
இன்று அரசு பள்ளிகளில் 2024 – 25 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பெற்றோர்கள் இன்று தங்கள் குழந்தைகளை சேர்க்க பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 45 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவ மாணவிகள் புதிதாக சேர்ந்து வருகின்றனர். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நேரடியாகவும் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு அனைத்து மாணவர்களும் நேரடியாக […]
Continue reading …
வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக தற்போது அரசியல் கட்சிகள் போட்டியிடும் வேட்பாளர்களிடம் விருப்ப மனுக்களை பெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக குறிப்பாக அதிமுக மற்றும் திமுக அலுவலகத்தில் விருப்ப மனு கொடுக்க வரும் கட்சியினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தங்கள் தொகுதியில் பிரபலங்கள் போட்டியிட வேண்டும் என்றும் விருப்ப மனுக்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிட வேண்டும் என்று 50 பேர்கள் வரை விருப்ப மனுக்கள் கொடுத்துள்ளனர். அதேபோல் அமைச்சர் கே என் […]
Continue reading …
இன்று சசிகலா வீட்டிற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழிகளில் ஒருவர் எழுத்தாளர் சிவசங்கரி சென்று அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். சமீபத்தில் சசிகலா புதிய வீடு கட்டிய நிலையில் அந்த வீட்டிற்கு வாழ்த்து தெரிவித்து பல பிரபலங்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் சசிகலாவின் வீட்டுக்கு சென்று வீடு கோவில் போல் இருக்கிறது என்று பாராட்டியுள்ளார். தற்போது ஜெயலலிதாவின் நெருங்கிய தோழிகளில் ஒருவர் எழுத்தாளர் சிவசங்கரி இன்று சசிகலாவின் ஜெயலலிதா […]
Continue reading …
சென்னையை சேர்ந்த பயணி மதுரையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த போது 50 கோடி மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதை பொருள் கடத்தலை தடுக்க போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்கானிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். மத்திய வருவாய்பிரிவு புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று டில்லியில் இருந்து புறப்பட்ட பிள்ளமன் பிரகாஷ் என்பவரை பின் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு புறப்பட்ட பொதிகை […]
Continue reading …
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 2024ம் ஆண்டுக்கான முதுகலை பல் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மார்ச் 18ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. முதுநிலை பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு இம்மாதம் 18ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. முதுநிலை பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை ஒத்திவைக்கவேண்டும் என்ற கோரிக்கை […]
Continue reading …
கோவில்பட்டியில் தேர்வு எழுத உள்ள பேனாக்களை சுவாமி முன்பு வைத்து வழிபாடு செய்து 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுத சென்ற மாணவ – மாணவிகள். தமிழகத்தில் இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வு வரும் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 3 ஆயிரத்து 302 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று தமிழ் தேர்வுடன் தேர்வு தொடங்குகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் […]
Continue reading …
திருச்சி மாவட்டத்தில் இன்று அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை. மாலையிட்டு அழைத்து வந்து கௌரவித்த ஆசிரியர்கள். 2024 – 25 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அரசு பள்ளிகளில் மார்ச் ஒன்று முதல் நடைபெற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி இருந்தது. அதன் அடிப்படையில் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள வடக்கு சேர்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் வடக்கு […]
Continue reading …
தூத்துக்குடி வாலிபர் கொலை வழக்கு: கொலையாளிகள் 3 பேர் இன்று திருச்சி நீதிமன்றத்தில் சரண். மத்திய சிறையில் அடைப்பு. தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகன் வடிவேல் முருகன் (வயது28). இவர் கொலை வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர் பைக்கில் ஊருக்குச் சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி – நெல்லை தேசிய நெடுஞ்சாலை பொட்டலூரணி விளக்கு அருகே சென்றபோது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் ஓட ஓட […]
Continue reading …
புகையிலை போதை பொருள்கள் பதுக்கல் : திருச்சியில் உணவகத்துக்கு சீல் வைப்பு. அதிகாரிகள் நடவடிக்கை. திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் சிறுகனூர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருச்சி மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாண்டி, அன்புச்செல்வன், பொன்ராஜ், கந்தவேல் மற்றும் மகாதேவன் உள்ளிட்டோர், மேற்கொண்ட சோதனையில், சுமார் 26 கிலோ புகையிலைப் போதைப் பொருகள் இருந்தது […]
Continue reading …
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், மணப்பாறையில் இன்று கருணாநிதி சிலை திறப்பு. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அழைப்பு. திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மணப்பாறையில் இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவச்சிலை திறப்பு விழா நடக்கிறது. விழாவில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு திறந்து வைக்கிறார். இதுகுறித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திமுக தலைவரின் அறிவுறுத்தலின்படி, […]
Continue reading …