Home » Archives by category » தமிழகம் (Page 89)

2 நாட்கள் சுற்றுப் பயணமாக இன்று பிற்பகல் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.

Comments Off on 2 நாட்கள் சுற்றுப் பயணமாக இன்று பிற்பகல் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.

2 நாட்கள் சுற்றுப் பயணமாக இன்று பிற்பகல் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி. பல்லடம் மாதப்பூரில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் இன்று மாலை மதுரையில் சிறு, குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்கத் திட்ட கருத்தரங்கில் பங்கேற்கிறார். நாளை தூத்துக்குடியில் ₹17,300 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கிவைக்கஉள்ளார். நாளை பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

Continue reading …

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் தலைமையில் நடந்தது.

Comments Off on திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் தலைமையில் நடந்தது.

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் தலைமையில் நடந்தது. தஞ்சையில் எடப்பாடி தலைமையில் நடக்கும் அதிமுக போராட்டம் குறித்த திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அமைப்புசெயலாளர் ரத்தினவேல், முன்னாள் ஆவின் சேர்மன் இன்ஜினியர் கார்த்திகேயன், மாநில பேரவை துணைச் செயலாளர்கள் ஜோதிவாணன், கவுன்சிலர் அரவிந்தன்,மாவட்ட மாணவரணி செயலாளர் என்ஜினீயர் இப்ராம் ஷா,இலக்கிய அணி மாவட்ட செயலாளர் […]

Continue reading …

ஊர் பெயரை மாற்றியதை கண்டித்து மக்கள் போராட்டம்.

Comments Off on ஊர் பெயரை மாற்றியதை கண்டித்து மக்கள் போராட்டம்.

ஊர் பெயரை மாற்றியதை கண்டித்து மக்கள் போராட்டம். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆத்திக்காட்டு விளை ஊரின் பெயரை சீயோன்புரம் என்று மாற்றி உள்ளதை கண்டித்து இன்று அப்பகுதி ஊர்மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்து மகா சபா மாநிலத் தலைவர் தா. பாலசுப்பிரமணியம் தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு-பெயர் மாற்றத்தை உடனடியாக நீக்க வேண்டும் இல்லையென்றால் போராட்டம் தொடரும் என அறிவிப்பு.

Continue reading …

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்.

Comments Off on இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்.

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம். தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி சமவேலைக்கு சம ஊதியம் என்ற அரசாணையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு இடைநிலை ஆசிரியர்கள் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Continue reading …

திருச்சியில் மாணவ,மாணவிகளுக்கான பேச்சு.கட்டுரை போட்டி. திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளர் இன்ஜினியர் இப்ராம் ஷா தலைமை தாங்கினார்.

Comments Off on திருச்சியில் மாணவ,மாணவிகளுக்கான பேச்சு.கட்டுரை போட்டி. திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளர் இன்ஜினியர் இப்ராம் ஷா தலைமை தாங்கினார்.

திருச்சியில் மாணவ,மாணவிகளுக்கான பேச்சு.கட்டுரை போட்டி. பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அல் ஹிதாயத் சிறுவர், சிறுமியர் பெண்கள் மதரஸா சார்பில் திருச்சியில் மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டி நடந்தது. நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளர் இன்ஜினியர் இப்ராம் ஷா தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சரவணன்,வக்கீல் சையத் மதானி அப்துல் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அப்பாஸ் அலி,அப்துல்லா நூரி,முகமது யூசுப் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.முகமது அலி ஜின்னா நிகழ்ச்சிகளை […]

Continue reading …

திருச்சி நாடாளுமன்ற தொகுதியை குறிவைக்கும் அருண் நேரு.

Comments Off on திருச்சி நாடாளுமன்ற தொகுதியை குறிவைக்கும் அருண் நேரு.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியை குறிவைக்கும் அருண் நேரு. அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. இதற்காக கடந்த சில மாதங்களாக நேருவின் ஆதரவாளர்கள் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நேருவின் ஆதரவாளர்கள் ஒரு சிலர் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் அருண் நேரு போட்டியிட வேண்டும் என்றும், மேலும் சிலர் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டுமென்றும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்தநிலையில் திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை கட்டுமான […]

Continue reading …

திருச்சி தென்னூரில் ஓ.பி.எஸ்.அணி சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா.

Comments Off on திருச்சி தென்னூரில் ஓ.பி.எஸ்.அணி சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா.

திருச்சி தென்னூரில் ஓ.பி.எஸ்.அணி சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா. முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அன்னதானம் வழங்கினார். திருச்சி மாநகர் மாவட்ட ஓபிஎஸ் அணி சார்பில் ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி உள்ள மாவட்ட அலுவலகத்தில் அமைப்பு செயலாளரும் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அவைத் தலைவர் வக்கீல் ராஜ்குமார் முன்னிலை […]

Continue reading …

தொகுதி பார்வையாளர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை கூட்டம்!

Comments Off on தொகுதி பார்வையாளர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை கூட்டம்!

திமுக மாவட்டச் செயலாளர்கள், தொகுதிப் பார்வையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ‘தேர்தலுக்குப் பின் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்‘ என்று தெரிவித்துள்ளார். விரைவில் வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், அதிமுக, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட மாநிலக் கட்சிகளும் தொண்டர்களையும் கட்சியையும் தயார்படுத்தி வருவதுடன், வேட்பாளர் அறிவிப்பு, கூட்டணி, தொகுதிப் பங்கீடு ஆகியவற்றை அறிவித்து வருகின்றன. இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள […]

Continue reading …

2 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

Comments Off on 2 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

மழை காலம் மற்றும் குளிர்கால முடிவடைந்து தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் மட்டும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று இரண்டு மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய இரு மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் […]

Continue reading …

ஜெயலலிதாவிடம் பாடம் படித்தவர் எடப்பாடி; பா.வளர்மதி

Comments Off on ஜெயலலிதாவிடம் பாடம் படித்தவர் எடப்பாடி; பா.வளர்மதி

எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் இருந்து பாடம் படித்தவர். தேர்தல் நேரத்தில் எப்படி எல்லாம் அரசியல் யுக்திகளை கையாண்டு வெற்றி பெற வேண்டும் என்று அவருக்கு மட்டுமே தெரியும் என அதிமுக மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி கூறியுள்ளார். இன்று அதிமுக மகளிர் அணி செயலாளர் வளர்மதி செய்தியாளர்களிடம், “தேர்தல் தொடர்பாக அறிவுபூர்வமாக சிந்தித்து முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறந்த முடிவை எடுப்பார். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எம்ஜிஆர் மற்றும் […]

Continue reading …