Home » Archives by category » தமிழகம் (Page 96)

அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் குடும்பத்தினர்!

Comments Off on அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் குடும்பத்தினர்!

அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் குடும்பத்தினர்! திருச்சி புத்தூர் பகுதியில் தங்கள் இல்லத்திலேயே 10 ஆண்டுகளுக்கு மேலாக பசிப்பிணியை போக்கும் வகையில் அனுதினமும் அன்னதானமும், மேலும் 100 புழங்கு பொருட்களை வைத்து பாரம்பரியம் காக்க புழங்கு பொருட்கள் காட்சியகமும், 1000 அனாதை பிணங்கள் நல்லடக்க பணியிலும், 10000 நூல்கள் கொண்டு அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகமும் நடத்தி வருகிறார். அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான யோகா ஆசிரியர் விஜயகுமார், இவருக்கு உறுதுனையாக, […]

Continue reading …

பெண்களின் நீதி என்ற தலைப்பில் மகளிர் காங்கிரஸ் மாநாடு.

Comments Off on பெண்களின் நீதி என்ற தலைப்பில் மகளிர் காங்கிரஸ் மாநாடு.

திருச்சி அருணாசலம் மன்றத்தில் பெண்களின் நீதி என்ற தலைப்பில் மகளிர் காங்கிரஸ் மாநாடு. மாவட்டத் தலைவர்கள் பங்கேற்பு. திருச்சி மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் அருணாச்சலம் மன்றத்தில் பெண்களின் நீதி என்ற தலைப்பில் மகளிர் காங்கிரஸ் மாநாடு நடந்தது. திருச்சிமாநகர் மாவட்ட காங்கிரஸ் மகளிர் அணி தலைவி ஷீலா செலஸ் , தெற்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி கமலா கோவிந்தராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். பெண்களுக்கு நீதி வேண்டும் என்ற தலைப்பில் மகளிர் காங்கிரஸ் சார்பில் […]

Continue reading …

குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி:

Comments Off on குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி:

குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி: பாராளுமன்றதேர்தலில்போட்டியிட புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். சோனியா ,ராகுல் கார்கேவுக்கு காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எம்.பி., ராகுல் காந்தி எம்.பி. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்கே ஆகியோருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம்.சரவணன் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஒருவருக்கு அல்லது […]

Continue reading …

திருச்சி அதிமுக கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேச்சு.

Comments Off on திருச்சி அதிமுக கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேச்சு.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபட வேண்டும். திருச்சி அதிமுக கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேச்சு. திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக சார்பில் மலைக்கோட்டை பகுதி கீரைக்கடை பஜார் பகுதியில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுதி செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன், மாவட்ட துணைச் செயலாளர் வக்கீல் வனிதா, மாணவரணிமாவட்ட செயலாளர் என்ஜினியர் இப்ராம்ஷா, எம்ஜிஆர் மன்ற […]

Continue reading …

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் ஆணையராக திரு. வே.சரவணன் இ.ஆ.ப., பொறுப்பேற்றார்

Comments Off on திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் ஆணையராக திரு. வே.சரவணன் இ.ஆ.ப., பொறுப்பேற்றார்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் ஆணையராக திரு. வே.சரவணன் இ.ஆ.ப., பொறுப்பேற்றார்.   திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராக தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் இணை நிருவாக இயக்குனராக பணியாற்றிய திரு.வே.சரவணன்,இ.ஆ.ப., அவர்களை பணி மாறுதல் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவின்படி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (15.02.2024) ஆணையராக பொறுப்பேற்றுள்ளார். புதியதாக பொறுப்பேற்ற ஆணையர் அவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகர மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும் முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவேன் தெரிவித்துள்ளார்.

Continue reading …

அதிமுகவுடன் ஜி.கே.வாசன் பேச்சுவார்த்தை தோல்வி!

Comments Off on அதிமுகவுடன் ஜி.கே.வாசன் பேச்சுவார்த்தை தோல்வி!

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் அதிமுகவை எப்படியாவது பாஜக கூட்டணிக்கு கொண்டுவர தீவிர முயற்சி செய்தார். அதிமுக பிடிவாதமாக பாஜகவுடன் கூட்டணியில்லை என உறுதிபட கூறிவிட்டது. அடுத்த கட்டமாக பாஜக கூட்டணியில் ஜிகே வாசனின் தமாக கட்சி இணைய இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப் போவதாகவும் அதையடுத்து மேலும் சில நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல் கட்டமாக பாட்டாளி மக்கள் கட்சியை பாஜக கூட்டணிக்கு கொண்டுவரும் முயற்சியை ஜிகே வாசன் எடுப்பார் என்றும் அதன் […]

Continue reading …

தேர்தலால் கவனிப்பாரற்றிருக்கும் வேங்கைவயல் விவகாரம்?

Comments Off on தேர்தலால் கவனிப்பாரற்றிருக்கும் வேங்கைவயல் விவகாரம்?

சமூக ஆர்வலர்கள் வேங்கை வயல் விவகாரம் நடந்து 415 நாட்களாகியும் இன்னும் குற்றவாளி கண்டுபிடிக்கப்படாத நிலையில் தேர்தல் காரணமாக அரசியல் கட்சிகளும் இவ்விவகாரத்தை கண்டுகொள்ளவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் பகுதியில் உள்ள கிராமத்தில் உள்ள குடிநீர் தேக்க தொட்டியில் மலம் கலந்த சம்பவம் நடந்தது. இதையடுத்து 5 பிரிவுகளின் மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. ஆனால், இன்று வரை குற்றவாளிகள் […]

Continue reading …

மருதமலை கோவில் பாதையில் சிறுத்தை நடமாட்டம்!

Comments Off on மருதமலை கோவில் பாதையில் சிறுத்தை நடமாட்டம்!

வனத்துறை கோவை அருகே உள்ள மருதமலை முருகன் கோவில் பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பக்தர்களை எச்சரித்துள்ளது. அறுபடை வீடுகளுக்கு நிகரான முருகனின் வழிபாட்டு ஸ்தலமாக கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை முருகன் கோவில் உள்ளது. ஏராளமான பக்தர்கள் தினம்தோறும் மருதமலை முருகனை தரிசிக்க வந்த செல்கின்றனர். கந்த சஷ்டி மற்றும் கார்த்திகையை முன்னிட்டு மருதமலை முருகன் கோவில் செல்வோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மருதமலை கோவில் பாதையில் சிறுத்தை ஒன்று நடமாடுவது அங்கிருந்த கேமராக்களில் பதிவாகியுள்ளது. […]

Continue reading …

சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!

Comments Off on சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!

இன்று நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி உள்ளது. இதற்காக பொதுத் தேர்வு எழுத மாணவர்கள் தயாராகி வருகின்றனர். இன்று முதல் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடக்கம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இன்று நாடு முழுவதும் சுமார் 39 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பொது தேர்வை எழுதுகின்றனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் காலை 10 மணிக்கு முன்பே தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் என சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது. மேலும் […]

Continue reading …

திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாட்டில் சிக்கல்!

Comments Off on திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாட்டில் சிக்கல்!

ஊடகங்களில் திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்து காரசாரமான விவாதங்கள் நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஐந்து தொகுதிகள், புதுவையை சேர்த்து ஆறு தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்பதை திமுக பிடிவாதமாக இருப்பதால் காங்கிரஸ் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த முறை கொடுத்த 10 தொகுதியாவது கொடுக்க வேண்டும் என்றும் கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது பாராளுமன்றத் […]

Continue reading …