தமிழக அமைச்சர் துரைமுருகன் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்க கூடாது என மத்திய அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தினார். கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அணை கட்டினால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று விவசாய சங்கங்களும், தமிழக அரசும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழகம் – கர்நாடகா இடையே காவிரி ஆற்றில் தண்ணீரை பங்கிட்டுக்கொள்வது தொடர்பாக பிரச்னை […]
Continue reading …முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 9 மீனவர்கள், அவர்களது படகுகளை உடனடியாக விடுவிக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். நேற்று முன் தினம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 9 மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 22 வரை மட்டும் 250 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில், ஒரு ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட […]
Continue reading …அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் முறைகேடாக பணியில் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். இது குறித்து அவர், “அண்ணா பல்கலையில் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் முறைகேடாக பேராசிரியர்கள் பணியாற்றியது உண்மை தான். 52,500 ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டிய சூழ்நிலையில் 50,500 பேர் பணியாற்றுகின்றனர். மீதமுள்ள 2 ஆயிரம் இடங்களில் 189 ஆசிரியர்கள் முறைகேடாக பணியில் சேர்ந்துள்ளனர். முறைகேடாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். […]
Continue reading …மத்திய அரசு மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு இதுவரை எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளது. கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாவில் அணைக்கட்ட முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேகதாதுவில் அணை கட்டினால், டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், அணைக்கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதனிடையே மேகதாதுவில் அனுமதி கேட்டு மத்திய அரசிடம், கர்நாடகா விண்ணப்பித்து […]
Continue reading …அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி “திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் கொண்டு சேருங்கள், அதிமுகவின் சாதனைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தாலே 2026-ல் அதிமுக ஆட்சி அமைக்க முடியும்” என்று கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களவை தேர்தல் தோல்வி குறித்து தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். அதில் முதல் கட்டமாக 23 மக்களவைத் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மீதமுள்ள தொகுதி நிர்வாகிகளுடன் 2-ம் கட்டமாக, எடப்பாடி பழனிச்சாமி […]
Continue reading …நீதிபதி அபய் எஸ். ஓஹா தலைமையிலான அமர்வில் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது பரபரப்பான வாதம் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி தரப்பில் முதலில் இந்த வழக்கு தொடர்பாகக் கைப்பற்றப்பட்ட பென்டிரைவ் போன்றவற்றில் தனது பங்கு எதுவும் இல்லை என்று கூறுகிறது, அது குறித்து முதலில் உங்கள் பதில் என்ன? -என அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் கேள்வி கேட்டனர். அதற்கு பென் டிரைவ் கைப்பற்றப்பட்டதில் தனது பங்களிப்பு இல்லை என செந்தில் பாலாஜி கூறுவதை […]
Continue reading …முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னமும் தோற்கடித்தவர்களை பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம் என பிரதமர் மோடிக்கு வலியுறுத்தியுள்ளார். முதலமைச்ர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ஒருசில மாநிலங்கள் நீங்கலாகப் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள். தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும் என்று சொன்னீர்கள், நேற்றைய பட்ஜெட் பாஜக ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது. அரசை பொதுவாக நடத்துங்கள், இன்னமும் […]
Continue reading …இன்ஸ்டாகிராமில் வீடியோ மூலம் மாற்றுத்திறனாளிகளை (காதுகேளாதோர்) புண்படுத்தும் வகையில், கேலி செய்து பதிவிட்ட Rohan Cariappa மற்றும் Shaayan Bhattacharya ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு காது கேளாதோர் வாய்பேசாதோர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். வீடியோவில் சைகை மொழிபெயர்ப்பாளர் ஒருவர் பொழுதுபோக்கு என்ற போர்வையில் புண்படுத்தும் சைகைகளை செய்வதாகவும் தகாத மொழியை பயன்படுத்துவதாகவும் அந்த செயல் காது கேளாதோர் சமூகத்தை மிகவும் அவமதிக்கும் செயலாகும் என்றும் அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். […]
Continue reading …நடிகர் பிரகாஷ்ராஜ் ஆந்திரா, பீகாரை தவிர மற்ற மாநிலங்களுக்கு அல்வா தான் என்று மத்திய பட்ஜெட் குறித்து விமர்சித்துள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024- 25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு திட்டங்களை அறிவித்தார். மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநில வளர்ச்சிக்கு ரூ.15,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் பீகாரில் புதிய சாலைகள் அமைப்பது உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.26,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார். இந்த அறிவிப்பைத் […]
Continue reading …அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் தமிழகத்திற்கான புதிய திட்டங்களும், நிதி ஒதுக்கீடு தொடர்பான எந்த அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை. பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ஒட்டு மொத்த இந்தியாவையும் சமநிலையுடன் ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட் இல்லை. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்தவிதமான […]
Continue reading …