
மாமல்லபுரம் கடற்பகுதியில் மாயமான ஆந்திர மாணவர்கள் 4 பேரின் உடல்களை இரண்டாம் நாளாக தீயணைப்புப் படையினர் இன்று தேடி வருகின்றனர் ஆந்திராவின் சித்தூரைச் சேர்ந்த 46 பேர் சுற்றுலா வந்த நிலையில், கடற்கரை கோயில் அருகே நேற்று கடலில் குளிக்கும் போது 10 பேர் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர் அப்பகுதி மீனவர்கள் 6 பேரை மீட்ட நிலையில், 4 பேர் கடலில் மாயமாகினர். போலீசார், மீனவர்கள் ஸ்கூபா டைவிங் பிரிவினர் என 20 பேர் […]
Continue reading …
சென்னை சைதாப்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் இன்று 43,051 மையங்களில் 57 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க திட்டம்.
Continue reading …
சிவகங்கையில் போலியோ சொட்டு மருந்து முகாம். தொடங்கி வைத்தார் நகராட்சி சேர்மன். சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் பேருந்து நிலையம் அருகில் ஐந்து வயது குழந்தைகளுக்கு உட்பட்ட போலியோ சொட்டு மருந்து முகாமினை நகர் மன்ற தலைவர் சிஎம். துரை ஆனந்த் அவர்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமினை துவக்கி வைத்தார் உடன் சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், வீனஸ் ராமநாதன், ராமதாஸ், மதியழகன், தகவல் தொழில்நுட்ப […]
Continue reading …
தமிழகம் புதுச்சேரியில் 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் பேட்டி. பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப்பங்கீடு, வேட்பாளர் தேர்வு ஆகியவற்றிற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக தலைமையிலானu கூட்டணியில், தோழமை கட்சிகளிடையே பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டு தொகுதிகள் பங்கீடு அறிவிக்கப்பட்டு வருகிறது. முதல் தொகுதி பங்கீடாக அறிவிக்கப்பட்ட இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் […]
Continue reading …
தேர்தல் ஆணையர் பொன்முடி தொகுதி குறித்து சபாநாயகரிடம் இருந்த எந்த தகவலும் வரவில்லை: என்று கூறியுள்ளார். நீதிமன்றத்தால் முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டது. அவருடைய அமைச்சர் பதவி மற்றும் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டது என செய்திகள் வெளியானது. ஆனால் இன்னும் சபாநாயகரிடமிருந்து முறையாக பொன்முடி போட்டியிட்ட திருக்கோவிலூர் தொகுதி காலி என்று அறிவிக்கப்படவில்லை. இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, “திருக்கோவிலூர் தொகுதியை காலியாக அறிவிப்பது குறித்து சபாநாயகரிடம் […]
Continue reading …
சமீபத்தில் அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார். தற்போது கரூர் மாவட்ட செயலாளர் பதவியும் பறிபோக இருப்பதாக திமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தால் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக வழக்கறிஞர்கள் தரப்பிலிருந்து கூறப்பட்டது. இதன் காரணமாக இலாகா இல்லாத அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த […]
Continue reading …
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணியில் இடம்பெறும் என்றும் அக்கட்சிக்கு கோவை தொகுதி மற்றும் ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. தற்போது முதல் கட்ட பேச்சு வார்த்தை கூட இன்னும் நடைபெறா காரணத்தால் திமுக கூட்டணியில் கமல் கட்சி இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினரை விசாரித்த போது ஏற்கனவே மறைமுகமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் இரண்டு தொகுதிகள் தங்கள் கட்சி கேட்டதாகவும் ஆனால் ஒரு […]
Continue reading …
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விரைவில் திமுக உடனான கூட்டணியில் விரைவில் தொகுதி பங்கீடு முடியும், தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். விரைவில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து களமிறங்குகின்றன. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் தற்போது தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் […]
Continue reading …
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிக்கிறது என்று தெரிவித்துள்ளார். சென்னையில் மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் பாஜக தேர்தல் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் ஜி.கே வாசன், “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தாமாக நீடிக்கிறது. எங்கள் கட்சி சார்பில் தேர்தல் குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதும், பாஜகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம். தேசப்பற்று உடைய கட்சிகள் பாஜக […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மோடி கால் நகத்தின் தூசிக்கு கூட உதயநிதி சமமானவர் இல்லை என்று பேட்டியளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பேட்டி ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் குறித்த கேள்வி ஒன்றுக்கு அண்ணாமலையிடம் பதிலளிக்கையில், “உதயநிதி என்பவர் யார்? அவருடைய தாத்தா பெயரையும் அப்பா பெயரையும் எடுத்துவிட்டு பார்த்தால் அவரால் இரண்டு ஓட்டுகள் கூட வாங்க முடியாது. தாத்தா அப்பா சம்பாதித்த பணத்தில் திரைக்கு வந்த ஒரு தோல்வியடைந்த நடிகர், தாத்தா அப்பா பெயரை […]
Continue reading …