்ளன. இதையடுத்து இரு அணைகளில் இருந்தும் தமிழ்நாட்டுக்கு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகாவிலிருந்து திறந்துவிடப்படும் காவிரி […]
Continue reading …