நடிகர் ஆரி அர்ஜுனன், தனது அம்மாவின் நினைவை போற்றும் வகையில் மறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை மூலமாக, எளிய வர்க்கத்தின் பின்னணியிலிருந்து பணியாற்றும் பெண்கள் 10 பேரை சந்தித்து வாழ்த்துக்கூறியதுடன், அவர்களுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்டாக தங்க நாணயம் பரிசளித்தார். நடிகர் ஆரி அர்ஜுனன் இயற்கை சார்ந்த விவசாயம், இயற்கை உணவுகள், சமூகத்திற்கான உதவிகள் என தொடர்ந்து, சமூக அக்கறையுடன் பணியாற்றி வருகிறார். தன் அன்னையின் நினைவாக மகளிரை கொண்டாடும் வகையில் அவர்களுக்கு பரிசளித்திருப்பதை, மக்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். […]