
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் சர்வதேச, தேசிய மற்றும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஊக்க தொகைக்கான காசோலை மற்றும் 3 சதவீத விளையாட்டு வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டிற்கு கீழ் 4 வீராங்கனைகளுக்கு அரசு பணி ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி […]
Continue reading …
தேமுதிக வாய்ப்பு கிடைத்தால் திமுகவோ, அதிமுகவோ யாருடனாவது கூட்டணி வைப்போம் என்று தெரிவித்துள்ளது. விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரமாகி உள்ளது. திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இத்தேர்தலில் தனித்தனியே களம் காணும், அதிமுகவும், பாஜகவும், பாமக, தேமுதிக உள்ளிட்ட மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தேமுதிக எந்த பக்கம் செல்லும் என்பது இதுவரைக்கும் புரியாத புதிராக […]
Continue reading …
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தந்தை முத்தூர்.சா.பெருமாள்சாமி மறைவையொட்டி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அச்செய்தியில், “தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரும் கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான மு.பெ.சாமிநாதனின் அருமைத் தந்தை முத்தூர். சா.பெருமாள்சாமி மறைந்த செய்தியறிந்து வருந்தினேன். தந்தையை இழந்து தவிக்கும் மு.பெ.சாமிநாதனை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன். அப்போது, 94 ஆண்டுகளைக் கடந்து நிறைவாழ்வு வாழ்ந்த தன் தந்தை, அவரது […]
Continue reading …
டெல்லியில் விவசாயிகள் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, திருச்சியில் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம். ஏராளமானோர் பங்கேற்பு. ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு திருச்சி மாவட்டம் சார்பில் இன்றுதிருச்சி ஜங்ஷன் வழிவிடு முருகன் கோவில் அருகாமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. டெல்லியில் அறவழியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி விவசாயி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் அயிலை.சிவசூரியன், ஜனநாயக […]
Continue reading …
தேனி காட்ரோடு அருகே விபத்து. விரைந்து உதவிய தேனி எம்.பி ரவுந்திரநாத். தேனி மாவட்டம் பெரியகுளத்திலிருந்து தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் சோழவந்தான் தொகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைப்பதற்காக சென்று கொண்டிருந்தார். காட்ரோடை தாண்டி செல்லும்போது பரசுராமபுரம் அருகே ஆட்டோ ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி சாலையில் ஒருவர் ரத்தவெள்ளத்தில் கிடந்தார். இதனை பார்த்த எம்.பி உடனடியாக தனது காரை நிறுத்தி வேகமாக இறங்கி சென்று விசாரித்தார். அதில் விபத்துக்குள்ளானவர் ஜி.கல்லுப்பட்டி வினோபா நகரை […]
Continue reading …
தற்போது தமிழகத்தில் அரிசியின் விலை கடும் உயர்வால் மக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர். அரிசியின் விலை கடந்த சில நாட்களில் கிலோவுக்கு ரூ.17 வரை உயர்ந்துள்ளதாகவும், இதையடுத்து சென்னையில் ஏற்கெனவே கிலோ 60க்கு விற்பனையாகும் அரிசி தற்போது ரூ.68 ஆக உயர்ந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாகவே அரிசி விலை அதிகரித்துள்ளது. அரிசியின் விலை தற்போதைக்கு குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே பால், பெட்ரோல், சமையல் எரிவாயு விலை […]
Continue reading …
அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் விஜய் நேரில் வந்து கேட்டுக் கொண்டாலும் அவருக்கு அரசியல் ஆலோசனை கூற மாட்டேன் என கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் நேரம் நெருங்கிவிட்டால் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட அரசியல் ஆலோசகர்களுக்கு மவுசு அதிகமாகிவிடும். பல அரசியல் கட்சிகள் அவர்களை அணுகி கோடிகளில் பணத்தை கொட்டி கொடுத்து ஆலோசனை பெற்றுக் கொள்வார்கள். வரும் 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் விஜய் கட்சி போட்டியிட இருக்கும் நிலையில் அவருக்கு பிரசாந்த் கிஷோர் […]
Continue reading …
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக இணைவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் அன்புமணிக்கு அமைச்சர் பதவி தர பாஜக ஒப்பு கொண்டுள்ளதால் இரு கட்சிகளும் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. அதிமுக கூட்டணியில் பாமக இணையும் என்று கூறப்பட்டது. ஆனால், திடீர் திருப்பமாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அன்புமணியிடம் நேரடி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அப்போது இந்த முறை பாமகவுக்கு கண்டிப்பாக ஒரு மத்திய அமைச்சர் பதவி தருகிறோம் எங்களுடன் கூட்டணிக்கு வாருங்கள் […]
Continue reading …
இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய பயணம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. கடந்த சில மாதங்களில் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்திற்கு வருகை தந்து கொண்டிருக்கிறார். அடுத்த கட்டமாக பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் தமிழகத்திற்கு வருகிறார். பிப்ரவரி 27ம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபின், 28ம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் நடைபெறும் […]
Continue reading …
சௌந்தரராஜன் -கல்யாணி தம்பதியினர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பெரியார் நகர் 5ஆம் வீதியில் வசித்து வந்தார்கள். சௌந்தரராஜன் பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிகல் காண்ட்ராக்ட் எடுத்து ஆட்களை வைத்து வேலை செய்து வந்துள்ளார். அவரது மனைவி கல்யாணி பள்ளிக்கூடத்தில் சத்துணவு அமைப்பாளராக உள்ளார். இவர்களுக்கு ராஜி என்ற ஒரே பெண் குழந்தை பிறந்துள்ளது. ராஜியை 2008ல் பள்ளத்தூர் ராஜேஸ்வரன் என்பவரின் மகன் சக்கரவர்த்திக்கு ஆடம்பரமாக சகல வசதிகளும் செய்து கொடுத்து திருமணம் செய்து வைத்துள்ளார். தற்போது இவர்களுக்கு இரண்டு […]
Continue reading …