ஊட்டச்சத்து மாதம், விடுதலையின் அம்ரித் மகோத்ஸவம் மற்றும் கொவிட்-19 தடுப்பூசி விழிப்புணர்வு குறித்த ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு நிகழ்ச்சியை, தர்மபுரி கள விளம்பர அலுவலகம் மற்றும் கரிமங்கலம் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் திட்டம் ஆகியவை இணைந்து நாளை (09.09.2021) நடத்துகின்றன. தர்மபுரி துணை கலெக்டர் சித்ரா விஜயன் ஐஏஎஸ், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். இங்கு எல்.இ.டி. பிரச்சார வாகனத்தையும் சித்ரா விஜயன் தொடங்கி வைக்கிறார். இந்த வாகனம், தர்மபுரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு பயணம் […]