அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலை ஏழு ஜென்மம் எடுத்து வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என பேசியுள்ளார். பாஜக பிரபலங்கள் மற்றும் அதிமுகவுக்கும் இடையே சமீபகாலமாக வாய் சண்டை தீவிரமடைந்துள்ளது. சமீபத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசியிருந்தார். இந்த விமர்சனம் அதிமுகவினர் இடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்களிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “அதிமுக மாபெரும் இயக்கமாகும். அதை அழிக்க யாராலும் முடியாது. கருணாநிதியாலேயே […]
அண்ணாமலை அரசியல் தலைவர்களை பற்றி பேசும்போது கடுமையான வார்த்தைகளால் பேசக்கூடாது என தமிழிசை சௌந்தரராஜன் அறிவுரை கூறியுள்ளார். அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன் அதிரடியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு பதிலடி தரும் வகையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் உட்பட பலர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அண்ணாமலையின் பேச்சு பாஜக வட்டாரத்திலேயே அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக முன்னாள் புதுவை […]
Continue reading …அண்ணாமலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து சர்ச்சைக்குரிய வார்த்தைகள் பேசியதை கண்டித்து அதிமுகவினர் அவருடைய உருவ படத்தை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணாமலை “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி சாமி தவழ்ந்து சென்று பதவியை வாங்கினார்” என்று கூறினார். அவருடைய உருவ பொம்மை பொம்மையை கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே அதிமுகவினர் எரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி குறித்து அண்ணாமலை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து வருவதாக அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். அதிமுக […]
Continue reading …தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக தலைமையில் மாமன் மச்சான் கூட்டணி அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் பாஜக ஆட்சி வரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக பங்காளி கட்சிகள் தான், ஆனால் அந்த பங்காளிகளுடன் நாங்கள் ஒருபோதும் சேரப் போவது கிடையாது. பாஜக தலைமையில் மாமன் மச்சான் கூட்டணி அமைக்கப்படும். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கூட்டணிக்கு அழைத்தால் அவருடன் கூட்டணி வைப்போம். […]
Continue reading …தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் ஜெய் ஸ்ரீ ராம் மற்றும் முருகனுக்கு அரோகரா என சொல்வார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “இந்துக்கள் விரும்பும் கடவுளை வழிபட அனைத்து சுதந்திரமும் தமிழ்நாட்டில் உள்ளது. பக்தர்களின் வழிபாட்டு உரிமையில் திமுக அரசு தலையிடாது. ஜெய் ஸ்ரீ ராம் என்றாலும் ஏற்றுக் கொள்வோம், […]
Continue reading …6 மாதத்தில் ரூபாய் 6.5 கோடியில் கொள்ளிடம் ஆற்றின் இடையில் கட்டப்பட்ட தடுப்பணை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வடிவேலுவின் கிணற்றை காணவில்லை என்ற மீம்ஸை வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். பொதுமக்கள் கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணை ஆறு மாதத்தில் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருச்சி அருகே காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் மண்ணரிப்பால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நெடுஞ்சாலை துறை சார்பில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு புதிய […]
Continue reading …தமிழக மீனவர் ஒருவர் ராமேஸ்வரம் மீனவர்கள் சென்ற படகு மீது இலங்கை கடற்படையின் கப்பல் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது, “இலங்கை கடற்படையால் ஆழ்கடலில் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். நேற்று 359 மீன்பிடிக் கப்பல்கள் அனுமதிச் சீட்டு பெற்று கடலுக்குள் சென்றன. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் […]
Continue reading …தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புதிய ஊழல் பாதையை அமைத்துக் கொடுப்பதில், திமுக தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது என கூறியுள்ளார். இதுகுறித்து அவர், “ஊழலுக்கான புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்து, தனது இந்தி கூட்டணிக் கட்சிகளுக்குப் புதிய ஊழல் பாதையை அமைத்துக் கொடுப்பதில், திமுக தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. கடந்த காலங்களில், மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கான மாணவர்களின் தகுதிப் பட்டியலைக் கொடுத்து, கட்சிக்கு நன்கொடை வாங்கும் வழியை அறிமுகப்படுத்திய திமுக, இப்போது நன்கொடை வசூலிப்பதில் புதிய உயரத்துக்குச் சென்றுவிட்டனர். […]
Continue reading …தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுங்கட்சியின் அதிகாரப் பசிக்கு, தமிழகக் காவல்துறையை இரையாக்கும் போக்கை, திமுக இனியாவது கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அண்ணாமலை இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “மதுரையில் தொடர்ந்து வயது முதிர்ந்த பெண்களைக் குறிவைத்துக் கொலை செய்யும் போக்கு அதிகரித்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே மூன்று வயதான தாய்மார்கள் கொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில், இன்றும் 70 வயதான திருமதி. முத்துலட்சுமி என்பவர் கொலை செய்யப்பட்டிருப்பது, தமிழகத்தில் […]
Continue reading …பாஜக தலைவர் அண்ணாமலை கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் தன் மீது குற்றம் சுமத்திய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளரிடம் அவர், “புதிய கல்விக் கொள்கையில் இந்தி கட்டாய மொழி இல்லை, அது ஆப்ஷனலாக மாற்றப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை அறிவித்த பின்னர்தான் தமிழ் மொழியை பயிற்று மொழி என திமுக அரசு அறிவித்தது. இந்தி திணிப்பை எதிர்க்கும் திமுக, ஏன் உருது திணிப்பை எதிர்க்கவில்லை? […]
Continue reading …