
அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்ட பாஜக பெண் நிர்வாகி விடுதலை. அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாகவும்,பொது அமைதியை கெடுக்கும் விதமாக வீடியோ வெளியிட்டதாகவும் கூறி திருச்சியில் பாஜக பெண் நிர்வாகியை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். திமுக அரசு வருங்கால தலைமுறையினரின் எதிர்காலத்தை சிதைக்கும் கொடுமையை செய்து வருகிறது. மது கஞ்சா, தமிழகத்துக்கு சாபக்கேடு எனவும்,இவற்றைக் காணும்போது மனது வலிக்கிறது எனவும் பாஜக மாநில ஊடகப்பிரிவு செயலாளர் சென்னையில் வசித்து வரும் சௌதாமணி, சமூக வலைதளங்களில் பதிவு […]
Continue reading …
12 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை. கன்னியாகுமரி மாணவன் மீது பாய்ந்தது போக்சோ. கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவியை திருப்பூர் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த பிரகாஷ் (23) என்பவர் மீது போக்ஸோ சட்டம் பாய்ந்தது. தலைமறைவான பிரகாஷை போலீஸார் தேடி வருகின்றனர். கடந்த மாதம் 19ம் தேதி பள்ளிக்கூடம் சென்று திரும்பிய மாணவியை அங்கிருந்து அழைத்து ரயில் மூலமாக திருப்பூர் சென்றுள்ளார். அங்கு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து […]
Continue reading …
பல்வேறு கட்சித் தலைவர்களும் புதுச்சேரியில் சிறுமியை கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். புதுச்சேரி மட்டுமின்றி நாடு முழுவதும் புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வலியுறுத்தியும் புதுச்சேரி முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றனர். இச்சம்பவத்திற்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட […]
Continue reading …
ஏற்கனவே செந்தில் பாலாஜியின் காவல் 23 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது 24வது முறையாக மார்ச் 11 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி கடந்த 9 மாதங்களாக சிறையில் இருக்கிறார். தற்போது 24-வது முறை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை அமலாக்கத்துறை மூன்று மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜி வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து மூன்று மாதங்களில் […]
Continue reading …
கமல்ஹாசன் புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்ட சம்பவம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “எங்கே போகிறோம்? புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள். உலகின் பாதி நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணை ராஞ்சியில் ஒரு கும்பல் வன்புணர்வு செய்திருக்கிறது. மங்களூருவில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டுள்ளது. சென்னையில் காதல் திருமணம் செய்துகொண்ட பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71வது பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு முன்னாள் எம்.பி. கம்பம் செல்வேந்திரன், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கம்பம் செல்வேந்திரன் பேசும்போது, “உலகில் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு தலைவரின் பிறந்த நாளை கொண்டாடுகின்றனர் என்றால் அதற்கு காரணம் தான் பிறந்த தமிழ்நாட்டை தனது உழைப்பால் உயர்த்தி காட்டி திராவிட மாடல் என்ற ஆட்சியை […]
Continue reading …
மதிமுக திமுகவுடன் நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படாத நிலையில், நிர்வாக குழு கூட்டம் நாளை சென்னையில் நாளை நடைபெறுகிறது. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க, ம.தி.மு.க, முஸ்லிம் லீக், கொ.ம.தே.க உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. வரும் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிகளை பங்கீட்டு கொள்வதற்காக குழுவை தி.மு.க அமைத்திருக்கிறது. இதில் தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு இடம் ஒதுக்குவதற்கான ஒப்பந்தம் […]
Continue reading …
நீதிமன்றங்களில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு. தமிழகத்தில் நீதிமன்றங்களில் தமிழை அலுவல் மொழி ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு. மாவட்டம் முழுவதும் ஐந்து நீதிமன்றங்களில் இன்று வழக்குகள் நடைபெறவில்லை.
Continue reading …
பாஜக கூட்டணியில் அ.இ.ச.ம.க, நெல்லை தூத்துக்குடியில் ராதிகாசரத்குமார் போட்டி. பாஜக கூட்டணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி இணைந்துள்ளது. இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில் திருநெல்வேலி அல்லது தூத்துக்குடி தொகுதியில் ஆர்.சரத்குமார் அல்லது ராதிகா சரத்குமார் தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார்கள்.
Continue reading …
முதியோர் உதவித்தொகை முறைகேடு குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள். தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை வழங்குவதில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 70 பயனாளிகளுக்கு கடந்த ஓராண்டில் வழங்கப்பட்டிருக்க வேண்டிய ரூ.27 லட்சம், பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுவதற்கு பதிலாக தனிநபர் ஒருவரின் கனக்கில் செலுத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. முதியோர் உதவித்தொகை பெரும் பயனாளிகளின் வங்கிக் கணக்குடன் அவர்களின் ஆதார் எண்ணும் இணைக்கப்பட்டிருக்கிறது. அதனால், பயனாளிகளில் எவரேனும் உயிரிழந்தால் […]
Continue reading …