
திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் பேட்டி: சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கூட அவர்கள் கைது செய்யப்படலாம். குழந்தைகள் கடத்தல் தொடர்பாக பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். உங்கள் பகுதியில் சந்தேகத்திற்குரிய நபர் யாரேனும் சுற்றி திரிந்தால் உடனடியாக காவல்துறையினரை தொடர்பு கொள்ள வேண்டும். திருச்சி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. […]
Continue reading …
அய்யா வைகுண்டர் குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்த கருத்தில் எந்த தவறும் கிடையாது. அகிலத்திரட்டு என்ன கூறுகிறதோ அதை தான் ஆளுநர் தெரிவித்துள்ளார். சாமிதோப்பில் இருந்து சிலர் சுய லாபத்திற்காக ஆளுநர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் அகிலத்திரட்டை சரியாக படிக்கவில்லை என அர்த்தம் அது மட்டுமல்ல அவர்கள் திமுகவின் பிண்ணனியில் இருபதாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அய்யாவழி அன்பாலய நிறுவனர் சிவச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பரபரப்பு பேட்டி.
Continue reading …
நாமக்கல் மாவட்டத்தில் நள்ளிரவில் முகமூடி கொள்ளயர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிவசக்தி நகரில், சுமார் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் பெரும்பாலும் வயோதிகர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களின் மகன்கள், மகள்கள் சென்னை மற்றும் பெங்களூரு பகுதிகளில் பணிபுரிந்து வருகின்றனர். நள்ளிரவில் அப்பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற வேளாண்மை துறை அதிகாரி கண்ணதாசன் என்பவர் வீட்டையும், அவரது எதிர்வீடான ஓய்வுபெற்ற மீன்வளத்துறை அதிகாரி சுந்தரேசன் என்பவர் வீட்டையும், […]
Continue reading …
பொன்முடி மகன் கவுதம சிகாமணி கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கள்ளக்குறிச்சி தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய இரண்டு தனி தொகுதிகள் கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் மட்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இம்முறை கூடுதலாக ஒரு பொதுத் தொகுதி ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டது. அவ்வகையில் கள்ளக்குறிச்சி தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்க திமுக முன் வந்திருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. […]
Continue reading …
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா நீலகிரி தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறை போட்டியிடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த ஆ.ராசா, நீலகிரி தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்வேன் என்றும் போட்டியிட வேண்டுமா? வேண்டாமா என்பதை தலைமை தான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு மற்றும் 2019ம் ஆண்டு நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் ஆ. ராசா போட்டியிட்டு வென்றார். 2009ம் ஆண்டு அவர் […]
Continue reading …
திமுகவினர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனுக்களை தாக்கல் செய்வதற்கு இன்றே கடைசி நாளாகும். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தலில் திமுக தரப்பில் போட்டியிட விரும்புவோர், அதற்கான விருப்ப மனுக்களை, மார்ச் 1ம் தேதி முதல் சமர்ப்பித்து வருகின்றனர். இதுவரை நூற்றுக்கணக்கானோர் விருப்ப மனுக்களை பெற்றுள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கனிமொழி விருப்ப மனு தாக்கல் செய்தார். அதேபோல் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு […]
Continue reading …
எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தற்போது அதிமுக பொதுச்செயலாளர் அக்கட்சியில் இணைந்துள்ளார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது. அவரை எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து வரவேற்றுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு தேர்தலின் போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தலின் போது ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்டவர் திமுகவின் துணை பொதுச்செயலாளராக இருந்த எஸ்பி சற்குண பாண்டியனின் மகள் சிம்லா முத்து […]
Continue reading …
மீண்டும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மார்ச் 22-ம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகிறார். பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, வரும் 22ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். தென்மாவட்டங்களில் நடைபெறும் பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 4ம் தேதி சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதன்படி, நடப்பாண்டில் […]
Continue reading …
திமுக மதிமுகவுக்கு ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை சீட் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் திமுக மதிமுக இடையிலான கூட்டணி பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்துள்ளது. வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீட்டில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. அவ்வகையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் […]
Continue reading …
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் அவர்களுக்கு இயற்கை வள பாதுகாப்பு சங்கம் கோரிக்கை. பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளி நேரங்களில் செல்லக்கூடிய கனரக கனிமவளவாகனங்களுக்கு காலை 8 மணி முதல் 10 மணி வரையும் மாலை 3.30 மணிலிருந்து 5 மணி வரையும் சாலையில் செல்ல தடை விதிக்க மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல்துறையால் அறிவிப்பு பலகை தென்காசி -அம்பை சாலையில் பழைய குற்றாலம் விலக்கில் வைக்கப்பட்டுள்ளது.. ஆனால் அந்த அறிவிப்பு பலகையை […]
Continue reading …